Published:Updated:

வி.ஐ.பி டின்னர் - ஜெயக்குமார்

வி.ஐ.பி டின்னர் - ஜெயக்குமார்
பிரீமியம் ஸ்டோரி
வி.ஐ.பி டின்னர் - ஜெயக்குமார்

புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் சிறுசேமிப்புக் கழகத் துணைத் தலைவராக இருந்தபோது, என் அப்பா மாநகராட்சியின் சார்பில் அதில் உறுப்பினராக இருந்தார்.

வி.ஐ.பி டின்னர் - ஜெயக்குமார்

புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் சிறுசேமிப்புக் கழகத் துணைத் தலைவராக இருந்தபோது, என் அப்பா மாநகராட்சியின் சார்பில் அதில் உறுப்பினராக இருந்தார்.

Published:Updated:
வி.ஐ.பி டின்னர் - ஜெயக்குமார்
பிரீமியம் ஸ்டோரி
வி.ஐ.பி டின்னர் - ஜெயக்குமார்
பாட்டுப் பாடுவது முதல் பாக்ஸிங் பண்ணுவது வரை அரசியல் தாண்டி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஏகப்பட்ட அவதாரங்கள் உண்டு. கடற்கரைப் பகுதியைப் பூர்வீகமாகக்கொண்டவருக்கு மீன் உணவுதான் மோஸ்ட் ஃபேவரைட். அவர், டின்னர் கொடுக்க விரும்பும் ஐந்து நபர்களையும் அதற்கான காரணங்களையும் கேட்டறிந்தோம்!

அண்ணாவுக்கு வான்கோழி பிரியாணி

``அறிஞர் அண்ணாமீது மிகுந்த பக்தியும் பாசமும் உடையவர் என் அப்பா. என் அப்பாவை கவுன்சிலராக்கியதோடு மட்டுமல்லாமல் மண்டலக்குழு, கல்விக்குழு உள்ளிட்ட பல குழுக்களுக்கும் தலைவராக்கினார். பொதுக்கூட்டங்களுக்கு வரும்போது என்னையும் கையில் தூக்கிவைத்திருந்திருக்கிறார் அண்ணா. அண்ணாவுக்கு வான்கோழி பிரியாணி என்றால் மிகவும் பிடிக்கும். தி.மு.கழகம் தொடங்கப்பட்ட ராயபுரத்தில் அண்ணாவுக்குப் பிடித்த வான்கோழி பிரியாணி சமைத்துக் கொடுப்பேன். ‘திராவிட இயக்கத்தை ஆட்சிக்கட்டிலில் அமர்த்தி, இரண்டு ஆண்டுகளுக்கும் குறைவான ஆட்சியிலேயே பல சாதனைகளைப் புரிந்த அண்ணா, நீங்கள் இன்னும் பல ஆண்டுகள் ஆட்சிபுரிந்து, பல சாதனைகளைப் படைத்திருக்கலாம்’ என்று மனமாரச் சொல்வேன்!’’

எம்.ஜி.ஆருக்குக் கருவாட்டுக் குழம்பு

``புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் சிறுசேமிப்புக் கழகத் துணைத் தலைவராக இருந்தபோது, என் அப்பா மாநகராட்சியின் சார்பில் அதில் உறுப்பினராக இருந்தார். அதற்கு முன்பாகவே தலைவருடன் அப்பாவுக்கு அறிமுகம் இருந்தாலும், அப்போதுதான் நெருங்கிப் பழகினார்கள். அப்போது 10 வயது சிறுவனாக இருந்த என்னிடம், தினமும் தலைவரைப் பற்றி அப்பா பேசிக்கொண்டேயிருப்பார். இட்லி, தோசையுடன் கருவாட்டுக் குழம்பு ஊற்றிச் சாப்பிடுவது தலைவருக்கு மிகவும் பிடிக்கும். விதவிதமான கருவாடு, மீன், நாட்டுக்கோழி வறுவல் சமைத்து தலைவருக்குக் கொடுப்பேன். மீனவ நண்பனான தலைவருக்கு, மீனவர் பகுதியான காசிமேட்டில் வைத்துச் சாப்பாடு பரிமாறுவேன். அப்போது அவர் நடித்து எனக்குப் பிடித்த பாடல்களைப் பாடிக் காண்பிப்பேன். குறிப்பாக, ‘அச்சம் என்பது மடமையடா’ பாடலைப் பாடுவேன்!’’’

வி.ஐ.பி டின்னர் - ஜெயக்குமார்

அம்மாவுக்கு விரால் மீனும் ஐஸ்க்ரீமும்

``விட்டில்பூச்சியான ஜெயக்குமாரை உலகறியச் செய்தவர் புரட்சித்தலைவி அம்மாதான். தேர்தல் காலங்களில் அறிக்கை எழுதும்போது, அம்மாவுடன் வீட்டில் சாப்பிடும் பாக்கியம் எனக்குக் கிடைத்திருக்கிறது. நான் சீக்கிரமாகச் சாப்பிடுவதைப் பார்த்து, ‘இன்னும் நிறைய ஐட்டம் இருக்கு, நல்லாச் சாப்பிடுங்க ஜெயக்குமார்’ என்று அம்மா சொன்னதை என் வாழ்க்கையில் மறக்கவே முடியாது. அம்மாவுக்கு விரால் மீன் குழம்பு ரொம்ப இஷ்டம். ஸ்வீட், ஐஸ்க்ரீம் அம்மாவுக்குப் பிடித்தாலும், அவரின் ஆரோக்கியம் கருதி நான் அளவாகத்தான் கொடுப்பேன். ஃபிங்கர் சிப்ஸ் அம்மா விரும்பிச் சாப்பிடுவாங்க. ராயபுரத்தில் என் பாரம்பர்ய வீட்டில் விருந்து கொடுக்கும்போது அம்மாவிடம், ‘நான் ஒவ்வொரு நாளும் சாப்பிடும்போதும் உங்களைத்தாம்மா நினைப்பேன். என்னுடைய இந்தச் சாப்பாடு நீங்க கொடுத்தது’ என்று சொல்வேன்!’’

நாவலருக்கு நண்டும் இறால் தொக்கும்

``நான் மிகவும் மதிக்கக்கூடிய மனிதர் நாவலர். 1996-ல் மேயர் வேட்பாளராக நாவலர் பெயரைச் சிலர் சொல்ல, “என்னைவிட ஜெயக்குமார்தான் தகுதியானவர்” எனச் சொன்னவர் அண்ணன் நாவலர். அவர் வீட்டில் நான் பலமுறை சாப்பிட்டிருக்கிறேன். நான்வெஜ் உணவுகளை நன்றாகச் சாப்பிடுவார். சிக்கன், மட்டனைவிட அவருக்கு நண்டு, இறால் போன்ற கடல் உணவுகள் என்றால் கொள்ளைப் பிரியம். சாப்பிடும்போது, பயங்கரமாக ஜோக் அடிப்பார். நான் கொடுக்கும் விருந்தின்போது “எப்போதும் நான் உங்க தம்பி, உங்க பாசத்துக்கு அடிமை” என்று அவரிடம் சொல்வேன்!’’

ஹெச்.வி.ஹண்டேவும் மைசூர் போண்டா கிச்சடியும்

``நான் மிகவும் மதிக்கக்கூடிய இன்னொரு மனிதர், மருத்துவர் ஹெச்.வி.ஹண்டே. நான் இளைஞனாக இருந்த காலத்தில், அவர் வீட்டுக்கு அடிக்கடி போவேன். எந்தவித பந்தாவும் இல்லாமல், அவர்கள் வீட்டில் ஒரு பிள்ளையாகத்தான் என்னை கவனிப்பார். வாழ்க்கையில் முதன்முதலாக, அமைச்சர் ஒருவரின் காரில் நான் பயணித்தேன் என்றால், அது அவரின் கார்தான். அவர் சைவ உணவுகளைத்தான் விரும்பிச் சாப்பிடுவார். அவருக்கு, மைசூர் போண்டா, கிச்சடி போன்ற விதவிதமான உணவுகளைத் தயார்செய்து என் வீட்டில் விருந்து கொடுப்பேன். அவரிடம், “நான், உங்களை மாதிரியே இளமையை அப்படியே மெயின்டெயின் பண்ணிட்டு வர்றேன்” என்று சொல்வேன்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism