
``அ.தி.மு.க ஆட்சியில் அணில், காகம், குருவிகள் மின்கம்பியில் நின்றன. ஆனால், மின்வெட்டு ஏற்படவில்லை. தி.மு.க ஆட்சியில் மட்டும் மின்கம்பியில் அணில்கள் ஓடுவதால் மின்சாரம் தடைபடுகிறது. இ.பி.எஸ் ஆட்சி வேண்டாம் என்ற மக்கள், தற்போது யூ.பி.எஸ்-ஸைத் தேடுகிறார்கள்!’’
- ராஜேந்திர பாலாஜி, முன்னாள் அமைச்சர்

``மின்சாரத் தட்டுப்பாடு, வேலையின்மை, விவசாயிகள் பிரச்னை, விலைவாசி உயர்வு... வேகமாக வளர்ந்துவரும் ஒரு நாட்டின் பொருளாதாரத்தை எப்படி அழிப்பது என்பதைத் தெரிந்துகொள்வதற்கான ஓர் ஆய்வுப் பாடம்தான், பிரதமர் மோடி தலைமையிலான எட்டு ஆண்டுக்கால ஆட்சி!’’
- ராகுல் காந்தி, காங்கிரஸ் எம்.பி.

``இந்தியாவில் பா.ஜ.க அரசின் அரசியல் அழுத்தங்களால், இதுவரை இல்லாத நெருக்கடிகளை இஸ்லாமிய மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர், பொறுமையாக. இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு எதிரான அரச பயங்கரவாதத்தின் சின்னமாக புல்டோசர் மாறியிருக்கிறது. நாங்கள் அமைதியான வழியில் போராட்டத்தைத் தொடருவோம்!’’
- மெகபூபா முஃப்தி, ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர்

``நாட்டில் அதிகம் பேசப்படும் மொழி இந்தி என்பது எனக்குப் புரிகிறது. அதேசமயம் உலகத்தின் மூத்த மொழி தமிழ் என்பதை நாம் அறிவோமா... மக்கள் எந்த மொழி பேச விரும்புகிறார்களோ, அதைப் பேசவிடுங்கள்!’’
- சோனு நிகம், பாடகர்

``பிரதமர் நரேந்திர மோடி, சம்ஸ்கிருதத்தைக் காட்டிலும் தமிழ்மொழி உயர்ந்தது எனப் பேசியிருக்கிறார். எனவே, இந்தியையும் சம்ஸ்கிருதத்தையும் மத்திய அரசு திணிக்கிறது எனக் கூறுவது தவறு!’’
- சி.பி.ராதாகிருஷ்ணன், பா.ஜ.க தலைவர்

``தமிழ் மொழிதான் இணைப்பு மொழியாக இருக்க வேண்டும். மொழி குறித்த பிரச்னையில் நான் ஏ.ஆர்.ரஹ்மான் கட்சி!’’
- மாஃபா பாண்டியராஜன், முன்னாள் அமைச்சர்