Published:Updated:

``திராவிட மாடலை ஒழித்துக்கட்ட தமிழகம் முழுவதும் பாஜக களமிறங்கும்" - வேலூர் இப்ராஹிம்

வேலூர் இப்ராஹிம் பேட்டி

திராவிட மாடலை ஒழித்துக்கட்ட பாஜக தமிழகம் முழுவதும் களமிறங்கும் என பாஜக சிறுபான்மையினர் அணி தேசியச் செயலாளர் வேலூர் இப்ராஹிம் பேட்டியளித்துள்ளார்.

``திராவிட மாடலை ஒழித்துக்கட்ட தமிழகம் முழுவதும் பாஜக களமிறங்கும்" - வேலூர் இப்ராஹிம்

திராவிட மாடலை ஒழித்துக்கட்ட பாஜக தமிழகம் முழுவதும் களமிறங்கும் என பாஜக சிறுபான்மையினர் அணி தேசியச் செயலாளர் வேலூர் இப்ராஹிம் பேட்டியளித்துள்ளார்.

Published:Updated:
வேலூர் இப்ராஹிம் பேட்டி

விருதுநகரில் பாஜக கிழக்கு மாவட்டச் செயலாளர் பாண்டுரங்கன் தலைமையில் அக்கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக சிறுபான்மையினர் அணியின் தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேட்டியளிக்கையில்,

"தமிழகத்தில் தி.மு.க-வின் ஓராண்டு ஆட்சியில் மக்கள் மிகப்பெரிய சிரமங்களை அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள். திமுக-வின் ஓராண்டு ஆட்சி என்பது மிக மோசமான, தமிழகத்தை பாழ்படுத்தக்கூடிய ஆட்சியாக இருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. தி.மு.க-வும் மின்வெட்டும் பிரிக்க முடியாத அளவுக்கு உள்ளன. மாணவர்கள் முதல் தொழிற்சாலைகள் வரை மின்வெட்டு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மின்வெட்டு பற்றி மக்களிடம் எடுத்துக் கூறினால் வழக்கு போடுவதாக அமைச்சர் மிரட்டுவதுதான் தி.மு.க-வின் ஜனநாயகமா?

வேலூர் இப்ராஹிம் பேட்டி
வேலூர் இப்ராஹிம் பேட்டி

தமிழ்நாட்டில் தி.மு.க-ஆட்சி அமையும்போதெல்லாம் இந்து மதத்தை இழிவுப் படுத்துகிறார்கள். பட்டினப்பிரவேசம் என்பது காலங்காலமாக இருக்கக்கூடிய ஆதீன சைவ மடங்களின் ஒரு நம்பிக்கை. அதை இந்த அரசு தடை செய்திருக்கிறது. பா.ஜ.க-வின் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் அழுத்தத்தால்தான் பட்டினப் பிரவேசத்துக்கான தடையை தி.மு.க அரசு நீக்கியுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தற்போது தமிழகத்தில் தி.மு.க-வுக்கும் இறை நம்பிக்கை உள்ளவர்களுக்கும்தான் போர் நடைபெற்றுவருகிறது. அதேபோல் தி.மு.க-வுக்கும், ஊழலை எதிர்க்கக்கூடிய பா.ஜ.க-வுக்கும்தான் ஜனநாயகப் போர் நடந்து கொண்டிருக்கிறது. இந்தப் போரில் பா.ஜ.க நிச்சயம் வெல்லும். பா.ஜ.க என்பது அனைத்து மதங்களையும் சமநிலையில் பார்க்கக்கூடிய கட்சி. சட்டப்பேரவையில் தமிழ்நாடு காவல்துறை மீதான மானியக் கோரிக்கை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. காவலர்களுக்கு தி.மு.க கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாததால் தற்போது காவலர்கள் மன அழுத்தம் ஏற்பட்டு தற்கொலை செய்யும் நிலை உள்ளது. தி.மு.க-வின் இறைநம்பிக்கையற்ற நிலையை மக்கள் மீது திணிப்பதுதான், திராவிட மாடல் என்றால் அந்தத் தீய மாடலை ஒழித்துக்கட்ட பா.ஜ.க தமிழகம் முழுவதும் களமிறங்கும்.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

திராவிட மாடல் என்று சொல்வதால் தமிழகம் வளர்ச்சியடைந்துவிட்டதா... புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை என்பது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு மருத்துவமனை அங்கு நாட்டின் பெரும்பாலான பகுதிகளிலிருந்து வது மருத்துவர்கள் பணிபுரிகிறார்கள் என்பதால் அங்கு பல மொழிகள் பேசப்படும். அதில் இந்தியும் பேசுகிறார்கள். இந்தி மொழியைப் பொறுத்தவரை தமிழகத்தில் மட்டும்தான் எதிர்ப்பு இருக்கிறது. பிற மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆங்கில மொழியை அடிமை மொழியாகத்தான் கருதுகிறோம். இந்திய நாட்டின் தேசிய மொழியான இந்தியைக் கற்பது பாவமா... மேலும், இந்தி மொழியை யாரும் திணிக்கவில்லை. இந்தி மொழி அவசியம். தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளைத் தவிர மற்ற எல்லா பள்ளிகளிலும் இந்தி மொழியைக் கற்பித்துக்கொண்டிருக்கிறார்கள். நாட்டில் அனைவரும் இந்தியைக் கற்பதன் மூலம் மொழிரீதியான ஓர் அறிவைப் பெறலாம். அதேசமயம் தமிழ்மொழிதான் மூத்த மொழி என்பதே பிரதமர்கூட ஏற்றுக்கொண்டிருக்கிறார்.

அரசியல் பேதமில்லாமல், காழ்ப்புணர்ச்சி இல்லாமல் ஒரு மொழி அறிவை மக்கள் பெற வேண்டும் என்பதற்காக தி.மு‌.க. நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமே தவிர, பொய்யான விஷயங்களைச் சொல்லி மக்களை ஏமாற்றக் கூடாது. ஜிப்மர் மருத்துவமனை மட்டுமல்ல, இந்தியா முழுக்க மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருந்துவமனைகளில் இந்தி புழக்கத்தில் உள்ளது.

வேலூர் இப்ராஹிம் பேட்டி
வேலூர் இப்ராஹிம் பேட்டி

இந்து மதத்தின் குருவாக இருக்கிற ஒருவரைத் தூக்கிச் செல்வது மதத்தின் புனிதம் என்று கருதுகிறார்கள். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக இருக்கிற மரபு இது. தி.மு.க-விலிருந்து பல்வேறு முக்கியத் தலைவர்கள் பாஜக-வில் இணைந்துகொண்டிருக்கிறார்கள். அந்த இணைப்பின் தொடர்ச்சியாகத்தான் திருச்சி சிவா எம்.பி மகன் பா.ஜ.க-வில் இணைந்திருக்கிறார்.

அதேசமயம் மேலும் பலர் தி.மு.க-விலிருந்து, பா.ஜ.க-வில் இணைவதற்காக பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறது. தி.மு.க-விலிருந்து பா.ஜ.க.வுக்கு வருபவர்களை பா.ஜ.க வரவேற்கிறது. பா.ஜ.க-வில் இணையக்கூடியவர்கள் இந்த தேசத்தை உலகின் வல்லரசாக, தர்மத்தோடு வாழக்கூடிய ஒரு தேசமாக முன்னிறுத்துவதுதான் பா.ஜ.க-வின் நோக்கம். எனவே, அந்த நோக்கத்தை ஏற்றுக்கொண்ட அனைவரும் பா.ஜ.க-வை ஏற்றுக்கொள்வார்கள்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism