Published:Updated:

``ஆர்.பி.உதயகுமார் பாஜக-வின் அடிமையாகச் செயல்படுகிறார்!" - மாணிக்கம் தாகூர் எம்.பி தாக்கு

மாணிக்கம் தாகூர்

``கடந்த எட்டு ஆண்டுகளாக பா.ஜ.க ஆட்சியில் பட்டாசுத் தொழில் பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்திருக்கிறது. அந்த எல்லா நிலைகளிலும் பட்டாசுத் தொழிலை நீதிமன்றத்தைப் பயன்படுத்தி, தனக்குக் கேடயமாகவே பா.ஜ.க பயன்படுத்திவருகிறது." - மாணிக்கம் தாகூர் எம்.பி

``ஆர்.பி.உதயகுமார் பாஜக-வின் அடிமையாகச் செயல்படுகிறார்!" - மாணிக்கம் தாகூர் எம்.பி தாக்கு

``கடந்த எட்டு ஆண்டுகளாக பா.ஜ.க ஆட்சியில் பட்டாசுத் தொழில் பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்திருக்கிறது. அந்த எல்லா நிலைகளிலும் பட்டாசுத் தொழிலை நீதிமன்றத்தைப் பயன்படுத்தி, தனக்குக் கேடயமாகவே பா.ஜ.க பயன்படுத்திவருகிறது." - மாணிக்கம் தாகூர் எம்.பி

Published:Updated:
மாணிக்கம் தாகூர்

விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், அவருடைய முகாம் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``சிவகாசி பட்டாசுத் தொழிலை பாதுகாப்பதற்காக வருமுன் காப்போம் என்ற அடிப்படையில் தமிழக முதல்வர்‌ மற்ற மாநில முதல்வர்களுக்குக் கடிதம் எழுத வேண்டும் எனக் கேட்டிருக்கிறோம். ஏனெனில், பட்டாசு உற்பத்திக்குப் பயன்படும் வேதிப்பொருள் தடை, பட்டாசு உற்பத்திக்குத் தடை உள்ளிட்ட காரணங்களால் கடந்த எட்டு ஆண்டுகளாகப் பட்டாசுத் தொழில் நலிவடைந்திருக்கிறது.

சிவகாசி
சிவகாசி

இந்த நிலையில், டெல்லி மாநில அரசு பட்டாசு வெடிப்பதற்கு தடை விதித்திருப்பதால் சிவகாசி பட்டாசு ஏற்றுமதி பெரும் அளவு பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலை மற்ற மாநிலங்களிலும் பின்தொடராமல் இருக்க, தமிழக முதல்வர் பிற மாநில முதல்வர்களுக்குக் கடிதம் எழுத வேண்டும். விரைவில், தொகுதி அமைச்சர்களான கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோரை நேரில் சந்தித்த பிறகு தமிழக முதல்வரை நேரில் சந்திக்கத் திட்டமிட்டிருக்கிறோம்.

காங்கிரஸில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தப்படுகிறது. நாடு முழுவதிலுமுள்ள 9,000 பொதுக்குழு உறுப்பினர்கள் இதில் கலந்துகொண்டு அகில இந்திய காங்கிரஸ் தலைவரைத் தேர்ந்தெடுக்கவிருக்கின்றனர். இந்தியாவிலுள்ள மற்ற தேசியக் கட்சிகளுக்கு முன்னோடியாகவும், முன்மாதிரியாகவும் காங்கிரஸ் கட்சி இந்த ஜனநாயகத் தேர்தலை நடத்தவிருக்கிறது. இளம் தலைவர் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை தினமும் மக்களை நேரடியாகச் சந்திக்கும் நிகழ்வாக மாறியிருக்கிறது. இதன் மூலம் மக்களுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையேயான இணைப்பு அதிகரித்துவருகிறது. இது வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் கைகொடுக்கலாம்.

மாணிக்கம் தாகூர்
மாணிக்கம் தாகூர்

பாரத் ஜோடோ யாத்திரை தேர்தல் நோக்கத்துக்காக நடத்தப்படுவது அல்ல. ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க-வின் மத வெறுப்பு அரசியலுக்கு எதிராக இந்திய ஒற்றுமையை வலியுறுத்தி சமூக சகோதரத்துவ நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நீண்டகால இலக்கை அடிப்படையாக வைத்து இந்த யாத்திரை மேற்கொள்ளப்படுகிறது. பிள்ளையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டுவதுபோல கடந்த எட்டு ஆண்டுகளாக பா.ஜ.க ஆட்சியில் பட்டாசுத் தொழில் பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்திருக்கிறது. அந்த எல்லா நிலைகளிலும் பட்டாசுத் தொழிலை நீதிமன்றத்தைப் பயன்படுத்தி தனக்குக் கேடயமாகவே பா.ஜ.க பயன்படுத்திவருகிறது. கடந்த எட்டு ஆண்டுகளாகவே பட்டாசுத் தொழில் பிரச்னையில் பா.ஜ.க இரட்டை வேடம் போட்டுவருகிறது.

அ.தி.மு.க-வின் ஆர்.பி.உதயகுமார் பா.ஜ.க-வின் அடிமையாகச் செயல்படுகிறார். அவர் பேச்சின் மூலம் அ.தி.மு.க-வின் அடிமைத்தனம் வெளிப்படுகிறது. அவரது அடிமைத்தனத்தின் உச்சம்தான் பா.ஜ.க தலைவர்களுக்கு ஆதரவாகப் பேசுவது. தமிழகத்தில் எய்ம்ஸ் அமைப்பது தொடர்பாக நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்துவோம். 82 சதவிகிதம் ஜப்பான் அரசின் உதவியுடன் மதுரையில் 'எய்ம்ஸ்' அமைக்கப்படும் என்பது பா.ஜ.க அரசின் திட்டம் கிடையாது... ஜப்பானிய அரசின்‌ திட்டம். இதை பா.ஜ.க அரசு ஒப்புக்கொள்ள வேண்டும். தெலங்கானாவில் யாரோ ஜோதிடர் சொன்னதைக் கேட்டு சந்திரசேகர ராவ் தன் கட்சியை தேசியக்கட்சியாக மாற்றியிருக்கிறார். புதிதாக தேசியக்கட்சி ஆரம்பித்திருப்பது அரசியலில் எந்தப் புரட்சியையும் ஏற்படுத்தாது" என்றார்.