Published:Updated:

``கூட்டணியில் இருப்பதால் திமுக சொல்வதையெல்லாம் ஏற்றுக்கொள்வது எங்கள் வேலை இல்லை” - மாணிக்கம் தாகூர்

மாணிக்கம் தாகூர் எம்.பி

``திமுக-வுடன் கூட்டணியில் இருப்பதால் அவர்கள் சொல்வதையெல்லாம் காங்கிரஸ் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்ற அவசியமில்லை” என மாணிக்கம் தாகூர் எம்.பி கூறினார்.

``கூட்டணியில் இருப்பதால் திமுக சொல்வதையெல்லாம் ஏற்றுக்கொள்வது எங்கள் வேலை இல்லை” - மாணிக்கம் தாகூர்

``திமுக-வுடன் கூட்டணியில் இருப்பதால் அவர்கள் சொல்வதையெல்லாம் காங்கிரஸ் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்ற அவசியமில்லை” என மாணிக்கம் தாகூர் எம்.பி கூறினார்.

Published:Updated:
மாணிக்கம் தாகூர் எம்.பி

விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் மாணிக்கம் தாகூர், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். விருதுநகர் முகாம் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், "உதய்பூரில் மூன்று நாள்கள் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி காங்கிரஸ் கட்சியில் ஐந்து முக்கிய மாற்றங்கள் செய்யப்படவுள்ளன. மேலும் பிரசாந்த் கிஷோர் சொல்வது மாற்றங்கள் இல்லை. பிரசாந்த் கிஷோர் காசு கொடுத்தால் ஆலோசனை சொல்லும் ஆலோசகர் மட்டுமே. ஆலோசனையை ஏற்றுக்கொள்வதா, வேண்டாமா என்பதை காசு கொடுக்கும் காங்கிரஸ் கட்சித்தான் முடிவெடுக்கும்.

மாணிக்கம் தாகூர் எம்.பி
மாணிக்கம் தாகூர் எம்.பி

மேலும் வாய்க்கு வந்ததைப் பேசுவதை பிரசாந்த் கிஷோர் வழக்கமாகக்கொண்டிருக்கிறார். தமிழக பா.ஜ.க-வில் வெறும் 18 நபர்கள் இருக்கின்றனர். கோட்டையை முற்றுகையிட்டு, போராட்டம் நடத்துவேன் எனக் கூறி அண்ணாமலை சீன் போடுகிறார். 2014-ம் ஆண்டு இருந்த பெட்ரோல்-டீசல் விலை அளவுக்கு விலையை மத்திய அரசு குறைக்க வேண்டும். அப்படியில்லையெனில் 2014-ம் ஆண்டில் இருந்த பெட்ரோல்-டீசல் விலையைக் கொண்டுவர வலியுறுத்தி தீக்குளிப்பேன் என மோடியிடம் கூற அண்ணாமலை தயாரா... மேலும் நடைபெறவிருக்கும் குஜராத் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டுத்தான் மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்துள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பேரறிவாளன் விடுதலையில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு எப்போதும் ஒரே நிலைப்பாடுதான். ஆனால், பேரறிவாளன் விடுதலையைக் கொண்டாடுவதும் அவரை ஒரு தியாகிபோல நடத்துவதும் எந்தவிதத்தில் நியாயம்... மேலும் பேரறிவாளன் உட்பட ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் தி.மு.க கூட்டணியில் உள்ள காங்கிரஸ் தவிர்த்து மற்ற கட்சிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிலைப்பாடு எடுத்துள்ளன. அதில் காங்கிரஸ் கட்சி ஒரு நிலைப்பாடு எடுத்துள்ளது.

கூட்டணியில் இருப்பதால் தி.மு.க சொல்வதையெல்லாம் ஏற்றுக்கொள்வது எங்கள் வேலை இல்லை. அதேபோல் காங்கிரஸ் சொல்வதை ஏற்றுக்கொள்வது தி.மு.க-வின் வேலை இல்லை. சீமான் பா.ஜ.க-வின் 'பி'அணியாகத்தான் செயல்படுகிறார். பேரறிவாளனின் விடுதலை பா.ஜ.க-வால் நடத்தப்படும் சதி. அதில் முக்கியக் கதாபத்திரம் சீமான்தான்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism