Published:Updated:

``மக்களைத் தேடி மருத்துவம்; நாடு முழுக்க செயல்படுத்த மத்திய அமைச்சர்‌ விருப்பம்” - மா.சுப்பிரமணியன்

மக்கள்தொகை தின விழா

``மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை இந்தியா முழுமைக்கும் விரிவுபடுத்த மத்திய அமைச்சர் மண்டாவியா விருப்பம் தெரிவித்திருக்கிறார்’’ என தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

``மக்களைத் தேடி மருத்துவம்; நாடு முழுக்க செயல்படுத்த மத்திய அமைச்சர்‌ விருப்பம்” - மா.சுப்பிரமணியன்

``மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை இந்தியா முழுமைக்கும் விரிவுபடுத்த மத்திய அமைச்சர் மண்டாவியா விருப்பம் தெரிவித்திருக்கிறார்’’ என தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

Published:Updated:
மக்கள்தொகை தின விழா

உலக மக்கள்தொகை தினத்தை முன்னிட்டு விருதுநகர் அரசு மருத்துவமனை வளாகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன், மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் தலைமையில் உலக மக்கள்தொகை கட்டுப்பாடு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது‌. இதைத் தொடர்ந்து, பல்வேறு வளர்ச்சித் திட்டங்களின் அடிப்படையில் ரூ.4.8 கோடி செலவில் பணி முடிக்கப்பட்ட 18 துணை சுகாதார நிலையங்கள், மருத்துவமனைக் கட்டடங்களை அமைச்சர்கள் திறந்துவைத்துப் பேசினர்.

மக்கள்தொகை தின விழா
மக்கள்தொகை தின விழா

நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், "ஒவ்வோர் ஆண்டும் ஐ.நா சபை ஜூலை 11-ம் தேதியை உலக மக்கள்தொகை தினமாக அறிவித்து ஒரு கருப்பொருளை மையப்படுத்திக் கொண்டாடும். அதன் அடிப்படையில் இந்த ஆண்டு `குடும்பக் கட்டுப்பாடு முறைகளை ஏற்போம், புதிய அத்தியாயம் படைப்போம்’ என்ற கருப்பொருளை மையமாக வைத்து உலக மக்கள்தொகை தினத்தைக் கடைப்பிடிக்க அறிவுறுத்தியிருக்கிறது. இந்தியாவில் மற்ற மாநிலங்களில்விட தமிழ்நாடு குடும்ப நலத்துறையில் சிறந்து விளங்குகிறது. மற்ற மாநிலங்களில் ஆயிரத்தில் 19.7 சதவிகிதம் பேருக்கு குழந்தைப்பேறு நடக்கிறது. தமிழ்நாட்டில் இது 14.2% என்ற அளவில் இருக்கிறது. குழந்தை மரணத்தைக் கணக்கிடும்போது மற்ற மாநிலங்களில் ஒரு லட்சத்தில் 103 குழந்தைகள் இறக்கின்றன. தமிழ்நாட்டில் இது 58 குழந்தைகள் என்ற கணக்கில் இது இருக்கிறது. சிசு மரணத்தைப் பொறுத்தவரை ஆயிரத்தில் 35 சிசுக்கள் மரணமடைகின்றன. தமிழ்நாட்டில் இந்த விகிதம் ஆயிரத்துக்கு 13 என்ற அளவில் இருக்கிறது. இதன் மூலம், தமிழ்நாடு சுகாதார அளவீடுகள் எல்லாவற்றிலும் சிறப்பான நிலையில் இருப்பதை அறியலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தமிழ்நாட்டில் இரண்டு குழந்தைகளைப் பெற்ற 78.2% பேருக்கு குடும்பநல அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் குழந்தை பிறப்பு விகிதம் அதிகமுள்ள நீலகிரி, திருவண்ணாமலை, ராமநாதபுரம் ஆகிய மூன்று மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு அந்த மாவட்டங்களில் குடும்பநல சிகிச்சைகள் தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும்விதமாக 25.3 லட்சம் செலவில் டிஜிட்டல் முறையில் வாகன பிரசாரத் திட்டம் தொடங்கிவைக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக விருதுநகர் மாவட்டத்துக்குத்தான் இரண்டு மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனைகள் வழங்குவதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒப்புதல் அளித்திருக்கிறார். அதன்படி அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையையும், ராஜபாளையம் அரசு மருத்துவமனையையும் மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனைகளாக தரம் உயர்த்த 70.39 கோடி ரூபாயை ஒதுக்கி உத்தரவிடப்பட்டிருக்கிறது. மேலும் விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை உள்ளிட்ட மருத்துவமனைகளின் வளர்ச்சிப் பணிகளுக்கென தனியே நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது.

மக்கள்தொகை தின விழா
மக்கள்தொகை தின விழா

இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் 30 மாவட்டங்கள் தேர்வுசெய்யப்பட்டு,அவற்றில் வளரிளம் பருவத்தினருக்கான சிறப்புப் பயிற்சி வழங்க மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசின் மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தின் மூலமாக தமிழ்நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 60% பேருக்கு சோதனைகள் பரிசோதனைகள் முழுமையாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 79 லட்சம் பேர் மருத்துவப் பயன்களைப் பெற்றுவருகின்றனர். விரைவில் ஒரு கோடிப் பேருக்கு இந்தத் திட்டத்தின் பலன்கள் சென்றடைய வேண்டும் என்பதே அரசின் இலக்கு. தமிழ்நாட்டின் மக்களை தேடி மருத்துவத் திட்ட செயல்பாட்டைப் பார்த்து வியந்த மத்திய அமைச்சர் மன்சுக் மண்டாவியா, இந்தியா முழுவதும் இதைச் செயல்படுத்துவதற்கு ஆலோசனை கேட்டிருக்கிறார். அந்த வகையில் சிறப்பான திட்டங்களை சிந்தித்து தமிழ்நாடு அரசு செயல்படுத்திவருகிறது. மேலும் விருதுநகர் மாவட்டத்துக்கு பிரத்யேகமாக காசநோயைக் கண்டறிவதற்கு சிறப்பு வாகன பரிசோதனை மையம் அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது. விருதுநகர் அரசு மருத்துவமனையில் ஒவ்வொரு வியாழக்கிழமையும் திருநங்கைகளுக்கான சிறப்பு மருத்துவ முகங்கள் நடத்துவதற்கு தனி சிகிச்சை மையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது" என்றார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேசுகையில், ``சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மாரத்தான் ரேஸில் ஓடக்கூடியவர். இதனால் அவர் எங்கள் மத்தியில் மாரத்தான் வீரர் என அழைக்கப்படுவார். இந்த வயதிலும் தன் உடம்பை எப்படிப் பக்குவப்படுத்தி வைத்திருக்கிறாரோ, அதுபோலவே இந்தத் துறையையும் அவர் பக்குவப்படுத்தி தன் வசம் வைத்திருக்கிறார். தன் நலம் என்பதே ஒருவகை சுகாதாரம்தான். அந்த வகையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் துறையை சிறப்புடன் வழிநடத்திவருகிறார்.

இன்று பெரும்பாலான மக்கள், அரசு மருத்துவமனைகளைத் தேடி சிகிச்சைக்காக வருகின்றனர். இதற்குக் காரணம் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சிந்தித்துச் செயல்படுத்தும் சிறப்பான மருத்துவத் திட்டங்கள்தான். இந்தியாவிலேயே கோவிட் தாக்கம் குறைவாக இருக்கும் மாநிலம் தமிழ்நாடுதான். இதற்காகவே சுகாதாரத்தில் அரசு அதிக அக்கறையும் கவனமும் செலுத்திவருகிறது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவரையும், மருத்துவப் பணியாளர்களையும் தகப்பனாக இருந்து பாதுகாத்து வருகிறார்" என்றார்.

தொடர்ந்து, வளரிளம் பெண்களுக்கு சம வயது பயிற்றுனர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி முகாமை அமைச்சர்கள்‌ தொடங்கிவைத்தனர்.