Published:Updated:

நாளை இம்மானுவேல் சேகரன் குருபூஜை - அனுமதியின்றி நிறுவப்பட்ட வெண்கல சிலையால் விருதுநகரில் பதற்றம்!

இம்மானுவேல் சேகரன்

விருதுநகர் மாவட்டம் மம்சாபுரம் அருகே அனுமதியின்றி இம்மானுவேல் சேகரனின் முழுஉருவ வெண்கல சிலை நிறுவப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நாளை இம்மானுவேல் சேகரன் குருபூஜை - அனுமதியின்றி நிறுவப்பட்ட வெண்கல சிலையால் விருதுநகரில் பதற்றம்!

விருதுநகர் மாவட்டம் மம்சாபுரம் அருகே அனுமதியின்றி இம்மானுவேல் சேகரனின் முழுஉருவ வெண்கல சிலை நிறுவப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Published:Updated:
இம்மானுவேல் சேகரன்

இம்மானுவேல் சேகரனின் 65-வது குருபூஜை விழா ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நாளை நடைபெற இருக்கிறது. இதன்காரணமாக விருதுநகர், இராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், விருதுநகர் மாவட்டத்திலிருந்து இம்மானுவேல் சேகரனின் குருபூஜை விழாவில் கலந்துக்கொள்ளச்செல்லும் வழித்தடங்களில் உள்ள மதுபானக்கடைகளையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

பதற்றம்
பதற்றம்

இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா மம்சாபுரம் அருகே உள்ள அமச்சியார்பட்டி கிராமத்தில் அரசு மற்றும் நீதிமன்றத்தின் அனுமதி இல்லாமலேயே சிலர் இம்மானுவேல் சேகரனுக்கு முழு உருவ வெண்கல சிலை நிறுவியுள்ளனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நாளை இம்மானுவேல் சேகரன் குருபூஜை விழா நடைபெற உள்ள சமயத்தில் அப்பகுதி மக்கள் நேற்று இரவோடு இரவாக பீடம் அமைத்து இம்மானுவேல் சேகரன் முழு உருவ வெண்கல சிலை அமைத்த தகவல் காட்டுத்தீயாய் பரவியது. இதையறிந்த வருவாய் மற்றும் காவல் துறையினர் முன்அனுமதியின்றி நிறுவப்பட்ட இம்மானுவேல் சேகரனின் சிலையை அகற்றக்கோரி அப்பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அமச்சியார்பட்டி
அமச்சியார்பட்டி

அப்போது பேசிய அதிகாரிகள், "தலைவர்கள் சிலைகளை புதிதாக ஒரு இடத்தில் வைக்க அரசும், நீதிமன்றமும் தடை விதித்துள்ளது. நீங்கள் சிலை நிறுவ வேண்டுமென்றால் முறையாக அனுமதி பெற்றிருக்கவேண்டும். ஆனால், எவ்வித அனுமதியும் பெறாமல் இம்மானுவேல் சேகரனின் சிலையை நிறுவியது வீண் பதற்றத்தை உருவாக்கும் விதத்தில் உள்ளது. எனவே, சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாத வகையில், நீங்கள் வைத்த சிலையை நீங்களே அகற்றி விடுங்கள்" என கூறினர். இதனை ஏற்க மறுத்து, அப்பகுதி மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டு திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து, போலீஸாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

வெண்கல சிலை
வெண்கல சிலை

அமச்சியார்பட்டியில் நிலவிய பதற்றமான சூழ்நிலையை தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர் மற்றும் சிவகாசி வருவாய் கோட்டாட்சியர் பிரித்திவிராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், சமரசப்பேச்சு வார்த்தையில் முடிவு எட்டப்படாததால் அப்பகுதியில் தொடர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மாவட்ட முழுவதிலுமிருந்து 300க்கும் மேற்பட்ட போலீஸார் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.