Published:Updated:

``மக்களுக்கு ஏமாற்றத்தை கொடுக்கிற ஆட்சியாக மாறியுள்ளது" - திமுக-வை சாடிய ஜி.கே.வாசன்

ஆலோசனைக்கூட்டத்தில் ஜி.கே.வாசன்

``தமிழகத்தில் பாலியல் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்கினால் அதை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வரவேற்கும்” என அக்கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் விருதுநகரில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

``மக்களுக்கு ஏமாற்றத்தை கொடுக்கிற ஆட்சியாக மாறியுள்ளது" - திமுக-வை சாடிய ஜி.கே.வாசன்

``தமிழகத்தில் பாலியல் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்கினால் அதை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வரவேற்கும்” என அக்கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் விருதுநகரில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Published:Updated:
ஆலோசனைக்கூட்டத்தில் ஜி.கே.வாசன்

தென் மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்ள வந்திருந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் விருதுநகரில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "ஜூலை 15-ந்தேதி பெருந்தலைவர் காமராசரின் பிறந்தநாளை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மதுரையில் மிகப்பெரும் பொதுக்கூட்டமாக நடத்தி நலத்திட்டங்களை வழங்க நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

சிவகாசியில் பட்டாசு தொழிலை பாதுகாக்க வேண்டும். சுற்றுச்சூழல் விதிகளை காரணம் காட்டி பட்டாசு தயாரிப்புக்கும், சரவெடி தயாரிப்பிற்கும் தடை விதிப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இது தொடர்பாக அடுத்து வரும் நாடாளுமன்ற கூட்டத்தில் நிச்சயமாக குரல் கொடுப்பேன். பட்டாசு தயாரிப்புக்கு முறையான வழிகாட்டுதல் குழு அமைக்க வேண்டும். அந்தக் குழுவில் தீயணைப்பு துறையினர், காவல் துறையினர், வருவாய் துறையினர், வெடிபொருள் கண்காணிப்பு அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள், பட்டாசு உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் என அனைவரும் அடங்கிய குழுவாக அது அமைய வேண்டும்.

ஆலோசனைக்கூட்டத்தில் ஜி.கே.வாசன்
ஆலோசனைக்கூட்டத்தில் ஜி.கே.வாசன்

கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு நாட்டின் பொருளாதாரம் 3 லட்சம் கோடி அளவுக்கு உயர்ந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இது மகிழ்ச்சிதரும் விஷயம். தற்பொழுது மீண்டும் கொரோனா பரவிவரும் சூழலில் மக்கள் அனைவரும் விழிப்புடன் செயல்பட வேண்டும். ராமேஸ்வரத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்தது கண்டிக்கத்தக்கது.‌ இலங்கை கடற்படையினரால் தொடரும் இந்த செயலுக்கு இந்திய அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். வெளியுறவு துறை அமைச்சகம் ரீதியில் பேச்சுவார்த்தை நடத்தி தமிழக மீனவர்களை விரைவில் மீட்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நாட்டில் மதச்சுதந்திரம் என்பது மிக முக்கியம். எனவே யாரும் எந்த மதத்தையும் புண்படுத்தாத அளவுக்கு விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஜனாதிபதி தேர்தலில் மலைவாழ் பழங்குடியின மகளிருக்கு ஒரு வாய்ப்பை பாரதிய ஜனதா கட்சி ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. இதன்மூலம் எதிர்க்கட்சிகள் அரசியலுக்கு அப்பாற்பட்டு பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளருக்கு வாக்களிக்க கூடிய நிலை ஏற்பட்டிருக்கிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை கைக்குள் கொண்டு வந்து மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுகின்ற வகையில் இந்த அரசு செயல்பட வேண்டும். ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை தமிழக அரசு முழுமையாக தடை செய்ய வேண்டும்.

பாலியல் குற்றவாளிகள் மீது மிகக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். அந்த தண்டனை ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அளிக்கப்பட வேண்டும். பாலியல் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்கினால் கூட அதை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வரவேற்கும். திமுக ஆட்சி பொறுப்பேற்று 100 நாள்கள் கடந்த நிலையில் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்ற கோரி முதலில் ஆர்ப்பாட்டம் நடத்திய கட்சி தமிழ் மாநில காங்கிரஸ்.

ஜி.கே.வாசன்
ஜி.கே.வாசன்

அந்த வகையில் தி.மு.க.அரசு வாக்குறுதிகள் கொடுத்து நிறைவேற்றாமல் மக்களுக்கு ஏமாற்றத்தை கொடுக்கிற ஆட்சியாக மாறியுள்ளது. சொத்து வரி உயர்த்த மாட்டோம் என கூறிவிட்டு தற்பொழுது சொத்து வரியை 100 சதவீதம் அளவுக்கு உயர்த்தி இருக்கிறார்கள். இது போதாதென்று, ஆண்டுதோறும் சொத்து வரியை உயர்த்தவும் முடிவு செய்திருப்பது மக்களை கவலை அடைய செய்துள்ளது. அ.தி.மு.க.வின் ஒற்றைத் தலைமை பிரச்சனை என்பது உட்கட்சி விவகாரம். அதில் தமிழ் மாநில காங்கிரஸ் எந்த கருத்தும் தெரிவிக்காது. நாட்டு நடப்புக்கு ஏற்ப ஜி.எஸ்.டி. வரியில் ஏற்ற இறக்கங்கள் இருந்து வருகின்றன. எனவே இனிவரும் ஜி.எஸ்.டி.கூட்டங்களில் நாட்டு நடப்புக்கு ஏற்றவாறு ஜி.எஸ்.டி.யை மாற்றி அமைத்துக் கொள்ள மத்திய அரசு தயாராக உள்ளது" எனக்கூறினார்.