Published:Updated:

தொடரும் கொலை மிரட்டல்... `தி காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்பட இயக்குநருக்கு `ஒய்' பிரிவு பாதுகாப்பு!

`தி காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்படத்தின் இயக்குநர்

'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்படத்தின் இயக்குநருக்கு `ஒய்' பிரிவு பாதுகாப்பை மத்திய அரசு வழங்கியுள்ளது.

தொடரும் கொலை மிரட்டல்... `தி காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்பட இயக்குநருக்கு `ஒய்' பிரிவு பாதுகாப்பு!

'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்படத்தின் இயக்குநருக்கு `ஒய்' பிரிவு பாதுகாப்பை மத்திய அரசு வழங்கியுள்ளது.

Published:Updated:
`தி காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்படத்தின் இயக்குநர்

`தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்துக்கு ஹரியானா, மத்தியப் பிரதேசம், திரிபுரா, கோவா, கர்நாடகா, உத்தரகாண்ட் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களும் வரிச்சலுகை வழங்கின. `காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் 1990-களில் காஷ்மீரிலிருந்து வெளியேற்றப்பட்ட காஷ்மீர் பண்டிட்கள் குறித்த உண்மைச் சம்பவத்தைத் தழுவிய கதை அம்சத்தைக்கொண்டது. ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து, விவேக் அக்னிஹோத்ரி எழுதி இயக்கிய இந்தத் திரைப்படம், கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுவருகிறது. ` `தி காஷ்மீர் ஃபைல்ஸ்' போன்ற திரைப்படங்கள் மூலம் மக்களுக்கு உண்மை தெரிய வேண்டும். பல ஆண்டுகளாக அடக்கிவைக்கப்பட்டிருந்த உண்மையை இப்படம் காட்டியுள்ளது’ என பிரதமர் மோடி பேசினார்.

'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' இயக்குநர் விவேக் அக்னிஹோத்திரி
'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' இயக்குநர் விவேக் அக்னிஹோத்திரி

`தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைக்கு வந்த எட்டு நாள்களில் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தப் படத்தைச் சிலர் பாராட்டிவரும் நிலையில், இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பைப் பரப்பும் படம் என்று ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். இதனால் இயக்குநருக்கு கொலை மிரட்டல் வந்ததாகவும், ஆபாசமான செய்திகள் அவருக்கு அனுப்பப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதனால், `தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்தின் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரிக்கு மத்திய பாதுகாப்புப் படையின் கீழ் `ஒய்’ பிரிவு பாதுகாப்பை மத்திய அரசு வழங்கியுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism