Published:Updated:

``அதிமுக ஒரே குடும்பம், பிள்ளைகளை நிச்சயம் சந்திப்பேன்!"- சசிகலா

சசிகலா

தென்மாவட்டங்களுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் சசிகலா, "அ.தி.மு.க ஒரே குடும்பம், பிள்ளைகளை நிச்சயம் சந்திப்பேன்" என சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்துள்ளார்.

``அதிமுக ஒரே குடும்பம், பிள்ளைகளை நிச்சயம் சந்திப்பேன்!"- சசிகலா

தென்மாவட்டங்களுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் சசிகலா, "அ.தி.மு.க ஒரே குடும்பம், பிள்ளைகளை நிச்சயம் சந்திப்பேன்" என சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்துள்ளார்.

Published:Updated:
சசிகலா

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இறப்புக்குப் பின்னர், சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனைக்குப் பிறகு கடந்த ஆண்டு விடுதலை செய்யப்பட்டார் சசிகலா. அவர் சிறைக்குச் சென்றதையடுத்து ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க இயங்கிவந்தது. பின்னர் கட்சியிலிருந்து சசிகலா நீக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், தற்போது நடந்து முடிந்த தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க எந்தவொரு மாநகராட்சியையும் கைப்பற்றாமல் தோல்வியடைந்ததையடுத்து. நகராட்சி மற்றும் பேரூராட்சிகளிலும் பலத்த அடி விழுந்தது. இதன் காரணமாக தற்போது அ.தி.மு.க-வில் சசிகலா குறித்த பேச்சுகள் மீண்டும் தொடங்கியுள்ளன.

ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, எடப்பாடி பழனிச்சாமி
ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, எடப்பாடி பழனிச்சாமி

அண்மையில்கூட அ.தி.மு.க தேனி மாவட்டச் செயலாளர், `சசிகலாவையும் தினகரனையும் கட்சியில் சேர்த்தாலே அணைத்து பிரச்னைகளும் முடிந்துவிடும்’ என்று பேசியிருந்தார். இதற்கு அ.தி.மு.க-வில் இருவேறுபட்ட கருத்துகள் நிலவிவருகின்றன. இந்த நிலையில், சசிகலா தென்மாவட்டங்களுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக, சென்னை விமான நிலையம் சென்ற சசிகலாவிடம், "சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது தொண்டர்கள் உங்களைச் சந்திப்பார்களா" என செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினார். அப்போது பேசிய சசிகலா, ``அ.தி.மு.க ஒரே குடும்பம், நிச்சயமாகத் தொண்டர்களைச் சந்திப்பேன்” எனக் கூறினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism