Published:Updated:

`ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத்துக்கு ஆதரவு... எடப்பாடி பழனிசாமிக்கு கண்டனம்' - சசிகலா சொல்வதென்ன?

சசிகலா ( தே.சிலம்பரசன் )

``அ.தி.மு.க-வின் ஒரே நாடாளுமன்ற உறுப்பினரை, கட்சியின் சார்பில்‌ செயல்படுவதைத் தடுக்கும்‌ நடவடிக்கைகளை, கழகத்‌ தொண்டர்கள்‌ யாரும்‌ ஏற்றுக்‌கொள்ள மாட்டார்கள்‌." சசிகலா

`ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத்துக்கு ஆதரவு... எடப்பாடி பழனிசாமிக்கு கண்டனம்' - சசிகலா சொல்வதென்ன?

``அ.தி.மு.க-வின் ஒரே நாடாளுமன்ற உறுப்பினரை, கட்சியின் சார்பில்‌ செயல்படுவதைத் தடுக்கும்‌ நடவடிக்கைகளை, கழகத்‌ தொண்டர்கள்‌ யாரும்‌ ஏற்றுக்‌கொள்ள மாட்டார்கள்‌." சசிகலா

Published:Updated:
சசிகலா ( தே.சிலம்பரசன் )

அ.தி.மு.க-வின் இடைக்கால பொதுச்செயலாளராக, சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற பிறகு, ஓ.பன்னீர்செல்வம், அவருடைய மகன் ரவீந்திரநாத் உட்பட ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் பலரையும் கட்சியிலிருந்து நீக்கினார். இதற்கிடையில், அ.தி.மு.க சார்பில் நாடாளுமன்ற மக்களவையில் எம்.பி-யாக இருக்கும் ரவீந்திரநாத்தையும், ``ரவீந்திரநாத் கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார். இனி அவர் அ.தி.மு.க எம்.பி இல்லை" என மக்களவை சபாநாயகருக்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு கடிதம் அனுப்பியது. இந்த நிலையில் ரவீந்திரநாத் மீதான இத்தகைய நடவடிக்கைக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு, சசிகலா கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

ரவீந்திரநாத் குமார்
ரவீந்திரநாத் குமார்

அந்த அறிக்கையில், ``அ.தி.மு.க-வின் ஒரே நாடாளுமன்ற உறுப்பினரை, கட்சியின் சார்பில்‌ செயல்படுவதைத் தடுக்கும்‌ நடவடிக்கைகளை, கழகத்‌ தொண்டர்கள்‌ யாரும்‌ ஏற்றுக்‌கொள்ள மாட்டார்கள்‌. கட்சியின் நலனைக்‌ காற்றில்‌ பறக்கவிட்டு எடுத்த தவறான முடிவுகளால்‌, நாடாளுமன்ற மாநிலங்களவையில்‌ நமது உறுப்பினர்களின்‌ எண்ணிக்கை குறைந்ததோடு, கட்‌சியின்‌ அங்கீகாரத்தையும் இழந்து நின்றோம்‌.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்தச் சூழ்நிலையில்‌, கட்சியின்‌ சார்பில்‌ நாடாளுமன்றத் தேர்தலில்‌ வெற்றிபெற்ற ஒரே ஒரு மக்களவை உறுப்பினரை, கட்சியைவிட்டே நீக்குவதும்‌, நாடாளுமன்றத்தில்‌ அ.தி.மு.க-வின் பெயரைச் சொல்வதற்கு யாருமே வேண்டாம்‌ என்று கண்மூடித்தனமாக முடிவு எடுப்பதையும்‌ கழகத்‌ தொண்டர்கள்‌ ஒரு நியாயமற்ற செயலாகத்தான்‌ பார்ப்பார்களே தவிர, ஒரு அறிவார்ந்த செயலாக யாருமே பார்க்க மாட்டார்கள்‌.

சசிகலா
சசிகலா

இவர்களது நடவடிக்கைகள்‌ ஒவ்வொன்றையும்‌ கழகத்‌ தொண்டர்கள்‌ கவனித்துக்‌கொண்டுதான்‌ இருக்கிறார்கள்‌. எனவே, கழகத்‌ தொண்டர்கள்‌ அனைவருக்கும்‌ இன்றைக்கும்‌ நான்‌ சொல்லிக்கொள்வது ஒன்றுதான்‌. அதாவது, இயக்கம்‌ அழிந்தாலும்‌ பரவாயில்லை, எப்படியாவது பதவிகளைத் தட்டிப் பறிக்க வேண்டும்‌ என்று தாண்டிக் குதிப்பவர்களை எண்ணி யாரும்‌ சிறிதும்‌ கவலைப்படாதீர்கள்‌. இவர்கள்‌ எண்ணம்‌ தவறானது, இயக்கத்துக்கு எதிரானது என்பது வெளிப்படுகின்ற காலம்‌ வந்துவிட்டது. இதை எதிர்வரும்‌ நாடாளுமன்றத் தேர்தலில்‌ அனைவரும்‌ கண்கூடாகப் பார்க்கத்தான்‌ போகிறீர்கள் என்பதையும்‌ இந்நேரத்தில்‌ உறுதியோடு தெரிவித்துக்‌கொள்கிறேன்." என சசிகலா குறிப்பிட்டிருந்தார்.