Published:Updated:

`பெயர்: கறம்பக்குடி, தந்தை பெயர்: புதுக்கோட்டை!’ - வாக்காளர் பட்டியல் குளறுபடியால் அதிர்ச்சி

வாக்காளர் பட்டியல் குளறுபடி

கறம்பக்குடி பேரூராட்சி 6-வது வார்டில் பெண் வாக்காளரின் பெயர் கறம்பக்குடி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல், 2-வது வார்டில் புகழரசன் என்ற வாக்காளரின் தந்தை பெயர் புதுக்கோட்டை என்று இடம்பெற்றுள்ளது.

`பெயர்: கறம்பக்குடி, தந்தை பெயர்: புதுக்கோட்டை!’ - வாக்காளர் பட்டியல் குளறுபடியால் அதிர்ச்சி

கறம்பக்குடி பேரூராட்சி 6-வது வார்டில் பெண் வாக்காளரின் பெயர் கறம்பக்குடி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல், 2-வது வார்டில் புகழரசன் என்ற வாக்காளரின் தந்தை பெயர் புதுக்கோட்டை என்று இடம்பெற்றுள்ளது.

Published:Updated:
வாக்காளர் பட்டியல் குளறுபடி

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. 15 வார்டுகளிலும் சேர்த்து மொத்தமாக 13,180 வாக்காளர்கள் உள்ளனர். குறிப்பாக, இங்குள்ள வார்டுகள் மறுவரையறை செய்யப்பட்டு, தற்போது உள்ளாட்சித் தேர்தலுக்குத் தயாராகிவருகிறது. ஏற்கெனவே இருந்த வார்டுகளின் நம்பர் மாற்றப்பட்டுள்ளன. இதனால், வாக்காளர்கள் குழம்பிப்போயுள்ளனர். இதற்கிடையே புதிதாகச் சேர்க்கப்பட்ட வாக்காளர்களின் ஓட்டுகள் வெவ்வேறு வார்டுகளின் இணைப்புப் பட்டியலில் உள்ளன. இந்த நிலையில்தான், வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர்களின் பெயர்களிலிருந்து முகவரி, தந்தை பெயர், புகைப்படம் எனச் சம்பந்தமே இல்லாமல் வெளியாகியிருக்கின்றன.

வாக்காளர் பெயர்
வாக்காளர் பெயர்

இதனால், வாக்காளர்கள் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். குறிப்பாக, கறம்பக்குடி பேரூராட்சி 6-வது வார்டில் பெண் வாக்காளரின் பெயர் `கறம்பக்குடி’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல், 2-வது வார்டில் `புகழரசன்’ என்ற வாக்காளரின் தந்தை பெயர் `புதுக்கோட்டை’ என்று இடம்பெற்றுள்ளது. பெண் பெயரில் ஆண் புகைப்படம் தொடங்கி வயது மாறுபட்டிருக்கிறது. இப்படி ஏகப்பட்ட குளறுபடிகள் நிறைந்த வாக்காளர் பட்டியலாக வெளியாகியிருக்கிறது. ஒருபக்கம், தாங்கள் வாக்களிக்க முடியுமா என்பது தெரியாமல் வாக்காளர்கள் தவித்துவர, மறுபக்கம், வேட்பாளர்களும் யார் யாரிடம் வாக்குகள் கேட்பது என குழம்பிப்போயிருக்கிறார்களாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism