Published:Updated:

``பாஜக என்னை பயங்கரவாதி என்று UAPA சட்டத்தின் கீழ் கைதுசெய்யக் காத்திருக்கிறேன்" - ஆதிர் ரஞ்சன்

மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி

"குடியரசுத் தலைவரிடம் சென்று மன்னிப்புக் கேட்டுவிட்டாரே என்று இந்த விவகாரத்தை எப்படிச் சிறுமைப்படுத்துவது?" - கிரண் ரிஜிஜு

``பாஜக என்னை பயங்கரவாதி என்று UAPA சட்டத்தின் கீழ் கைதுசெய்யக் காத்திருக்கிறேன்" - ஆதிர் ரஞ்சன்

"குடியரசுத் தலைவரிடம் சென்று மன்னிப்புக் கேட்டுவிட்டாரே என்று இந்த விவகாரத்தை எப்படிச் சிறுமைப்படுத்துவது?" - கிரண் ரிஜிஜு

Published:Updated:
மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி

இந்தியாவின் புதிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை, `ராஷ்டிரபத்னி' என காங்கிரஸ் எம்.பி ஆதிர் ரஞ்சன் சௌத்ரி கூறிய சம்பவம் நாடாளுமன்ற மக்களவையில் காங்கிரஸ், பா.ஜ.க-விடையே பெரும் வாக்குவாதத்தை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து, காங்கிரஸ் எம்.பி ஆதிர் ரஞ்சன் சௌத்ரி ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்குக் கடிதம் எழுதினார். அதில்,"நான் பேசியது தெரியாமல் வாய்தவறி வந்த வார்த்தை. அதற்காக வருந்துகிறேன். மன்னிப்பும் கேட்டுக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

திரௌபதி முர்மு
திரௌபதி முர்மு

ஆனாலும், தொடர்ந்து பா.ஜ.க தலைவர்கள் அவரை விமர்சித்துவருகின்றனர். மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு செய்தியாளர்களைச் சந்தித்த போது, "அது வாய்தவறி வந்த வார்த்தையல்ல. ஆதிர் ரஞ்சன் சௌத்ரி தெளிவாக இரண்டாவது முறை 'ராஷ்டிரபத்னி' என்று தன்னைத் திருத்திக்கொள்கிறார். இது போன்ற விஷயங்களைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. அவர் தேசவிரோதி, பழங்குடியினருக்கு எதிரானவர்.மேலும் குடியரசுத் தலைவரிடம் சென்று மன்னிப்புக் கேட்டுவிட்டாரே என்று இந்த விவகாரத்தை எப்படிச் சிறுமைப்படுத்துவது, இது அவ்வளவு எளிதானதா... கண்டிக்கத்தக்கது" எனத் தெரிவித்திருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு
மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு

பா.ஜ.க-வின் இந்த விமர்சனத்துக்கு பதிலளிக்கும்விதமாக, காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி, "பா.ஜ.க என்னை பயங்கரவாதி என்று UAPA சட்டத்தின் கீழ் கைதுசெய்யக் காத்திருக்கிறேன். நான் யாருக்கும் பயப்படவில்லை. அவர்கள் பழங்குடியினரின் பாதுகாவலர்களாக மாற விரும்புகிறார்கள், ஆனால் பழங்குடி மக்களின் கொலைகள் எப்படி நடக்கின்றன என்பதை மறைக்க விரும்புகிறார்கள். சோனியா காந்தியின் கீழ் கொண்டுவரப்பட்ட சட்டங்கள் மாற்றப்படுகின்றன, அவர்கள் பழங்குடிகளுக்கு எதிராகச் செயல்படுகிறார்கள்" எனக் கூறியுள்ளார்.