Published:Updated:

``இந்தியாவை உற்பத்தி மையமாக மாற்ற நடவடிக்கை!'' - ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் மோடி

பிரதமர் மோடி ( ட்விட்டர் )

``கொரோனா தொற்று நோய் காலத்துக்குப் பிறகு, உலகம் பொருளாதார மீட்சிக்கான சவாலை எதிர்கொண்டுவருகிறது.'' - மோடி

``இந்தியாவை உற்பத்தி மையமாக மாற்ற நடவடிக்கை!'' - ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் மோடி

``கொரோனா தொற்று நோய் காலத்துக்குப் பிறகு, உலகம் பொருளாதார மீட்சிக்கான சவாலை எதிர்கொண்டுவருகிறது.'' - மோடி

Published:Updated:
பிரதமர் மோடி ( ட்விட்டர் )

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இடம்பெற்றிருக்கும் நாடுகள் பங்கேற்ற உச்சி மாநாடு உஸ்பெகிஸ்தான் நாட்டில் இன்று நடைபெற்றது. பிரதமர் மோடி இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது பேசிய அவர், ``கொரோனா தொற்றுநோய் காலத்துக்குப் பிறகு, உலகம் பொருளாதார மீட்சிக்கான சவாலை எதிர்கொண்டுவருகிறது. கொரோனா காலம், உக்ரைன் போர் உள்ளிட்டவை உலகளாவிய விநியோகச் சங்கிலியில் தடைகளை உருவாக்கின. இதன் விளைவாக உணவு, எரிசக்தி பாதுகாப்பில் நெருக்கடி ஏற்பட்டது.

ஷாங்காய் அமைப்பு எங்கள் பிராந்தியப் பகுதியில் விநியோகச் சங்கிலியை உருவாக்க முயல வேண்டும். இதற்குச் சிறந்த இணைப்பு மற்றும் போக்குவரத்து உரிமைகளை வழங்குவது மிகவும் அவசியமானது. நாடுகளிடையே பரஸ்பர நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பை இந்தியா ஆதரிக்கிறது.

உச்சி மாநாடு
உச்சி மாநாடு

இந்தியாவை உற்பத்தி மையமாக மாற்றுவதில் நாங்கள் முன்னேற்றம் கண்டிருக்கிறோம். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இந்த ஆண்டு 7.5 சதவிகிதமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகில் வேகமாக வளர்ந்துவரும் மிகப் பெரிய பொருளாதார நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி
ட்விட்டர்

உலக சுகாதார அமைப்பு பாரம்பர்ய மருந்துகளுக்கான மையத்தை குஜராத்தில் தொடங்கியது. இது பாரம்பர்ய சிகிச்சைக்கான முதல் மற்றும் ஒரே உலகளாவிய மையம்'' என்றார்.