Published:Updated:

`எங்களின் ஒற்றைத் தலைமையே’ - அதிரடித்த பேனர்கள்; தொண்டர்கள் படை -எடப்பாடியின் தி.மலை விசிட் ஹைலைட்ஸ்

எங்களின் ஒற்றைத் தலைமையே! - பேனர்.

பாதாகைகளில், "எங்களின் ஒற்றைத் தலைமையே!, கழக பொதுச்செயலாளரே, ஒற்றைத் தலைமை நாயகரே..." என்றெல்லாம் பதிவிட்டு எடப்பாடி பழனிசாமியை வரவேற்றுள்ளனர் திருவண்ணாமலை அ.தி.மு.க நிர்வாகிகள்.

`எங்களின் ஒற்றைத் தலைமையே’ - அதிரடித்த பேனர்கள்; தொண்டர்கள் படை -எடப்பாடியின் தி.மலை விசிட் ஹைலைட்ஸ்

பாதாகைகளில், "எங்களின் ஒற்றைத் தலைமையே!, கழக பொதுச்செயலாளரே, ஒற்றைத் தலைமை நாயகரே..." என்றெல்லாம் பதிவிட்டு எடப்பாடி பழனிசாமியை வரவேற்றுள்ளனர் திருவண்ணாமலை அ.தி.மு.க நிர்வாகிகள்.

Published:Updated:
எங்களின் ஒற்றைத் தலைமையே! - பேனர்.

அ.தி.மு.க-வின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் வெடித்த ஒற்றைத் தலைமை பிரச்னை, தற்போது உச்சகட்டத்தை எட்டியிருக்கிறது. 'ஒற்றைத் தலைமை' குறித்து அந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக முன்னாள் அமைச்சரான ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூற, ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் என இரு தரப்பிலும் பரபரப்பை உண்டாக்கியது. இதைத் தொடர்ந்து, இரு தரப்பு ஆதரவாளர்களால் ஆங்காங்கே அ.தி.மு.க தலைமை குறித்த போஸ்டர்கள் ஒட்டப்பட்ட செயல்களும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தின. இந்நிலையில், "கழகத் தொண்டர்கள் அனைவரும் தயவு செய்து அமைதி காக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்" என ட்வீட் செய்திருந்த ஓ.பி.எஸ்., 16-ம் தேதி அன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அ.தி.மு.க
அ.தி.மு.க

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

``திடீரென ஒற்றைத் தலைமை என்ற பேச்சு ஏன் வந்தது என எனக்குத் தெரியவில்லை. கட்சியில் இரட்டைத் தலைமை நன்றாகப் போய்க்கொண்டிருக்கிறது. ஒற்றைத் தலைமை குறித்து நானோ, பழனிசாமியோ பேசியதில்லை. பொதுச்செயலாளர் பொறுப்பு ஜெயலலிதாவுக்கே உரித்தானது. அந்தப் பதவிக்கு வேறொருவரைக் கொண்டு வருவதென்பது ஜெயலலிதாவுக்கு செய்யும் துரோகம். எந்த அரசியல் ஆசையும் கொண்டவனல்ல நான். எந்தக் கருத்து வேறுபாடு வந்தாலும் எடப்பாடி பழனிசாமியுடனான பேச்சுவார்த்தைக்கு நான் தயார். கட்சித் தொண்டர்களிடமிருந்து என்னைப் பிரிக்க முடியாது. அ.தி.மு.க-வில் என்னை ஓரங்கட்ட முடியாது. ஒற்றைத் தலைமை விவகாரத்தில் என்னுடைய கருத்தை கழக நிர்வாகிகளிடம் நான் தெரிவித்துவிட்டேன். ஒற்றைத் தலைமை தேவையா... இல்லையா என்பது குறித்து எடப்பாடி பழனிசாமி அவருடைய கருத்தைத் தெரிவிக்க வேண்டும்" என்றெல்லாம் விரிவாகப் பேசியிருந்தார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதனால், அ.தி.மு.க தலைமை குறித்த அரசியல் களம் மேலும் பரபரப்பானது. இன்னும் ஒரு வாரத்துக்குள்ளாக அ.தி.மு.க பொதுக்குழு, செயற்குழுக் கூட்டம் நடைபெறவிருப்பதால் அ.தி.மு.க-வின் முக்கிய நிர்வாகிகள் சிலரும் ஒற்றைத் தலைமை குறித்து அவரவர் கருத்துகளை வெளிப்படுத்த ஆரம்பிக்க, ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் இருவரும் கட்சி நிர்வாகிகளிடையே தனித்தனியாக ஆலோனை நடத்தத் தொடங்கிவிட்டனர். நேற்று முன்தினம் (16.06.2022) சேலத்தில் கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்திவந்த எடப்பாடி பழனிசாமி, இந்தப் பதற்றமான சூழலுக்கு மத்தியிலும் திருவண்ணாமலை மாவட்டத்துக்கு நேற்று வருகை தந்திருந்தார். புதியநீதிக் கட்சியின் நிறுவனத் தலைவர் ஏ.சி.சண்முகம், ஆரணி அருகே கட்டியுள்ள வெங்கடாஜலபதி கோயில் கும்பாபிஷேக திருவிழாவில் கலந்துகொள்வதற்காகவும், போளூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்குவது உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்காகவும் கள்ளக்குறிச்சி வழியே வருகை தந்த அவருக்கு, திருவண்ணாமலை தெற்கு மாவட்டச் செயலாளர் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி ஏற்பாட்டில் மாவட்ட எல்லை முதலே பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது.

பேனர்
பேனர்

கூட்டத்துக்கு பெருமளவில் தொண்டர்களையும் சேர்த்திருந்தனர். இதுமட்டுமின்றி, எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக, ஒற்றைத் தலைமையை மையப்படுத்தி வழியெங்கிலும் அ.தி.மு.க நிர்வாகிகளால் பேனர்கள் வைக்கப்பட்டதும் கட்சிக்குள் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அந்தப் பாதாகைகளில், "எங்களின் ஒற்றைத் தலைமையே..., கழக பொதுச்செயலாளரே..., ஒற்றைத் தலைமை நாயகரே..." என்றெல்லாம் பதிவிட்டு எடப்பாடி பழனிசாமியை வரவேற்றுள்ளனர் திருவண்ணாமலை அ.தி.மு.க நிர்வாகிகள்.

குறிப்பாக, இது போன்ற பேனர்களில் ஓ.பி.எஸ் புகைப்படம் பெரும்பாலும் இல்லை. எடப்பாடி பழனிசாமியை வரவேற்பதற்கு கூடிய கூட்டத்தால், திருவண்ணாமலை நகரமே சற்று நேரம் ஸ்தம்பித்துப்போயிருக்கிறது என்கிறார்கள் அவரின் ஆதரவாளர்கள். ' ``இந்த பிரமாண்ட வரவேற்பெல்லாம், எடப்பாடி பழனிசாமிக்கு உள்ள ஆதரவைப் பெரிதாகக் காட்டுவதற்காக செய்யப்பட்டவையே" என்கின்றனர் விவரமறிந்த அ.தி.மு.க நிர்வாகிகள் சிலர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதற்கு மத்தியில், திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள காட்டாம்பூண்டி கிராமத்தில் அ.தி.மு.க கொடியை ஏற்றிவைத்து பேசிய எடப்பாடி பழனிசாமி, "அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வில் 7.5% உள் இட ஒதுக்கீடு பெற்றுத் தந்ததால் ஏழை, எளிய மாணவர்கள் பலரும் இன்று மருத்துவம் பயின்றுவருகின்றனர். இதற்கு அ.தி.மு.க-தான் காரணம். ஆனால், மக்களை ஏமாற்றி தி.மு.க ஆட்சிக்கு வந்துவிட்டது. தி.மு.க., தான் அளித்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. நாங்கள் பொங்கல் தொகுப்பு வழங்கும்போது முதலில் 1,000 ரூபாயும், கரும்பும் கொடுத்தோம். அடுத்தது 2,500 ரூபாய் கொடுத்தோம். ஆனால், தி.மு.க அரசு பொங்கல் தொகுப்பில் கொள்ளையடித்திருக்கிறது. மாதம்தோறும் குடும்பத் தலைவிகளுக்கு 1,000 ரூபாய் கொடுக்கப்படும் என்றார்கள். இதுவரை கொடுக்கவில்லை.

எடப்பாடி பழனிச்சாமி
எடப்பாடி பழனிச்சாமி

100 நாள் வேலைத்திட்டம் 150 நாள்களாக உயர்த்தப்படும் என்று கூறினார்கள், செய்யவில்லை. அ.தி.மு.க-தான் ஏற்கெனவே விவசாய கடன்களை ரத்து செய்தது. திமுக-வோ, சொன்னதுபோல விவசாயக் கடன்களை ரத்துசெய்யவில்லை. கல்விக் கடனையும் ரத்துசெய்யவில்லை. முதியோர் உதவித்தொகை வழங்கும் திட்டத்தையும் படிப்படியாகக் குறைத்துவருகின்றனர். அதைத் தடையின்றி கொடுக்க வேண்டும். இல்லையெனில் இதைக் கண்டித்து முதியோர்களை ஒன்றுதிரட்டி அ.தி.மு.க சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism