Published:Updated:

குஜராத் கலவரக் களத்தில் புலனாய்வுப் பணி!- பத்திரிகையாளர் ரானா அயூப்-க்கு மெக்கில் விருது

ரானா அயூப் .பத்திரிகையாளர்
ரானா அயூப் .பத்திரிகையாளர் ( ரானா ஃபேஸ்புக் )

ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் என்றும் பாராமல் உண்மைகளை வெளியே கொண்டு வந்த அவருடைய தைரியமான பணியைப் பாராட்டி அவருக்கு மெக்கில் விருதை ஜோர்ஜியா பல்கலைக்கழகம் வழங்க உள்ளது.

பத்திரிகையாளர் ரானா அயூய்ப்பின், தைரியத்தைப் பாராட்டி அவருக்கு `மெக்கில் விருதை' அமெரிக்காவின் ஜோர்ஜியா பல்கலைக்கழகம் வழங்க உள்ளது.

2002 -ம் ஆண்டு முதல் 2010 வரை குஜராத்தில் நடந்த படுகொலைகள், போலி என்கவுன்டர்கள் குறித்து உண்மையை வெளிக்கொண்டு வர தன் உயிரையும் துச்சமாக நினைத்து புலனாய்வுப் பத்திரிகையாளராகப் பணியாற்றியவர் ரானா அயூப்.

தெஹல்கா இதழில் பணியாற்றிய காலத்தில், 2002 -ல் இஸ்லாமியர்களுக்கு எதிராகக் குஜராத்தில் நடந்த படுகொலைகள் குறித்து `Gujarat Files: Anatomy of a Cover Up என்ற ஒரு நூலை எழுதியுள்ளார். குறிப்பாக, தன் பெயரை மைதிலி என மாற்றிக்கொண்டதோடு உருவத்திலும் மாற்றங்கள் செய்துகொண்டு, `undercover journalism' மேற்கொண்டு சட்ட விரோதக் கொலைகள் மற்றும் மதவாத வன்முறைகள் குறித்த உண்மைகளையும் தான் வெளியே கொண்டு வந்த விதத்தை அந்தப் புத்தகத்தில் குறிப்பிட்டிருப்பார்.

ரானா அயூப்
ரானா அயூப்
பேஸ் புக்

மேலும், குஜராத் மாநிலத்தில் அப்போது உள்துறைச் செயலாளராக இருந்த அசோக் நாராயணன் என்பவரைப் பேட்டி எடுத்து ரகசியமாக ஒலிப்பதிவு செய்து அதை இந்த நூலில் வெளியிட்டிருக்கிறார். அந்த நூல் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு, `குஜராத் கோப்புகள்: மறைக்கப்பட்ட கோரவடிவங்கள்' என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் புத்தகம் மோடிமீது சரமாரியான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வெளியாகி இருந்தது.

இதைத் தொடர்ந்தே அரசியல் களத்தில் மோடி மீது பலவாறான விமர்சனங்களும் எழுந்தன. ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் என்றும் பாராமல் உண்மைகளை வெளியே கொண்டு வந்த அவருடைய தைரியமான பணியைப் பாராட்டி அவருக்கு மெக்கில் விருதை ஜோர்ஜியா பல்கலைக்கழகம் வழங்க உள்ளது.

இந்த விருது வரும் ஏப்ரல் 22 -ம் தேதி பெய்டன் ஆண்டர்சன் மன்றத்தில் நடைபெறும் நிகழ்வில் வழங்கப்படும் என்று அந்தப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

ரானா அயூப் பத்திரிகையாளர்
ரானா அயூப் பத்திரிகையாளர்

14 ஆண்டுகள் பத்திரிகைத் துறையில் உள்ள அயூப்பிற்கு இந்திய ஜனாதிபதியிடமிருந்து `ஒருமைப்பாடு மற்றும் சிறந்து விளங்கியதற்காக சமஸ்கிருத விருது' ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளது. அதோடு அவர் 2017 -ம் ஆண்டில் புலனாய்வுப் பத்திரிகைக்கான குளோபல் ஷைனிங் லைட் விருதையும் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு