Published:Updated:

``அன்புக்கு நன்றி... நாம் போட்டியாளர்களே தவிர எதிரிகள் அல்ல!'' - வெங்கைய நாயுடு உருக்கம்

வெங்கைய நாயுடு ( ட்விட்டர் )

``அவையைச் சிறப்பாக வழிநடத்த என்னால் முடிந்த அனைத்தையும் செய்தேன். தெற்கு, வடக்கு, கிழக்கு, மேற்கு, வடகிழக்கு என எல்லா தரப்புக்கும் வாய்ப்பளிக்க முயன்றேன்." - வெங்கைய நாயுடு

``அன்புக்கு நன்றி... நாம் போட்டியாளர்களே தவிர எதிரிகள் அல்ல!'' - வெங்கைய நாயுடு உருக்கம்

``அவையைச் சிறப்பாக வழிநடத்த என்னால் முடிந்த அனைத்தையும் செய்தேன். தெற்கு, வடக்கு, கிழக்கு, மேற்கு, வடகிழக்கு என எல்லா தரப்புக்கும் வாய்ப்பளிக்க முயன்றேன்." - வெங்கைய நாயுடு

Published:Updated:
வெங்கைய நாயுடு ( ட்விட்டர் )

இந்தியாவின் குடியரசு துணைத் தலைவர் வெங்கைய நாயுடு புதன்கிழமை பதவியிலிருந்து விலகுகிறார். அவருக்குப் பிறகு புதிய குடியரசு துணைத் தலைவராக ஜக்தீப் தன்கர் ஆகஸ்ட் 11-ம் தேதி பதவியேற்கிறார். இந்த நிலையில், வெங்கைய நாயுடுவுக்கு இன்று வழியனுப்புவிழா நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. அப்போது பிரதமர் மோடி, குடியரசு துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான வெங்கைய நாயுடுவுக்கு நன்றி தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய வெங்கைய நாயுடு, `` இந்தியாவின் குடியரசு துணைத் தலைவராகப் பணியாற்ற வாய்ப்பளித்த பிரதமர் நரேந்திர மோடிக்கும், பா.ஜ.க-வுக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். எதிர்க்கட்சிகள் ஆளுங்கட்சியை எதிரியாகக் கருதாமல் போட்டியாகக் கருத வேண்டும்.

வெங்கைய நாயுடு
வெங்கைய நாயுடு
Rajyasabha TV

குடியரசு துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக பிரதமர் மோடி என்னிடம் தெரிவித்தபோது, என் கண்களிலிருந்து கண்ணீர் வந்தது. இந்தப் பொறுப்பை கட்சி எனக்கு அளித்ததால், கட்சியிலிருந்து ராஜினாமா செய்தேன். கட்சியைவிட்டுச் செல்வதால் கண்ணீர் வந்தது. அவையைச் சிறப்பாக வழிநடத்த என்னால் முடிந்த அனைத்தையும் செய்தேன். தெற்கு, வடக்கு, கிழக்கு, மேற்கு, வடகிழக்கு என எல்லா தரப்புக்கும் வாய்ப்பளிக்க முயன்றேன். உங்கள் ஒவ்வொருவருக்கும் நேரம் கொடுக்கப்பட்டது. மேல் சபையாகிய நமக்கு அதிக பொறுப்பு இருக்கிறது. ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவைப் பார்க்கிறது. இந்தியா நகர்ந்துகொண்டிருக்கிறது.

நாம் எதிரிகள் அல்ல, போட்டியாளர்கள். போட்டியில் மற்றவர்களை மிஞ்சுவதற்கு நாம் கடினமாக உழைக்க வேண்டும், ஆனால் மற்றவர்களை வீழ்த்தக் கூடாது. நாடாளுமன்றம் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம். உங்களின் அன்புக்கும் பாசத்துக்கும் நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்'' என்றார்.