Election bannerElection banner
Published:Updated:

`ரஜினியின் சம்மதத்துக்காகக் காத்திருக்கிறோம்!' - தமிழக பா.ஜ.க தரப்பு

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த் ( விகடன் )

நடிகர் ரஜினிகாந்த் எப்போதும் ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுப்பவர். நாட்டில் வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் நதிநீர் இணைப்புக் கொள்கைகளில் மிகுந்த ஈடுபாடு உடையவர். நாங்களும் இதை நோக்கித்தான் பயணிக்கிறோம் என்பதால் இயல்பாகவே அவர் எங்களுடன் பொருந்திப் போகிறார்.

தமிழிசை செளந்தரராஜன் தெலங்கானாவின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். இந்தச் செய்தி வெளியானதிலிருந்தே அடுத்த தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் யார் என்கிற ஊகங்கள் எழுந்தன. அது, பா.ஜ.க-வின் உள்ளிருக்கும் பிரதிநிதிகளைவிட அக்கட்சிக்கு வெளியே இருக்கும் நடிகர் ரஜினிகாந்த்தான் தலைவர் ஆவார் எனப் பேச்சு எழுந்தது.

தமிழிசை
தமிழிசை
விகடன்

ஆனால், ரஜினிகாந்த்துக்கு பா.ஜ.க-வில் சேர்வதற்கு விருப்பமில்லை எனவும் வரும் ஜனவரி மாதம் தன்னுடைய தனிக்கட்சியை அறிவிப்பார் எனவும் செய்திகள் கசிந்தன. இதுகுறித்து தமிழக பா.ஜ.க என்ன சொல்கிறது எனத் தெரிந்துகொள்வதற்காக அக்கட்சியின் ஐ.டி விங் மாநிலச் செயலாளர் நிர்மல் குமாரிடம் பேசினோம்.

``நடிகர் ரஜினிகாந்த் எப்போதும் ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுப்பவர். நாட்டில் வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் நதிநீர் இணைப்புக் கொள்கைகளில் மிகுந்த ஈடுபாடு உடையவர். நாங்களும் இதை நோக்கித்தான் பயணிக்கிறோம் என்பதால் இயல்பாகவே அவர் எங்களுடன் பொருந்திப்போகிறார்.

மோடியுடன் ரஜினி
மோடியுடன் ரஜினி

தமிழக மக்களுக்கு நல்லது செய்ய வேண்டுமென்கிற ஏக்கம் அவருக்கு நீண்டநாள்களாக இருக்கிறது. காலம் கனியட்டும் என்றே அவர் காத்திருந்தார். அவருக்கான மிகச் சரியான நேரம் இதுதான்.

ரஜினிகாந்த்துக்கு நேரடியாக பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருடன் தொடர்பிருக்கிறது. ஆகவே, அடுத்த தமிழக பா.ஜ.க தலைவராக அவர் வர வேண்டுமெனத் தமிழகத்திலுள்ள அக்கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய அவசியமில்லை.

அமித் ஷாவுடன் ரஜினி
அமித் ஷாவுடன் ரஜினி

பா.ஜ.க தலைவருக்கான வெற்றிடம் உருவாகி இருக்கிற சூழலிலேயே, ரஜினிகாந்த் தலைமையேற்று எங்களை வழிநடத்தினால் சிறப்பாக இருக்கும். அவரின் சம்மதத்துக்காகக் காத்திருக்கிறோம்" என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு