Published:Updated:

’இந்தியாவில் எதிர்த்தாலும், உலக அளவில் ஆதரவளிப்போம்’ - காஷ்மீர் விவகாரத்தில் சசிதரூர்!

சத்யா கோபாலன்

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக, உலக அளவில் மத்திய அரசுக்கு ஆதரவளிப்போம் என காங்கிரஸின் சசிதரூர் தெரிவித்துள்ளார்.

shashi tharoor
shashi tharoor

ஜம்மு- காஷ்மீருக்கு அளிக்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு, காங்கிரஸ் உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகள் தங்களின் கண்டனங்களைத் தெரிவித்துவந்தன. ஆனாலும் சில எதிர்கட்சித் தலைவர்கள், காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் முடிவை ஆதரித்தனர். தற்போது, அவர்களின் வரிசையில் திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்.பி சசிதரூரும் இணைந்துள்ளார்.

kashmir
kashmir

நேற்று டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 'நாங்கள் பிரதமர் மோடிக்கு ஆதரவாக இருப்போம்' எனக் கூறியுள்ளார். அவர் பேசும்போது, “ இந்தியாவின் உள்நாட்டு விஷயங்களைப் பொறுத்தவரை பாகிஸ்தானுக்கு எந்த விதமான இடமும் இல்லை.

நாங்கள் எதிர்க்கட்சியாக உள்ளதால், காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசை விமர்சிக்க முடியும். ஆனால், இந்தியாவுக்கு வெளியில் நாங்கள் மத்திய அரசுக்குத் துணை நிற்போம். இந்தியாவின் ஒரு அங்குல (Inch) த்தைக் கூட பாகிஸ்தானுக்கு தரமாட்டோம்” என்று கூறியுள்ளார்.

Modi
Modi

பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெஹ்மோத் குரேஷி, மூன்று நாள் பயணமாக நேற்று ஜெனீவாவுக்குச் சென்றுள்ளார். அங்கு நடக்கும் 42-வது ஐக்கிய மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் காஷ்மீர் பிரச்னையை அவர் எழுப்ப உள்ளார் என்ற தகவல் வெளியானதைத் தொடர்ந்து, சசிதரூர் இவ்வாறு பேசியுள்ளார்.

Vikatan

தொடர்ந்து, “ இன்று பாகிஸ்தான் அரசு நம் நாட்டின்மீது குற்றம் சுமத்த முயற்சி செய்கிறது. கடந்த காலத்திலும் அவர்கள் இதையேதான் செய்தார்கள். கில்கிட் - பலுசிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போன்ற பகுதிகளை அவர்கள் மாற்றினர். எனவே, நம்மைக் குறை சொல்லும் உரிமை அவர்களுக்கு இல்லை. ஐ.நா சபைக்குச் சென்று பிரதமர் மோடி பேச வேண்டும். நாங்கள் அவருக்குத் துணை நிற்போம். காஷ்மீர் சகோதரர்கள் எதிர்கொள்ளும் வேதனைகள் உண்மையானவை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அங்குள்ள மக்கள் இணையம் மற்றும் தொலைபேசி இல்லாமல் இருந்தனர்.

shashi tharoor
shashi tharoor
Twitter/@ShashiTharoor

பெற்றோர்களால் தங்கள் குழந்தைகளுடன் பேச முடியவில்லை. அரசியல் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். இந்தப் பிரச்னைகளை நாங்கள் நாடாளுமன்றத்தில் எழுப்பியுள்ளோம், அவற்றை நாட்டுக்குள் தொடர்ந்து எழுப்புவோம்” என்று கூறியுள்ளார். முன்னதாக, மோடியையும் மத்திய அரசையும் பாராட்டி சசிதரூர் பேசியது, அவரது கட்சியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது மீண்டும் மோடிக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்துள்ளார் சசிதரூர்.