Published:Updated:

`இல.கணேசன் அழைத்ததால் வந்தேன்; ஸ்டாலினை பார்க்காமல் எப்படி செல்ல முடியும்!"- சென்னையில் மம்தா பேட்டி

மம்தா பானர்ஜி - ஸ்டாலின்

``இது மரியாதைச் சந்திப்புதான். தேர்தல் சந்திப்பு அல்ல. அரசியல் குறித்தும் எதுவும் பேசவில்லை." - ஸ்டாலின்

`இல.கணேசன் அழைத்ததால் வந்தேன்; ஸ்டாலினை பார்க்காமல் எப்படி செல்ல முடியும்!"- சென்னையில் மம்தா பேட்டி

``இது மரியாதைச் சந்திப்புதான். தேர்தல் சந்திப்பு அல்ல. அரசியல் குறித்தும் எதுவும் பேசவில்லை." - ஸ்டாலின்

Published:Updated:
மம்தா பானர்ஜி - ஸ்டாலின்

முன்னாள் பா.ஜ.க தலைவரும், மேற்கு வங்க மாநிலத்தின் ஆளுநருமான இல.கணேசன் விடுத்திருக்கும் அழைப்பின்பேரில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று மாலை சென்னை வந்தடைந்தார். சென்னை வந்ததும் மம்தா பானர்ஜி, முன்னதாக அறிவித்திருந்தபடி முதல்வர் ஸ்டாலினை, அவரின் இல்லத்துக்கே சென்று நேரில் சந்தித்தார். அதைத் தொடர்ந்து, ஸ்டாலின் குடும்பத்தினரையும் மம்தா சந்தித்துப்பேசினார்.

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

அதையடுத்து ஸ்டாலினும், மம்தாவும் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய ஸ்டாலின், ``கவர்னர் இல.கணேசன் இல்லத்தில் நடைபெறக்கூடிய நிகழ்ச்சிக்கு வந்திருக்கக்கூடிய இந்தச் சூழ்நிலையில், என்னுடைய இல்லத்துக்கு வருகைதந்து மரியாதை சந்திப்புக்காக என்னைச் சந்திருக்கிறார் மம்தா. அதேநேரத்தில், `நீங்கள் மேற்கு வங்கத்துக்கு என்னுடைய விருந்தினராக வரவேண்டும்' என்று அழைப்பு விடுத்திருக்கிறார். அந்த அழைப்பை நானும் ஏற்றுக்கொண்டிருக்கிறேன்.

மம்தா பானர்ஜி - ஸ்டாலின்
மம்தா பானர்ஜி - ஸ்டாலின்

மேலும், இது மரியாதைச் சந்திப்புதான். தேர்தல் சந்திப்பு அல்ல. தேர்தல் குறித்து எதுவும் பேசவில்லை. அரசியல் குறித்தும் எதுவும் பேசவில்லை" எனக் கூறினார்.

அவரையடுத்து பேசிய மம்தா, ``ஸ்டாலின் என்னுடைய சகோதரர் போன்றவர். குடும்ப நிகழ்ச்சி தொடர்பாக கவர்னர் விடுத்த அழைப்புக்காகச் சென்னை வந்திருக்கிறேன். ஆனால், ஸ்டாலினைப் பார்க்காமல் நான் எப்படி சென்னையிலிருந்து செல்லமுடியும். இரண்டு அரசியல் தலைவர்களும் சேர்ந்து அரசியலைத் தவிர வேறு விஷயங்களைப் பற்றியும் பேசலாம், நாங்கள் அரசியல் பற்றி எதுவும் பேசவில்லை. அரசியலைவிட வளர்ச்சி முக்கியம் என்று நான் நினைக்கிறேன்" என்று கூறினார்.