Published:Updated:

``சரியானவர்களின் கருத்துக்கு பதிலளிக்க வேண்டும், ஆனால்..."- பிரசாந்த் கிஷோரைச் சாடிய பீகார் முதல்வர்

பிரசாந்த் கிஷோர் - நிதிஷ் குமார்

"நாங்கள் என்ன செய்திருக்கிறோம் என மக்களுக்குத் தெரியும். மற்றவர்களின் கருத்துக்கு பதில் சொல்லவேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை" என பீகார் முதல்வர் நிதிஷ் குமார், பிரசாந்த் கிஷோரைக் கடுமையாகச் சாடியுள்ளார்.

``சரியானவர்களின் கருத்துக்கு பதிலளிக்க வேண்டும், ஆனால்..."- பிரசாந்த் கிஷோரைச் சாடிய பீகார் முதல்வர்

"நாங்கள் என்ன செய்திருக்கிறோம் என மக்களுக்குத் தெரியும். மற்றவர்களின் கருத்துக்கு பதில் சொல்லவேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை" என பீகார் முதல்வர் நிதிஷ் குமார், பிரசாந்த் கிஷோரைக் கடுமையாகச் சாடியுள்ளார்.

Published:Updated:
பிரசாந்த் கிஷோர் - நிதிஷ் குமார்

பிரசாந்த் கிஷோர், நிதிஷ் குமாரின் ஜனதா தளம் கட்சியில் கடந்த 2018-ம் ஆண்டில் இணைந்தார். ஒரு மாதத்துக்குள், அவர் கட்சியின் துணைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். இருப்பினும், குடியுரிமை சட்டத்துக்கு எதிரான பிரசாந்த் கிஷோரின் நிலைப்பாட்டுக்காக 2020-ல் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

பீகார் முதல்வர் நிதிஷ் குமார்
பீகார் முதல்வர் நிதிஷ் குமார்

இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை, "கடந்த 30 ஆண்டுகளாக லாலு பிரசாத் யாதவ் மற்றும் நிதிஷ் குமார் ஆட்சி பீகாரை நாட்டின் மிகவும் பின்தங்கிய மற்றும் ஏழ்மையான மாநிலமாக மாற்றியுள்ளது.

முன்னேறிய மாநிலம் என்ற அந்தஸ்தை பீகார் மாநிலம் பெற வேண்டுமென்றால், கடந்த 10-15 ஆண்டுகளில் நடந்த பாதையில் பயணித்தால் முடியாது" எனத் தேர்தல் வியூக அமைப்பாளரான பிரசாந்த் கிஷோர் விமர்சித்திருந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பிரஷாந்த் கிஷோர் - நிதிஷ் குமார்
பிரஷாந்த் கிஷோர் - நிதிஷ் குமார்

பிரசாந்த் கிஷோரின் விமர்சனத்துக்கு பதிலளிக்கும்விதமாக பீகார் முதல்வர் நிதிஷ் குமார்,"தேர்தல் வியூக அமைப்பாளரான கிஷோரின் கருத்து முக்கியமானதல்ல. மேலும், அரசு செய்த பணிகளை மாநில மக்கள் அறிவார்கள்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பீகாரில் நாங்கள் நல்லது செய்தோமா இல்லையா என்பது மக்களான உங்களுக்குத் தெரியும். யாரின் கருத்தும் முக்கியமில்லை. உண்மை எதுவோ அதுவே முக்கியம்.

நிதிஷ் குமார்
நிதிஷ் குமார்

என்னென்ன வேலைகள் நடந்துள்ளன, எத்தனை வேலைகள் நடந்துள்ளன என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். எனவே கருத்து தெரிவிப்பவர்களுக்கு நீங்களே பதிலைத் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

சரியானவர்கள் சொன்னால், அவர்களின் கருத்துகளுக்கு நாங்கள் பதிலளிக்க வேண்டும், ஆனால் இந்த விஷயத்தில், உண்மை என்னவென்று உங்களுக்குத் தெரியும் என்பதால், அதை நீங்களே செய்யலாம்" என்று கூறினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism