Published:Updated:

``சாவர்க்கர் குறித்துப் பேச பாஜக-வுக்கு எந்த அதிகாரமும் கிடையாது!" - உத்தவ் தாக்கரே சாடல்

உத்தவ் தாக்கரே

``நாங்கள் வீர் சாவர்க்கர் மீது மரியாதை வைத்திருக்கிறோம். சாவர்க்கர் குறித்து ராகுல் காந்தி தெரிவித்த கருத்தில் எங்களுக்கு உடன்பாடில்லை." - உத்தவ் தாக்கரே

``சாவர்க்கர் குறித்துப் பேச பாஜக-வுக்கு எந்த அதிகாரமும் கிடையாது!" - உத்தவ் தாக்கரே சாடல்

``நாங்கள் வீர் சாவர்க்கர் மீது மரியாதை வைத்திருக்கிறோம். சாவர்க்கர் குறித்து ராகுல் காந்தி தெரிவித்த கருத்தில் எங்களுக்கு உடன்பாடில்லை." - உத்தவ் தாக்கரே

Published:Updated:
உத்தவ் தாக்கரே

வீர் சாவர்க்கர் குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இரண்டு நாள்களுக்கு முன்பு விமர்சித்திருந்தார். சாவர்க்கர் சிறையில் இருந்தபோது ஆங்கிலேயருக்கு மன்னிப்புக் கடிதம் எழுதியது குறித்து ராகுல் காந்தி விமர்த்திருந்தார். இந்த நிலையில், அவரின் கருத்துக்கு சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பதிலளித்திருக்கிறார். இது தொடர்பாக பேட்டியளித்த தாக்கரே, ``சாவர்க்கர் மீது நாங்கள் மரியாதை வைத்திருக்கிறோம். அவருக்கு எதிராக ராகுல் காந்தி தெரிவித்த கருத்தில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. ஆனால், அவரின் ஜோடோ யாத்திரைக்கு சிவசேனா ஆதரவு கொடுக்கிறது. மகாராஷ்டிராவின் ஷெகாவ் என்ற இடத்தில் நடக்கும் ராகுல் காந்தியின் பொதுக்கூட்டத்தில் நான் கலந்துகொள்ள மாட்டேன்" என்று தெரிவித்தார்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளும்படி உத்தவ் தாக்கரே, சரத் பவாருக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்திருக்கிறது. ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க-வைக் கடுமையாக விமர்சித்த உத்தவ் தாக்கரே, ``சுதந்திரப் போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் பங்கேற்றதில்லை. சாவர்க்கர் குறித்தும், சுதந்திரப் போராட்ட தியாகிகள் குறித்தும் அதிகமாகப் பேசும் பா.ஜ.க-வினர் ஏன் சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது கொடுக்கவில்லை. பாரத ரத்னா விருது கொடுக்கும் அதிகாரம் பிரதமருக்கு இருந்தும் ஏன் வீர் சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது கொடுக்கவில்லை. சுதந்திரப் போராட்டத் தியாகிகள் குறித்தும், சாவர்க்கர் குறித்தும் எங்களிடம் கேள்வி கேட்கும் முன்பு சுதந்திரப் போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் பங்களிப்பு என்ன என்பதை நீங்கள் (பா.ஜ.க) சொல்லுங்கள்.

சுதந்திரப் போராட்டத்தின்போது நீங்கள் (பா.ஜ.க) இல்லை. ஆனால் ஆர்.எஸ்.எஸ் இருந்தது. அந்த அமைப்புக்கு சுதந்திரப் போராட்டத்தில் எந்தப் பங்கும் கிடையாது. ஜம்மு காஷ்மீரில் மக்கள் ஜனநாயகக் கட்சியுடன் சேர்ந்து கூட்டணி அமைத்து ஆட்சியமைத்த பா.ஜ.க-வுக்கு சாவர்க்கர் குறித்துப் பேச எந்த அதிகாரமும் கிடையாது" என்றும் குறிப்பிட்டார்.