Published:Updated:

``மாநில உரிமை, மொழி உரிமை காக்கப் பாடுபடுவோம்" - தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்

முதல்வர் ஸ்டாலின்

தமிழக முதல்வரும், தி.மு.க தலைவருமான ஸ்டாலின், ``மாநில உரிமை - மொழி உரிமை காத்திட, கண்ணும் கருத்துமாக தொடர்ந்து பாடுபடுவோம்" எனத் தொண்டர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

``மாநில உரிமை, மொழி உரிமை காக்கப் பாடுபடுவோம்" - தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்

தமிழக முதல்வரும், தி.மு.க தலைவருமான ஸ்டாலின், ``மாநில உரிமை - மொழி உரிமை காத்திட, கண்ணும் கருத்துமாக தொடர்ந்து பாடுபடுவோம்" எனத் தொண்டர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

Published:Updated:
முதல்வர் ஸ்டாலின்

``உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக அல்லாமல், ஆங்கில மொழிக்கு பதிலாக இந்தியை ஏற்றுக்கொள்ள வேண்டும். அலுவல் மொழியான இந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது" என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அண்மையில் பேசியது பெரும் சர்ச்சையானது. அமித் ஷாவின் இக்கூற்றுக்கு, ``ஆங்கிலத்துக்கு பதிலாக இந்தியைப் பயன்படுத்துங்கள் என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா சொல்வது இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு வேட்டு வைக்கும் செயல்" என தமிழக முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், ``மாநில உரிமை, மொழி உரிமை காத்திட, கண்ணும் கருத்துமாகத் தொடர்ந்து பாடுபடுவோம்" என திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

ஸ்டாலின்- அமித் ஷா
ஸ்டாலின்- அமித் ஷா

அக்கடிதத்தில், ``தமிழ்மொழி, தமிழ் மக்கள், தமிழ்நாடு, இந்த மூன்றின் வளர்ச்சியை அடிப்படையாகக்கொண்டு ‘அனைவருக்கும் அனைத்தும்’ என்கிற உன்னத லட்சியத்துடன் உத்வேகமாகப் பயணிக்கிறது உங்களில் ஒருவனான என் தலைமையில் பணிபுரியும் திராவிட முன்னேற்றக் கழக அரசு. இருண்டு கிடந்த தமிழ்நாட்டுக்கு, கடந்த மே மாதம் உதயசூரியனால் ஒளிபரவி விடியல் புலர்ந்தது. தமிழ்நாடுதான் என் தாயகம். தமிழ்நாட்டு மக்கள்தான் என்னை முதலமைச்சராகத் தேர்ந்தெடுத்துள்ளார்கள். அவர்களின் நம்பிக்கைக்குரியவனான என் கவனம் முதன்மை பெறுவது, தமிழ்நாட்டின் மீதுதான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கழக உடன்பிறப்புகளுக்கு ஸ்டாலின் கடிதம்
கழக உடன்பிறப்புகளுக்கு ஸ்டாலின் கடிதம்

தமிழ்நாட்டில் செயல்படுத்துகின்ற `திராவிட மாடல்’ ஆட்சியின் தாக்கமும் வீச்சும், இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் வழிகாட்டியாக உள்ளது. ஞாயிறு எனும் சூரியன்போலவே ஒவ்வொரு நாளும் ஒளிவீசிடும் அளவில் ஓயாமல் உழைப்பதன்றி வேறு பணி ஏது? தமிழ்நாட்டை வளர்த்தெடுப்போம். அதன் தாக்கத்தைப் பிற மாநிலங்களிலும் ஏற்படுத்துவோம். மாநில உரிமை, மொழி உரிமை காத்திட, கண்ணும் கருத்துமாகத் தொடர்ந்து பாடுபடுவோம். இந்திய ஒன்றியத்தில் எவராலும், சிறிதும் தவிர்க்க முடியாத இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம் என்பதை, வரலாறு ஏற்கும் வண்ணம், மீண்டும் மீண்டும் நிரூபித்துக் காட்டுவோம்" என ஸ்டாலின் குறிப்பிட்டிருந்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism