Published:Updated:

``எங்கள் ஆட்சியில் மோடி, அமித் ஷாவுக்கு எதிராக ஏஜென்சிகளை நாங்கள் அனுப்பவில்லை" - காங்கிரஸ்

பாஜக - காங்கிரஸ்

``மோடிக்கு சம்மன் அனுப்பிய சிறப்பு புலனாய்வுக்குழுவை உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும்தான் அமைத்தன. அதில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு எந்தப் பங்கும் இல்லை என்பதுதான் உண்மை."

``எங்கள் ஆட்சியில் மோடி, அமித் ஷாவுக்கு எதிராக ஏஜென்சிகளை நாங்கள் அனுப்பவில்லை" - காங்கிரஸ்

``மோடிக்கு சம்மன் அனுப்பிய சிறப்பு புலனாய்வுக்குழுவை உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும்தான் அமைத்தன. அதில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு எந்தப் பங்கும் இல்லை என்பதுதான் உண்மை."

Published:Updated:
பாஜக - காங்கிரஸ்

நேஷனல் ஹெரால்டு வழக்கில், சோனியா காந்தியிடம் நேற்றுமுதல் அமலாக்கத்துறை இரண்டாம் கட்ட விசாரணை நடத்திவருகிறது. இந்த நிலையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில், மோடி, அமித் ஷாவுக்கு எதிராக ஏஜென்சிகள் மூலம் தாங்கள் சம்மன் அனுப்பவில்லை என காங்கிரஸ் கூறியிருக்கிறது.

நேஷனல் ஹெரால்டு விவகாரத்தில் அமலாக்கத்துறை, முன்னதாக ராகுல் காந்தியிடம் விசாரணையை முடித்திருந்த நிலையில், காங்கிரஸின் இடைக்கால தலைவர்த் சோனியா காந்தியிடம் விசாரணை நடத்திவருகிறது. இந்த விவாகரத்தில், சோனியா காந்திக்கு எதிரான விசாரணையைக் கண்டித்து டெல்லியில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் நடத்தியது.

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சக்திசிங் கோஹில்
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சக்திசிங் கோஹில்

இந்த நிலையில் காங்கிரஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சக்திசிங் கோஹில், ``2002-ம் ஆண்டு குஜராத் கலவரத்தை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வுக்குழுவில் (எஸ்ஐடி), நரேந்திர மோடி ஆஜரானார் என்று கூறி இந்திய மக்களைத் தவறாக வழிநடத்த பா.ஜ.க-வும், அதன் பினாமிகளும் முயல்கின்றனர். ஆனால், மோடிக்கு சம்மன் அனுப்பிய சிறப்பு புலனாய்வுக்குழுவை உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும்தான் அமைத்தன. அதில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு எந்தப் பங்கும் இல்லை என்பதுதான் உண்மை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அமித் ஷா, மோடி
அமித் ஷா, மோடி

மேலும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் மோடி அல்லது அமித் ஷாவுக்கு, ஏஜென்சிகள் மூலமாகவோ அல்லது அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட எந்த சிறப்புப் புலனாய்வுக்குழு மூலமாகவோ விசாரணைக்கு சம்மன் அனுப்பவில்லை என்பதில் தெளிவாக இருக்க வேண்டும்" என்று கூறினார்.

அமலாக்கத்துறையின் விசாரணைக்கு எதிராக ராஜ்கோட்டில் காங்கிரஸார் நடத்திய போராட்டத்தில், ராகுல் காந்தியை போலீஸார் இன்று கைதுசெய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.