Published:Updated:

`அயோத்தி தீர்ப்பு குறித்து மறு சீராய்வு மனு’ - சன்னி வக்ஃபு வாரியம்

அயோத்தி விவகாரம் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு இன்று வெளியாகியுள்ளது. இது தங்களுக்குத் திருப்திகரமாக இல்லை என சன்னி வக்ஃபு வாரியம் தெரிவித்துள்ளது.

அயோத்தி
அயோத்தி

உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் தொடர்பான வழக்கு பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் அதன் இறுதித் தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தால் இன்று வழங்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், மூத்த நீதிபதிகள் பாப்டே, சந்திரசூட், அசோக் பூஷன் மற்றும் அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கின் தீர்ப்பை ஒருமித்தமாக வழங்கியுள்ளனர்.

அயோத்தி
அயோத்தி

அதில்,``1857-ம் ஆண்டுக்கு முன்புவரை, இந்துக்கள் சர்ச்சைக்குரிய கட்டடத்தின் உள்பகுதியில் வழிபடத் தடையில்லை. 1857-ல் கட்டடத்தின் உள்பகுதிக்கும் வெளிப்பகுதிக்கும் இடையே தடுப்புகள் உருவாக்கப்பட்டன.

மசூதியின் அடித்தளத்தில் இருக்கும் அமைப்பு இஸ்லாம் முறைப்படி இல்லை என்பதற்கு ஆதாரம் உள்ளது. பாபர் மசூதி இருந்த இடம் முழுக்க முழுக்க தங்களது என இஸ்லாமிய அமைப்புகள் நிரூபிக்கவில்லை. அயோத்தியில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த மாற்று இடம் வழங்க வேண்டும்.

அயோத்தி நிலம்! - 1528 முதல் 2019 தீர்ப்புவரை நடந்தது என்ன? #AyodhyaVerdict

வக்ஃபு வாரியம் ஏற்கும் இடத்தில் 5 ஏக்கர் நிலம் தர மத்திய அரசு மற்றும் உத்தரப்பிரதேச அரசு வழங்க வேண்டும். சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை ராமர் கோயில் கட்டுவதற்காக ஒதுக்க வேண்டும். சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டலாம். இதற்காக புதிய அறக்கட்டளை ஒன்றை 3 மாதத்தில் மத்திய அரசு அமைக்க வேண்டும். அந்த அறக்கட்டளை ராமர் கோயில் கட்டுவதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும்” எனத் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு குறித்து இந்தியா முழுவதும் பரவலான பல கருத்துகள் கூறப்பட்டு வருகின்றன. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அனைவரும் மதித்து, எந்த வித அசம்பாவித சம்பவங்களிலும் ஈடுபடக்கூடாது என அரசியல் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

`இஸ்லாமியர்களுக்கு மாற்று இடம்; அயோத்தியில் ராமர் கோயில் கட்டலாம்!'-உச்ச நீதிமன்றம் #AYODHYAVERDICT

இந்நிலையில் தீர்ப்பு பற்றிப் பேசியுள்ள சன்னி வக்ஃபு வாரியத்தின் வழக்கறிஞர் ஜாஃபர்யப் ஜிலானி (Zafaryab Jilani,), ``நாங்கள் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்கிறோம். ஆனால், இந்தத் தீர்ப்பு திருப்திகரமாக இல்லை. மறு சீராய்வு மனுத் தாக்கல் தொடர்பாக விரைவில் முடிவெடுப்போம். எங்களுக்கு வழங்கப்படுவதாகக் கூறிய 5 ஏக்கர் நிலத்தில் எந்த மதிப்பும் இல்லை.

ஜாஃபர்யப் ஜிலானி
ஜாஃபர்யப் ஜிலானி
ANI

நீதிபதி, நாட்டின் மத நல்லிணக்கம் பற்றியும் பல்வேறு சமூகங்களின் நம்பிக்கைகள் பற்றியும் பேசியுள்ளதை வரவேற்கிறோம். அயோத்தி சர்ச்சைக்குரிய நிலத்தில் இருக்கும் வெளி முற்றத்தைப் பற்றி எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால், உள் முற்றம் மீதான தீர்ப்பு திருப்திகரமாக இல்லை என்று நாங்கள் உணர்கிறோம். அமைதியான முறையில் நாங்கள் முறையிடுவோம்.” எனத் தெரிவித்துள்ளார்.