Published:Updated:

``தவறு செய்துவிட்டோம்; காங்கிரஸ் என்ற வார்த்தைக்கு காப்புரிமை பெற்றிருக்க வேண்டும்" - ஜெய்ராம் ரமேஷ்

காங்கிரஸ் எம்.பி ஜெய்ராம் ரமேஷ் ( Yann Forget / Wikimedia Commons )

``இன்று நம் நாட்டில், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் எனக் காங்கிரஸ் பெயரிடப்பட்ட பல கட்சிகள் இருப்பதை நீங்களே காண்பீர்கள்." - ஜெய்ராம் ரமேஷ்

குஜராத், இமாச்சலப் பிரதேசத்தின் சட்டப்பேரவை தேர்தலில், இரண்டு மாநிலங்களிலுமே பெரிய அளவில் மீண்டும் பா.ஜ.க-வே வெற்றி பெறப்போவதாக வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துகணிப்பு முடிவுகள் வெளியானதையடுத்து, காங்கிரஸ் தலைவர்கள் அதிருப்தியில் இருக்கின்றனர். இருப்பினும் பெரும்பாலான காங்கிரஸ் தலைவர்கள் இது வெறும் கருத்துக்கணிப்பு மட்டும் தான் என கூறிவருகின்றனர்.

காங்கிரஸ்
காங்கிரஸ்

இந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி ஜெய்ராம் ரமேஷ், காங்கிரஸ் இல்லாமல் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை என்பது சாத்தியமில்லை என்று தெரிவித்திருக்கிறார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஜெய்ராம் ரமேஷ், ``பல்வேறு கட்சிகள் பல ஆண்டுகளாக எங்களிடமிருந்து நிறைய எடுத்துக்கொண்டன. ஆனால் எங்களுக்கென்று எதுவும் கொடுக்கவில்லை.

காங்கிரஸ் எம்.பி ஜெய்ராம் ரமேஷ்
காங்கிரஸ் எம்.பி ஜெய்ராம் ரமேஷ்

நாங்கள் தவறு செய்துவிட்டோம். `காங்கிரஸ்' வார்த்தைக்கு காப்புரிமை பெற்றிருக்க வேண்டும் என்று நான் முன்பே ஒருமுறை கூறியிருந்தேன். இன்று நம் நாட்டில், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் என காங்கிரஸ் பெயரிடப்பட்ட பல கட்சிகள் இருப்பதை நீங்களே காண்பீர்கள். இருப்பினும் வலுவான காங்கிரஸ் இல்லாமல் வலுவான எதிர்க்கட்சியை உருவாக முடியாது" என்று கூறினார்.

ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளின் நிறுவனர்களும், காங்கிரஸில் ஏற்கெனவே இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.