Published:Updated:

துணை ஜனாதிபதி தேர்தல்: கைவிரித்த திரிணாமுல்; எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக இருக்க காங்கிரஸ் கோரிக்கை

காங்கிரஸ்

`குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில் யாரையும் ஆதரிக்கப்போவதில்லை’ என திரிணாமுல் காங்கிரஸ் அறிவித்துள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் யாவும் ஒற்றுமையாகச் செயல்பட வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியிருக்கிறது.

`குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில் யாரையும் ஆதரிக்கப்போவதில்லை’ என திரிணாமுல் காங்கிரஸ் அறிவித்திருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் யாவும் ஒற்றுமையாகச் செயல்பட வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியிருக்கிறது. குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல் முடிந்திருக்கும் நிலையில், குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல், ஏற்கெனவே அறிவித்தபடி ஆகஸ்ட் 6-ம் தேதி நடைபெறவிருக்கிறது. இதற்கான வேட்பாளர்களாக, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பாக மேற்கு வங்க ஆளுநர் ஜக்தீப் தன்கரும், எதிர்க்கட்சிகள் சார்பாக மார்கரெட் ஆல்வா-வும் போட்டியிடுகின்றனர்.

திரிணாமுல் காங்கிரஸ் பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி
திரிணாமுல் காங்கிரஸ் பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி

ஆனால், குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் ஓர் அங்கமாக விளங்கிய திரிணாமுல் காங்கிரஸ், இந்தத் தேர்தலில் யாரையும் ஆதரிக்கப்போவதில்லை என விலகியிருக்கிறது. இதற்கான காரணத்தை திரிணாமுல் காங்கிரஸின் பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜி, ``35 எம்.பி-க்களைக் கொண்ட திரிணாமுல் காங்கிரஸைக் கலந்தாலோசிக்காமல் எதிர்க்கட்சிகளால் வேட்பாளர் அறிவிக்கப்பட்டார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மாநிலங்களவை எதிர்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே
மாநிலங்களவை எதிர்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே

நாங்கள் சில பெயர்களை முன்மொழிந்தோம், அவை ஆலோசனையில் இருந்தன. ஆனால் எங்கள் ஆலோசனையின்றி பெயர் முடிவு செய்யப்பட்டது" என நேற்று தெரிவித்தார்.

இந்த நிலையில் திரிணாமுல் காங்கிரஸின் இந்த திடீர் முடிவு குறித்து மாநிலங்களவை எதிர்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ``எதிர்க்கட்சிகள் யாவும் ஒற்றுமையாகச் செயல்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அதேசமயம் திரிணாமுல் காங்கிரஸின் இந்த திடீர் முடிவுக்கான காரணத்தையும் கண்டறிய முயல்வோம்" என தெரிவித்திருக்கிறார்.