Published:Updated:

``ராகுலைக் கட்டாயப்படுத்துவோம்; அவரே தலைவராகப் பொறுப்பேற்க வேண்டும்" - மல்லிகார்ஜுன கார்கே

மாநிலங்களவை எதிர்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே

மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவரான மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி மீண்டும் தலைவராகப் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

``ராகுலைக் கட்டாயப்படுத்துவோம்; அவரே தலைவராகப் பொறுப்பேற்க வேண்டும்" - மல்லிகார்ஜுன கார்கே

மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவரான மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி மீண்டும் தலைவராகப் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

Published:Updated:
மாநிலங்களவை எதிர்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே

2014, 2019 நாடாளுமன்றத் தேர்தல்களில் தோல்வியடைந்த காங்கிரஸ், கடைசியாக நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலிலும் படுதோல்வியடைந்திருந்தது. அதைத் தொடர்ந்து, காங்கிரஸுக்குப் புதிய தலைவர் நியமிக்கப்பட வேண்டும் என்று கட்சிக்குள்ளேயே பேச்சுகளும் எழுந்தன. தற்போது அதற்கான வேலைகளும் நடைபெற்றுவருகின்றன. மேலும், தேர்தலில் யார் யார் போட்டியிடுகின்றனர் என்பது பற்றி எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

அசோக் கெலாட், ராகுல் காந்தி
அசோக் கெலாட், ராகுல் காந்தி

ஒருபுறம், 2019-ம் ஆண்டு தேர்தலின் தோல்வி காரணமாகத் தலைவர் பதவியை ராஜினாமா செய்த ராகுல் காந்தி, மீண்டும் அந்தப் பதவியை ஏற்க விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. மறுபுறம், கட்சியின் மூத்த தலைவர் மற்றும் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், ராகுல் காந்தியே மீண்டும் தலைவராகப் பொறுப்பேற்க வேண்டும் என்று வெளிப்படையாகக் கூறிவருகிறார். இந்த நிலையில் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவரான மல்லிகார்ஜுன கார்கேவும், ராகுல் காந்தி மீண்டும் தலைவராகப் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

மல்லிகார்ஜுன் கார்கே
மல்லிகார்ஜுன் கார்கே
ட்விட்டர்

இது தொடர்பாக தனியார் ஊடகத்திடம் நேற்று பேசிய மல்லிகார்ஜுன கார்கே, ``கட்சியை வழிநடத்த விரும்பும் எவரும், நாடு முழுவதும் அறியப்பட வேண்டும். கன்னியாகுமரி முதல் காஷ்மீர், மேற்கு வங்கம் முதல் குஜராத் வரை ஆதரவைப் பெற்றிருக்க வேண்டும். மேலும் அவர் முழு காங்கிரஸ் கட்சியினராலும் நன்கு அங்கீகரிக்கப்பட்டவராகவும், ஏற்றுக்கொள்ளப்பட்டவராகவும் இருக்க வேண்டும். எனில் மாற்று வழியை நீங்கள் கூறுங்கள்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

ராகுல் காந்தியைத் தவிர கட்சியில் வேறு யார் இருக்கிறார்கள். நாங்கள் அவரைக் கேட்போம். காங்கிரஸ் தலைவராக மீண்டும் பதவியேற்குமாறு அவரைக் கட்டாயப்படுத்துவோம். அவருக்குப் பின்னால் நாங்கள் நிற்கிறோம். மேலும் நாங்கள், அவரைத் தொடர முயல்வோம்" என்று கூறினார்.

காங்கிரஸில் தலைவர் பதவிக்கான தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவிருப்பதாகக் கூறப்படும் நிலையில், அதற்கான தேதி அறிவிப்பு நாளை நடைபெறும் காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் அறிவிக்கப்படலாம்.