Published:Updated:

`விட்டுக் கொடுக்கவும் மாட்டோம்... விலகிப் போகவும் மாட்டோம்!’ - அ.ம.மு.க-வின் அதிரடி போஸ்டர்

அ.ம.மு.க போஸ்டர்
அ.ம.மு.க போஸ்டர் ( வி.ஶ்ரீனிவாசுலு )

ஜெயலலிதாவின் நினைவு தினத்துக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டர் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நான்காம் ஆண்டு நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. நினைவுதினத்தை ஒட்டி, மெரினாவிலுள்ள அவரின் நினைவிடத்தில் பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மரியாதை செலுத்திவருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் அவரின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திவருகிறார்கள். இதன் தொடர்ச்சியாக அவரின் நினைவுதினத்துக்குப் பலரும் போஸ்டர்கள் ஒட்டிவருகிறார்கள்.

அ.ம.மு.க போஸ்டர்
அ.ம.மு.க போஸ்டர்
வி.ஶ்ரீனிவாசுலு

அந்த வகையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டர் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது. அந்த போஸ்டரில், ``விட்டுக்கொடுக்கவும் மாட்டோம். விலகிப் போகவும் மாட்டோம்" என்ற வசனங்களோடு சென்னையின் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருக்கின்றன. சசிகலா விரைவில் விடுதலையாகக்கூடும் என்று கூறப்படும் நிலையில், இந்த போஸ்டரில் எழுதப்பட்டிருக்கும் வசனங்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பிவருகின்றன.

அ.ம.மு.க போஸ்டர் மீது ஒட்டப்பட்ட அ.தி.மு.க போஸ்டர்
அ.ம.மு.க போஸ்டர் மீது ஒட்டப்பட்ட அ.தி.மு.க போஸ்டர்
வி.ஶ்ரீனிவாசுலு

அதே நேரத்தில், அ.ம.மு.க சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் மீது அ.தி.மு.க சார்பில், `ஒரு தாயின் சபதம்’ என்ற வசனத்துடன் அச்சடிக்கப்பட்ட பெரிய போஸ்டர்கள் பல இடங்களில் ஒட்டப்பட்டிருக்கின்றன. இதன் மூலம் அ.ம.மு.க சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டரை மறைக்கும் நோக்கில் அ.தி.மு.க போஸ்டரை ஒட்டிவருகிறதா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு