Published:Updated:

உக்ரைன்: ``சக இந்தியர்கள் அனைவரையும் மீட்கும் வரை ஓய மாட்டோம்!” - வெளியுறவுத்துறை அமைச்சர்

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர்

ரஷ்யா-உக்ரைன் இடையே போர்ப் பதற்றம் நிலவிவரும் நிலையில், `ஆபரேஷன் கங்கா’ என்ற திட்டத்தின் மூலம் இந்தியர்கள் மீட்கப்பட்டுவருகின்றனர்.

ரஷ்யா-உக்ரைன் இடையே போர் நடைபெற்றுவரும் நிலையில், உக்ரைனில் விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. உக்ரைனில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் வசித்துவருகின்றனர். இதன் காரணமாக இந்தியர்களை மீட்க `ஆபரேஷன் கங்கா’ என்ற பெயரில் நடந்துவரும் இந்தப் பணிகளை மத்திய அரசு தொடர்ந்து கண்காணித்துவருகிறது. மத்திய அரசின் நடவடிக்கைகள் காரணமாக உக்ரைனின் அண்டை நாடுகளான ஹங்கேரி, ருமேனியா போன்ற நாடுகளிலிருந்து இந்திய மக்கள் விமானம் மூலமாக அழைத்துவரப்படுகின்றனர்.

இந்நிலையில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தன்னுடைய ட்விட்டர் பதிவில், ``உக்ரைனில் சிக்கித்தவிக்கும் இந்தியர்கள் அனைவரையும் மீட்கும் வரை ஓய மாட்டோம். உக்ரைனிலிருந்து மீட்கப்பட்ட 218 இந்தியர்களுடன் 9-வது சிறப்பு விமானம் டெல்லி புறப்பட்டது'' எனப் பதிவிட்டுள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism