Published:Updated:

`நாங்கள் இந்துக்கள் அல்ல; தனி மத அங்கீகாரம் வேண்டும்!' - குடியரசுத் தலைவரிடம் பழங்குடியினர் கோரிக்கை

பழங்குடியினர் அதிகாரமளிக்கும் பிரச்சாரம்

``எங்களுடைய சொந்த வாழ்க்கை முறை என்பது, மத பழக்கவழக்கங்கள், கலாசாரம் மற்றும் மத எண்ணங்கள் என மற்ற மதங்களிலிருந்து வேறுபட்ட ஒன்று" - ஜார்கண்ட் பழங்குடியினத் தலைவர்

`நாங்கள் இந்துக்கள் அல்ல; தனி மத அங்கீகாரம் வேண்டும்!' - குடியரசுத் தலைவரிடம் பழங்குடியினர் கோரிக்கை

``எங்களுடைய சொந்த வாழ்க்கை முறை என்பது, மத பழக்கவழக்கங்கள், கலாசாரம் மற்றும் மத எண்ணங்கள் என மற்ற மதங்களிலிருந்து வேறுபட்ட ஒன்று" - ஜார்கண்ட் பழங்குடியினத் தலைவர்

Published:Updated:
பழங்குடியினர் அதிகாரமளிக்கும் பிரச்சாரம்

ஜார்கண்ட், ஒடிசா, அஸ்ஸாம் உட்பட 5 மாநிலங்களிலிருந்து, பல்வேறு பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர்கள், தங்கள் மதத்தை 'சர்னா'-வாக மத்திய அரசு அங்கீகரிக்க வேண்டும் என டெல்லியில் நேற்று போராட்டம் நடத்தியிருக்கின்றனர்.

ஜார்கண்ட், பீகார், ஒடிசா, மேற்கு வங்கம், அஸ்ஸாம் என 5 மாநிலங்களில் கிட்டத்தட்ட 50 மாவட்டங்களில் பெரும்பான்மையாக இருக்கும் சந்தால் பழங்குடியினத்தைச் சேர்ந்த 250 பேர், ஆதிவாசி செங்கல் அபியான் எனும் பழங்குடியினர் அதிகாரமளிக்கும் பிரசாரத்தின் கீழ் `சர்னா' தர்ம நெறிமுறைகளை அரசு அங்கீகரிக்க வேண்டும் எனக் கோரிக்கை முன்வைத்திருக்கின்றனர்.

சல்கான் முர்மு
சல்கான் முர்மு

இது குறித்து ஊடகங்களிடம் பேசிய ஜார்கண்டின் முக்கிய பழங்குடித் தலைவரும், முன்னாள் எம்.பி-யுமான சல்கான் முர்மு, ``ஆதிவாசிகளான நாங்கள் இந்துக்களோ அல்லது கிறிஸ்தவர்களோ இல்லை. எங்களுடைய சொந்த வாழ்க்கை முறை என்பது, மத பழக்கவழக்கங்கள், கலாசாரம் மற்றும் மத எண்ணங்கள் என மற்ற மதங்களிலிருந்து வேறுபட்ட ஒன்று. இது தொடர்பாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் எங்கள் மதத்தை `சர்னா'-வாக அங்கீகரிக்க வலியுறுத்த விரும்பினோம், ஆனால் அவரைச் சந்திக்கும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைக்கவில்லை. அதையடுத்து, எங்கள் கோரிக்கைகள் அடங்கிய கோப்புகளை காவல்துறை மூலம் குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பித்தோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ராம்நாத் கோவிந்த்
ராம்நாத் கோவிந்த்

எனவே எங்களின் மதத்தை 'சர்னா' என்று அரசாங்கம் அங்கீகரித்து, அதன்படி வரவிருக்கும் மக்கள்தொகை கணக்கெடுப்பில், ஆதிவாசிகளின் எண்ணிக்கையை உறுதிசெய்யும் விதமாக ஏற்பாடு செய்யவேண்டும் என்று நாங்கள் கோரிக்கை வைக்கிறோம்" எனக் கூறினார்.

நேற்றைய தினம், 1855-ம் ஆண்டில் இதே நாளில் நடைபெற்ற ஆங்கிலேயர்களுக்கு எதிரான சந்தால் கிளர்ச்சி தொடக்கத்தின் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.