Published:Updated:

``முழு அமைச்சரவையைக் கலைக்கும் திட்டமில்லை, ஆனால்..!" - மம்தா பானர்ஜி

மம்தா பானர்ஜி

``அமைச்சரவை நாளை மறுநாள் மாற்றியமைக்கப்படவிருக்கிறது. நான்கு முதல் ஐந்து பேர் புதுமுகங்களாக இடம்பெற வாய்ப்பிருக்கிறது.'' - மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி

``முழு அமைச்சரவையைக் கலைக்கும் திட்டமில்லை, ஆனால்..!" - மம்தா பானர்ஜி

``அமைச்சரவை நாளை மறுநாள் மாற்றியமைக்கப்படவிருக்கிறது. நான்கு முதல் ஐந்து பேர் புதுமுகங்களாக இடம்பெற வாய்ப்பிருக்கிறது.'' - மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி

Published:Updated:
மம்தா பானர்ஜி

மேற்கு வங்க மாநிலத்தில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் நியமனம் செய்வதற்கு நடந்த தேர்வில் முறைகேடு நடந்ததாகப் புகார் எழுந்தது. இதையடுத்து, அந்த மாநில தொழில்துறை அமைச்சராக இருந்த பார்த்தா சாட்டர்ஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் ஜூலை 23-ம் தேதி கைதுசெய்தனர். இதைத் தொடர்ந்து, பார்த்தா சாட்டர்ஜியை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. இந்த நிலையில், மேற்கு வங்க அமைச்சரவையிலிருந்து பார்த்தா சாட்டர்ஜி நீக்கப்படுவதாக மேற்கு வங்க அரசு சார்பில் அறிக்கை வெளியிட்டப்பட்டது.

மம்தா -
மம்தா -

இந்த நிலையில், இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, ``மேற்கு வங்க அமைச்சரவை முற்றிலும் கலைக்கப்பட்டு புதிய அமைச்சரவை அமைக்கப்படும் என பலரும் பலவிதத்தில் செய்தியாக எழுதிவருகின்றனர். ஆனால் முழு அமைச்சரவையைக் கலைத்துவிட்டு புதிய அமைச்சரவையை அமைக்கும் திட்டம் எங்களிடம் இல்லை. சுப்ரதா முகர்ஜி, சதன் பாண்டே ஆகிய அமைச்சர்களைக் கட்சி இழந்துவிட்டது. பார்த்தா சாட்டர்ஜி தற்போது சிறையில் இருக்கிறார். அதனால் அவர்களுடைய பணிகளையும் சேர்த்து கவனிக்கவேண்டியிருக்கிறது. இவை அனைத்தையும் என்னால் தனியாக கவனித்துக்கொள்வது என்பது சாத்தியமற்றது. அதனால், அமைச்சரவை நாளை மறுநாள் மாற்றியமைக்கப்படவிருக்கிறது. நான்கு முதல் ஐந்து பேர் புதுமுகங்களாக இடம்பெற வாய்ப்பிருக்கிறது'' என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!