Published:Updated:

மேற்கு வங்கம்: ``பிர்பூம் வன்முறையில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு இழப்பீடு, அரசு வேலை" - மம்தா

மம்தா பானர்ஜி

பிர்பூம் பகுதி பாக்டுய் கிராமத்தில் நடந்த வன்முறையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை முதல்வர் மம்தா பானர்ஜி நேரில் சந்தித்து, ஆறுதல் கூறினார்.

Published:Updated:

மேற்கு வங்கம்: ``பிர்பூம் வன்முறையில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு இழப்பீடு, அரசு வேலை" - மம்தா

பிர்பூம் பகுதி பாக்டுய் கிராமத்தில் நடந்த வன்முறையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை முதல்வர் மம்தா பானர்ஜி நேரில் சந்தித்து, ஆறுதல் கூறினார்.

மம்தா பானர்ஜி

மேற்கு வங்கத்தில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பஞ்சாயத்துத் தலைவர் கொல்லப்பட்ட சம்பவமும், அதைத் தொடர்ந்து பிர்பூம் பகுதியில் மர்ம கும்பலால் கலவரம் ஏற்பட்டு வீடுகள் எரிக்கப்பட்ட சம்பவமும் மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. வீடுகள் எரிக்கப்பட்ட சம்பவத்தில், இரண்டு குழந்தை, பெண்கள் உட்பட 8 பேர் ஒரே வீட்டில் உடல் கருகி உயிரிழந்தனர். இந்த வன்முறை காரணமாக மேற்கு வங்க ஆளுநருக்கும், முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் இடையே கடிதப் போர் வெடித்தது. இந்தச் சம்பவம் தொடர்பாக பா.ஜ.க குழு கோரிக்கை வைத்ததன் அடிப்படையில், உள்துறை அமித் ஷா வன்முறை தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு மேற்கு வங்க அரசுக்கு உத்தரவிட்டிருந்தார்.

வன்முறை நடந்த பிர்பூம் பகுதி பாக்டுய் கிராமம்
வன்முறை நடந்த பிர்பூம் பகுதி பாக்டுய் கிராமம்

இதுமட்டுமல்லாமல் பிரதமர் மோடியம் கூட இந்த வன்முறையைக் கண்டித்து, ``இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை, இதுபோன்ற குற்றவாளிகளை ஊக்குவிப்பவர்களை ஒருபோதும் மன்னிக்க வேண்டாம் என்று வங்காள மக்களை நான் கேட்டுக்கொள்கிறேன். குற்றவாளிகள் கைது செய்யப்படுவதை உறுதிசெய்ய மத்திய அரசு அனைத்து வகையான உதவிகளையும் மாநில அரசுக்கு செய்யும்" என்று நேற்று கூறியிருந்தார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

இந்த நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, வன்முறை நடந்த பிர்பூம், பாக்டுய் கிராமத்துக்கு இன்று நேரில் சென்று பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களைச் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். பின்னர் பேசிய மம்தா, ``உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாயும், வீடுகளை மீண்டும் கட்டுவதற்கு தலா ஒரு லட்ச ரூபாயும் இழப்பீடு வழங்கப்படும்" என்று கூறினார். மேலும், இறந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களில் தலா ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.