Published:Updated:

``உங்கள் தொகுதியையும், மக்களையும் பாருங்கள்!" - மொய்த்ராவுக்கு மம்தா கண்டிப்புடன் அறிவுரை

மம்தா பானர்ஜி

``கரீம்பூர், உங்களுடைய தொகுதியல்ல. அதை, அபு தாஹேர் பார்த்துக்கொள்வார். நீங்கள் உங்கள் மக்களவைத் தொகுதியையும், அந்தப் பகுதியையும் பார்த்துக்கொள்ளுங்கள்." - மம்தா பானர்ஜி

``உங்கள் தொகுதியையும், மக்களையும் பாருங்கள்!" - மொய்த்ராவுக்கு மம்தா கண்டிப்புடன் அறிவுரை

``கரீம்பூர், உங்களுடைய தொகுதியல்ல. அதை, அபு தாஹேர் பார்த்துக்கொள்வார். நீங்கள் உங்கள் மக்களவைத் தொகுதியையும், அந்தப் பகுதியையும் பார்த்துக்கொள்ளுங்கள்." - மம்தா பானர்ஜி

Published:Updated:
மம்தா பானர்ஜி

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா, நாடாளுமன்றத்திலும் சரி, அதற்கு வெளியிலும் சரி அரசியல்ரீதியாக பா.ஜ.வு-க்கு எதிரான கருத்துகள் மற்றும் வாதங்களைத் தொடர்ச்சியாக முன்வைத்துவருகிறார். அதற்கு பா.ஜ.க தரப்பிலிருந்தும் எதிர் விமர்சனங்களையும் மொய்த்ரா எதிர்கொண்டுதான் வருகிறார். இது ஒருபுறமிருக்க, மொய்த்ரா தன்னுடைய சொந்தக் கட்சி நிர்வாகிகளிடையே சற்று மோதல் போக்கை எதிர்கொள்வதாகக் கூறப்படுகிறது. இதனால் இது கட்சியைச் சேதப்படுத்தும் என்றும் சொல்லப்படுகிறது.

 மஹூவா மொய்த்ரா
மஹூவா மொய்த்ரா

இந்த நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கொல்கத்தாவில் தன்னுடைய கட்சி எம்.பி மொய்த்ராவை பகிரங்கமாகக் கண்டித்திருப்பது பேசுபொருளாகியிருக்கிறது.

மொய்த்ராவின் சொந்த ஊரான நாடியா மாவட்டத்தில் கட்சி நிலை குறித்து விவாதிக்கும்போது பேசிய மம்தா, ``மஹுவா, நீங்கள் அவர்களுடன் இணைந்து வேலைசெய்ய வேண்டும். அவர்களுக்கென்று தனியாக நேரம் ஒதுக்க வேண்டும். ஒருவருக்குப் பதவி கொடுக்கப்படுவதும், கொடுக்கப்படாமலிருப்பதும், உங்களுடைய நோக்கமல்ல.

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

அனைவரையும் எப்படி அனுசரிப்பதென்பதைக் கட்சி முடிவு செய்யும். ஆனால், முக்கியமாகக் கட்சிக்கு நீங்கள் நேரம் ஒதுக்க வேண்டும். மேலும் கரீம்பூர், உங்களுடைய தொகுதியல்ல. அதை, அபு தாஹேர் பார்த்துக்கொள்வார். நீங்கள் உங்கள் மக்களவைத் தொகுதியையும் அந்தப் பகுதியையும் பார்த்துக்கொள்ளுங்கள்" என்று எச்சரித்தார்.

இதற்கு முன்னதாக, நாடியாவில் உட்கட்சி மோதல் தொடர்பாக மொய்த்ராவை, மம்தா பகிரங்கமாகத் திட்டிய வீடியோ வைரலானது குறிப்பிடத்தக்கது.