Published:Updated:

சினிமா பாணியில் களமிறங்கிய மேற்கு வங்கம்; போக்குவரத்து விதி மீறல்களுக்கு 10 மடங்கு அபராதம் உயர்வு!

Traffic Jam ( Vikatan )

ஸ்டாப் லைனை தாண்டுதல், வேகமாக ஓட்டுதல் மற்றும் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுதல், மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் இல்லாதது, அவசரக்கால வாகனங்களைச் செல்ல அனுமதிக்காதது உள்ளிட்ட போக்குவரத்து விதி மீறல்களுக்கு அபராதம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.

சினிமா பாணியில் களமிறங்கிய மேற்கு வங்கம்; போக்குவரத்து விதி மீறல்களுக்கு 10 மடங்கு அபராதம் உயர்வு!

ஸ்டாப் லைனை தாண்டுதல், வேகமாக ஓட்டுதல் மற்றும் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுதல், மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் இல்லாதது, அவசரக்கால வாகனங்களைச் செல்ல அனுமதிக்காதது உள்ளிட்ட போக்குவரத்து விதி மீறல்களுக்கு அபராதம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.

Published:Updated:
Traffic Jam ( Vikatan )

மேற்கு வங்க அரசு சமீபத்தில் போக்குவரத்து அபராதங்களை (திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ்), கடுமையாக உயர்த்தியுள்ளது. சில விதி மீறல்களுக்கு 10 மடங்கு வரை அபராதம்  உயர்த்தப்பட்டுள்ளது.

ஜனவரி 24-ம் தேதி வெளியிட்ட அறிவிப்பின்படி, ஸ்டாப் லைனை தாண்டுதல், போக்குவரத்தின் எதிர் திசையில் வாகனம் ஓட்டுதல், வேகமாக மற்றும்  குடித்துவிட்டு வாகனம் ஓட்டுதல், மாசுக் கட்டுப்பாட்டுச் சான்றிதழ் இல்லாதது, அவசரக்கால வாகனங்களைச் செல்ல அனுமதிக்காதது போன்ற போக்குவரத்து விதி மீறல்களுக்கு அபராதம் உயர்த்தப்பட்டுள்ளது.

Traffic Police
Traffic Police

புதிய அறிவிப்பின்படி, ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டினாலும், சீட்பெல்ட் அணியாமல் கார் ஓட்டினாலும் 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. இதற்குமுன் இதற்கான அபராதத்தொகை 100 ரூபாயாக இருந்துள்ளது.  

ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வண்டி ஓட்டினால், 500 ரூபாயில் இருந்து அபராதத் தொகை 5,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.  

அபாயகரமான முறையில் வாகனம் ஓட்டுவது, சாலையில் பந்தயம் நடத்துவதற்கான அபராதத் தொகை 5,000 ரூபாயாக மாற்றப்பட்டுள்ளது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

வேகமாக வாகனம் ஓட்டிய குற்றத்தை ஒருவர் மூன்று ஆண்டு களுக்குள் மீண்டும் மீண்டும் செய்தால், அந்த நபருக்கு 10,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். சாலைப் பாதுகாப்பு, ஒலி மற்றும் காற்று மாசுபாடு ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக ஒருவர் விதிமுறைகளை மீறுவது கண்டறியப் பட்டால், அவருக்கு ரூ.10,000 அபராதமாக விதிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல், அந்த நபரின் ஓட்டுநர் உரிமம் மூன்று மாதங்களுக்கு ரத்து செய்யப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.  

மருத்துவமனை, பள்ளி அல்லது வேறு ஏதேனும் அமைதியான பகுதிகளின் அருகில் யாராவது ஹாரன் அடித்தால் முதல் தடவை 1,000 ரூபாயும், அடுத்தடுத்த முறை கண்டறியப்பட்டால் 2,000 ரூபாயும்  அபராதம் விதிக்கப்படும்.

Traffic Police
Traffic Police
Vikatan

அவசரக்கால வாகனங்கள் உடனடியாகச் செல்ல அனுமதிக்கத் தவறினால், போக்குவரத்து ஊழியர்கள் ஒரு ஓட்டுநருக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கலாம்.

மக்களுக்கு போக்குவரத்து விதிமீறல் அபராதத்தை அதிகரிப்பதன் நோக்கம், சாலை விபத்துகளின் எண்ணிக்கையை குறைப்பதே என மாநில அரசு கூறியுள்ளது. அபராதம் அதிகரித்துள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமாக இருப்பார்கள் என போலீஸாரும்  எதிர்பார்க்கின்றனர்.