Published:Updated:

``நீங்கள் ஒருவரை அடித்தால், பாஜக-வில் 2 பேரை திருப்பியடிப்போம்!" - மே.வங்க அமைச்சர் காட்டம்

திரிணாமுல் அமைச்சர் குஹா

பேரணியில் பா.ஜ.க நபர் ஒருவர் போலீஸ் வாகனத்துக்குத் தீவைப்பது போன்ற வீடியோவை திரிணாமுல் காங்கிரஸ் ட்விட்டரில் வெளியிட்டு விமர்சித்தது.

``நீங்கள் ஒருவரை அடித்தால், பாஜக-வில் 2 பேரை திருப்பியடிப்போம்!" - மே.வங்க அமைச்சர் காட்டம்

பேரணியில் பா.ஜ.க நபர் ஒருவர் போலீஸ் வாகனத்துக்குத் தீவைப்பது போன்ற வீடியோவை திரிணாமுல் காங்கிரஸ் ட்விட்டரில் வெளியிட்டு விமர்சித்தது.

Published:Updated:
திரிணாமுல் அமைச்சர் குஹா

மேற்கு வங்க மாநிலத்தில் எதிர்க்கட்சியாக இருக்கும் பா.ஜ.க, ஆளுங்கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் ஊழல் செய்ததாக கொல்கத்தா, ஹவுரா போன்ற பகுதியில் பேரணி நடத்தினர். இதில், ஆங்காங்கே ஏற்பட்ட கலவரத்தில், போலீஸ் வாகனங்களுக்குத் தீ வைக்கப்பட்டது. இதற்கு, பா.ஜ.க-வினரும், திரிணாமுல் காங்கிரஸாரும் ஒருவரையொருவர் தாக்கிப் பேசுகின்றனர். மேலும், பேரணியில் பா.ஜ.க நபர் ஒருவர் போலீஸ் வாகனத்துக்குத் தீவைப்பது போன்ற வீடியோவை திரிணாமுல் காங்கிரஸ் ட்விட்டரில் வெளியிட்டு விமர்சித்தது.

மேற்கு வங்க  கலவரம்
மேற்கு வங்க கலவரம்

இந்த நிலையில், திரிணாமுல் அமைச்சரொருவர் பா.ஜ.க-வைக் கடுமையாகச் சாடியிருக்கிறார். மேற்கு வங்கத்தின் சிடல்குச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய வடக்கு வங்காள வளர்ச்சிதுறை அமைச்சர் குஹா, ``நாங்கள் ஒன்றும் வளையல் அணிந்திருக்கவில்லை. எங்கள் ஆட்கள் யாரவது தாக்கப்பட்டால் நாங்கள் சும்மா இருக்க மாட்டோம்.

திரிணாமுல் அமைச்சர் குஹா
திரிணாமுல் அமைச்சர் குஹா

மேலும் அவர்கள் எங்களில் ஒருவரை அடித்தால், அவர்களில் இருவரைத் திருப்பி அடிப்போம் என்பதை அவர்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்" என்று காட்டமாகக் கூறினார்.

இது பேசுபொருளாகவே, மேற்கு வங்க பாஜ.க செய்தித் தொடர்பாளர் சாமிக் பட்டாச்சார்யா உடனடியாக, ``திரிணாமுல் காங்கிரஸின் தவறான செயல்கள் அம்பலமாகி வருவதால், விரக்தியில் அவர்கள் இதுபோன்ற கருத்துகளை வெளியிடுகின்றனர்" என்று பதில்கருத்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.