Published:Updated:

``மேற்கு வங்கம் மினி பாகிஸ்தானாக மாறுகிறது!" - மம்தா அரசை விமர்சித்த திரிபுரா முதல்வர்

திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா

``மேற்கு வங்கத்தில் இடதுசாரிகள் செய்ததைப்போல மூன்று, நான்கு மடங்கு அவர்கள் அதிகமாக செய்கிறார்கள்." - திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா

``மேற்கு வங்கம் மினி பாகிஸ்தானாக மாறுகிறது!" - மம்தா அரசை விமர்சித்த திரிபுரா முதல்வர்

``மேற்கு வங்கத்தில் இடதுசாரிகள் செய்ததைப்போல மூன்று, நான்கு மடங்கு அவர்கள் அதிகமாக செய்கிறார்கள்." - திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா

Published:Updated:
திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா

திரிபுரா மாநில முதல்வர் மாணிக் சாஹா, ``மேற்கு வங்க மாநிலமானது, மினி பாகிஸ்தானாக மாறிவருகிறது" என மம்தா அரசை விமர்சித்திருக்கிறார்.

வரும் ஜூன் 23-ம் தேதியன்று, திரிபுரா மாநிலத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதில், தேர்தல் நடைபெறும் நான்கு தொகுதிகளிலும் மாநிலத்தின் ஆளுங்கட்சியான பா.ஜ.க-வை எதிர்த்து திரிணாமுல் காங்கிரஸ் போட்டியிடுகிறது. இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை பா.ஜ.க வேட்பாளர்களை ஆதரித்து நடத்திய பிரசார கூட்டத்தில் திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா, திரிணாமுல் காங்கிரஸைக் கடுமையாகச் சாடினார்.

திரிணாமுல் காங்கிரஸ்
திரிணாமுல் காங்கிரஸ்

அப்போது பேசிய மாணிக் சாஹா, ``மேற்கு வங்கத்தில் இடதுசாரிகள் செய்ததைப்போல மூன்று, நான்கு மடங்கு அவர்கள் அதிகமாக செய்கிறார்கள். மேற்கு வங்க மக்கள் இதனால் மிகவும் அதிருப்தியில் இருக்கிறார்கள். ஷ்யாமா பிரசாத் முகர்ஜியின் முன்னெடுப்பால்தான் மேற்கு வங்கம், பாகிஸ்தானின் கைகளுக்குச் செல்லாமல் இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்கிறது. ஆனால், தற்போது அவர்கள் மேற்கு வங்கத்தை மினி பாகிஸ்தானாக மாற்றிவருவதை நீங்களே காண்கிறீர்கள். அதுமட்டுமல்லாமல், 100 பா.ஜ.க தொழிலாளர்களை அவர்கள் கொன்றுவிட்டனர். வரும் 2023 சட்டமன்றத் தேர்தலில் கட்சியின் முகமாக நான்தான் இருப்பேன்" என்றார்.

மாணிக் சாஹா கடந்த மாதம்தான், திரிபுராவின் முதல்வராகப் பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism