Published:Updated:

பதவியேற்கும் உதயநிதி... மாறுகிறதா இலாகாக்கள்? - அமைச்சர்களின் துறைகளில் என்னென்ன மாற்றங்கள்?!

முதல்வர் ஸ்டாலின்

உதயநிதி அமைச்சராக பதவி ஏற்கும் நிலையில், அமைச்சரவையிலும் சில அதிரடி இலாகா மாற்றங்கள் அரங்கேற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பதவியேற்கும் உதயநிதி... மாறுகிறதா இலாகாக்கள்? - அமைச்சர்களின் துறைகளில் என்னென்ன மாற்றங்கள்?!

உதயநிதி அமைச்சராக பதவி ஏற்கும் நிலையில், அமைச்சரவையிலும் சில அதிரடி இலாகா மாற்றங்கள் அரங்கேற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Published:Updated:
முதல்வர் ஸ்டாலின்

திமுக இளைஞரணிச் செயலாளரும், எம்.எல்.ஏ-வுமான உதயநிதி, 14-ம் தேதி காலை 9.30 மணிக்கு அமைச்சராக பதவி ஏற்க உள்ளார். ராஜ்பவனில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளார். இதைத்தொடர்ந்து, அமைச்சரவையிலும் சில இலாகா மாற்றங்கள் நடைபெறவுள்ளதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சர் ஐ பெரியசாமி
அமைச்சர் ஐ பெரியசாமி
Minister I periyasamy

இதுதொடர்பாக சீனியர் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளிடம் விசாரித்தோம், தி.மு.க ஆட்சி பொறுப்பேற்றதும் அறிவிக்கப்பட்ட அமைச்சரவை பட்டியலில் கட்சியின் சீனியரான ஐ.பெரியசாமிக்கு கூட்டுறவுத்துறை வழங்கப்பட்டது. ஆனால், அவருக்கு அதில் சுத்தமாக விருப்பமில்லை. இதனால்தான், பசுமை வழிச்சாலையில் ஒதுக்கப்பட்ட அமைச்சர் பங்களாவில் அவர் இன்று வரை குடியேறாமல் இருக்கிறார்.

அதேபோல கட்சி தலைமையிடமும் தன்னை வேறு துறைக்கு மாற்ற வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி கொண்டே இருந்தார். முதல்வர் ஸ்டாலின் தென்காசிக்கு ரயில் சென்ற போதும், அமைச்சரவை மாற்றம் குறித்து பெரியசாமி மற்றும் அமைச்சர் கே.என்.நேருவிடம் ஆலோசனை நடத்தி இருக்கிறார்.

அமைச்சர் பெரியகருப்பன்
அமைச்சர் பெரியகருப்பன்

அதன்படி, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக இருக்கும் பெரியகருப்பனின் இலாகா, பெரியசாமிக்கு மாற்றப்படவுள்ளதாக தகவல். பெரியகருப்பன் கூட்டுறவு துறைக்கு மாற்றப்பட உள்ளார் என்கிறார்கள். அதேபோல, வனத்துறை அமைச்சராக இருக்கும் ராமசந்திரனின் இலாகாவும் மாற்றப்படவுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, ராமசந்திரனுக்கு, சுற்றுலாத்துறை வழங்கப்பட வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.

அமைச்சர் மெய்யநாதன்
அமைச்சர் மெய்யநாதன்

சுற்றுலாத்துறை அமைச்சராக இருக்கும் மதிவேந்தன் வனத்துறைக்கு மாற்றப்படலாம். தற்போது அமைச்சர் மெய்யநாதன் கையில் இருக்கும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறைதான் உதயநிதிக்கு வழங்கப்படவுள்ளது என்கிறார்கள் கட்சி தலைமை வட்டாரத்தில்.

நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனிடமிருக்கும் மனிதவள மேலாண்மைத்துறை அல்லது அமைச்சர் சி.வி. கணேசன் வசமிருக்கும் திறன் மேம்பாட்டுத் துறை, மெய்யநாதனுக்கு வழங்கப்பட வாய்ப்பு இருக்கிறது.

அமைச்சர் முத்துசாமி
அமைச்சர் முத்துசாமி

அமைச்சர் பெரியசாமி போலவே, தனக்கு துறையை மாற்றித் தர வேண்டும் என பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருக்கும் ராஜகண்ணப்பன் விருப்பம் தெரிவித்திருக்கிறார். அமைச்சர்கள் முத்துசாமி, காந்தி ஆகியோரும் அவரவர் துறைகளில் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். 'ஒரே நாளில் அனைத்து மாற்றங்களையும் கொண்டு வந்துவிட வேண்டாம்' என்று தி.மு.க தலைமை கருதுவதால், அதற்கான வாய்ப்பு குறைவு என்கிறார்கள்.