Published:Updated:

மோடி ஆட்சியில் மக்களின் வாழ்வாதாரம் மோசமடைந்துள்ளதா? `CVoter' கருத்து கணிப்பு சொல்வது என்ன?

மோடி பிரதமராக பதவியேற்றபின் நாட்டில் ஏற்பட்ட பணவீக்கத்தைக் கண்டுகொள்ளவில்லை, இதனால் சாமானிய மக்களின் வாழ்க்கைத் தரம் பாதிக்கப்பட்டுள்ளதாக `சி- வோட்டர் ' நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

மோடி ஆட்சியில் மக்களின் வாழ்வாதாரம் மோசமடைந்துள்ளதா? `CVoter' கருத்து கணிப்பு சொல்வது என்ன?

மோடி பிரதமராக பதவியேற்றபின் நாட்டில் ஏற்பட்ட பணவீக்கத்தைக் கண்டுகொள்ளவில்லை, இதனால் சாமானிய மக்களின் வாழ்க்கைத் தரம் பாதிக்கப்பட்டுள்ளதாக `சி- வோட்டர் ' நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

Published:Updated:

மோடி பிரதமராக பதவியேற்றபின் நாட்டில் ஏற்பட்ட பணவீக்கத்தைக் கண்டுகொள்ளவில்லை, இதனால் சாமானிய மக்களின் வாழ்க்கை தரம் பாதிக்கப்பட்டுள்ளதாக 'சி-  வோட்டர் ' நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் தெரிவித்துள்ளது.

கிட்டத்தட்ட 3,000 பேர் கலந்துகொண்ட இந்தக் கருத்து கணிப்பில், பொருளாதார நடவடிக்கைகள், சாமானிய மக்களின் வாழ்க்கைத்தரம், மாத வருமானத்திற்கான வரிவிலக்கு போன்ற கேள்விகள் கேட்கப்பட்டது.

நாட்டின் பணவீக்கம் குறித்த கேள்விக்கு, மோடி பதவியேற்றபின்  பணவீக்கம் கண்டுகொள்ளப்படவில்லை எனவும், அதனால் விலைவாசி அதிகரித்துள்ளது என்று 62.4% மக்களும், மோடியின் ஆட்சியில்  விலையேற்றம் சரி செய்யப்பட்டுள்ளதென்று 27.5% மக்களும், மீதமுள்ள நபர்கள் மாற்றமில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

Prime Minister Narendra Modi
Prime Minister Narendra Modi
Jeff J Mitchell/Pool Photo via AP

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நாட்டின் பொருளாதார நடவடிக்கைகள் குறித்த கேள்விக்கு,  அரசின் செயல்பாடுகள் எதிர்பார்த்ததைவிட மோசமடைந்துள்ளது என்று 38% மக்களும், எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ததாக 36.4 % மக்களும், எதிர்பார்த்ததைவிட சிறப்பாக அரசின் நடவடிக்கைகள் இருந்தது என்று 25 சதவிகிதத்துக்கும் அதிகமானோர் தெரிவித்துள்ளனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கடந்த ஓராண்டில் சாமானிய மக்களின் வாழ்க்கைத்தரம் எப்படி இருந்தது என்ற கேள்விக்கு, சாமானிய மக்களின் வாழ்க்கை தரம் மோசமடைந்துள்ளதாக 42.4% மக்களும், பெரியதாக மாற்றமில்லையென 32.8% மக்களும், மக்களின் வாழ்க்கை தரம் வெகுவாக முன்னேறியுள்ளது என 24.8% மக்களும் கூறியுள்ளனர்.

அடுத்த ஆண்டில் மக்களின் வாழ்க்கைத் தரம் எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு, 37.7 % மக்கள் முன்னேற்றமடையலாம்  எனவும், 31.3 % பேர்  மோசமாகலாம் என்றும்,  31% பேர் பெரிய மாற்றங்கள் ஏதும் இருக்காது என்றும் கூறியுள்ளனர்.

PM Modi
PM Modi

ஒரு லட்சம் ரூபாய்வரை  சம்பாதிக்கும் நான்கு பேர் கொண்ட குடும்பத்தினரின் மாத வருமானத்திற்கு,  வரி விலக்கு அளிக்கப்பட வேண்டுமா, வேண்டாமா என்ற கேள்விக்கு 83.3 % பேர் வரி விலக்கு அளிக்கப்பட வேண்டும் எனவும், 16.7 % பேர் வரி  விலக்கு வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

நாட்டின் பணவீக்கம் மற்றும் பொருளாதாரம் குறித்த ஒன்றிய அரசின் ஆட்சியில் உங்களுடைய கருத்து என்ன என்று சொல்லுங்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism