Published:Updated:

``வசந்தகுமார் படத்தை எடுங்க..!" - சத்தியமூர்த்தி பவனில் கலாட்டா - என்ன நடந்தது?!

சத்தியமூர்த்தி பவன் - காங்கிரஸ்

சட்டமேதை அம்பேத்கர், மறைந்த காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் ஆகியோரின் பிறந்தநாள் விழாவில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளிடையே சலசலப்பு ஏற்பட்டதால் கலகலத்துப்போயிருக்கிறது சத்தியமூர்த்தி பவன்.

``வசந்தகுமார் படத்தை எடுங்க..!" - சத்தியமூர்த்தி பவனில் கலாட்டா - என்ன நடந்தது?!

சட்டமேதை அம்பேத்கர், மறைந்த காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் ஆகியோரின் பிறந்தநாள் விழாவில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளிடையே சலசலப்பு ஏற்பட்டதால் கலகலத்துப்போயிருக்கிறது சத்தியமூர்த்தி பவன்.

Published:Updated:
சத்தியமூர்த்தி பவன் - காங்கிரஸ்

வெடித்த வார்த்தைப் போர்:

அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி, ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 14-ம் தேதி சத்தியமூர்த்தி பவனில் விழா கொண்டாடப்படுவது வழக்கம். மறைந்த காங்கிரஸ் எம்.பி வசந்தகுமாருக்கும் அன்றுதான் பிறந்தநாள் என்பதால், கடந்த இரண்டு வருடங்களாக அம்பேத்கர் விழாவோடு வசந்தகுமாரின் படத்துக்கும் பூத்தூவி மரியாதை செய்யப்பட்டுவருகிறது. அந்த வகையில், நேற்று நடைபெற்ற விழா நிகழ்ச்சியில் கட்சியின் சட்டமன்றத் தலைவர் செல்வப்பெருந்தகைக்கும், கட்சியின் சீனியரான ரூபி.மனோகரனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கலாட்டா வரை சென்றதாகச் சொல்கிறார்கள் கதர் நிர்வாகிகள்.

சத்தியமூர்த்தி பவன்
சத்தியமூர்த்தி பவன்

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் மாநில நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். ``அண்ணல் அம்பேத்கர் படத்துடன், வசந்தகுமார் படமும் விழா நிகழ்ச்சியில் வைக்கப்பட்டிருந்ததை செல்வப்பெருந்தகை விரும்பவில்லை. `அம்பேத்கரும், வசந்தகுமாரும் ஒன்றா... எப்படி வசந்தகுமார் படத்தை இங்கே வைக்கலாம்... இதனால்தான் காங்கிரஸ் கட்சியிலிருந்து பட்டியலினத்தவர்கள் வெளியே சென்றுகொண்டிருக்கிறார்கள். பட்டியலினச் சமூக மக்களுக்குக் கட்சியில் உரிய மரியாதை வழங்கப்படுவதில்லை. வசந்தகுமார் படத்தை எடுங்கள்' என்று கொந்தளித்தார். கடந்த இரண்டு வருடங்களாக, அண்ணல் அம்பேத்கருடன் வசந்தகுமாருக்கும் சேர்த்தே சத்யமூர்த்திபவனில் மரியாதை செய்யப்பட்டுவரும் நிலையில், திடீரென சமூகரீதியிலான பிளவு வார்த்தைகளை செல்வப்பெருந்தகை அள்ளி வீசியதை நிர்வாகிகள் யாரும் எதிர்பார்க்கவில்லை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சமாதானம் செய்த சீனியர்கள்:

அதனால் டென்ஷனான ரூபி.மனோகரன், `இத்தனை வருசமா யாரும் இது மாதிரி பேசியதில்லை. பாகுபாடும் பார்த்தது இல்லை. இந்த காங்கிரஸ் கட்சிக்கு நாடார் சமூகத்திலிருந்து எத்தனையோ தலைவர்கள் தங்களுடைய சொத்துகளையெல்லாம் கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள். அம்பேத்கர் படத்துடன் வசந்தகுமார் படம் இடம்பெறக் கூடாது என்று நீங்கள் நினைத்திருந்தால்... அதை முன்கூட்டியே கட்சித் தலைமையிடம் சொல்லியிருக்க வேண்டும். கடைசி நிமிடத்தில் வந்து படத்தை எடுக்கச் சொன்னால் அதைச் செய்ய முடியாது' என்று கட் அண்ட் ரைட்டாகச் சொல்லிவிட்டார். `படத்தை எடுக்கவில்லையென்றால் நான் விழாவில் கலந்துகொள்ள மாட்டேன்’ என்று சொல்லி செல்வப்பெருந்தகை அங்கிருந்து கிளம்ப முற்பட்டார்.

அம்பேத்கர் பிறந்தநாள் விழா
அம்பேத்கர் பிறந்தநாள் விழா

`நீங்கள் இல்லையென்றால் இந்த விழாவை எப்படி நடத்துவது என்று எங்களுக்குத் தெரியாதா?’ என்று மனோ செல்வராஜ் கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து, இருவருக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. திருநாவுக்கரசர் உள்ளிட்ட சீனியர்கள் தலையிட்டு சமாதானம் செய்த பின்னர்தான் சூழ்நிலை சாந்தமானது. பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்த யாரையும் காங்கிரஸ் கட்சி புறம் தள்ளவில்லை. சமீபத்தில் நடந்த உட்கட்சித் தேர்தலில்கூட இளைஞர் காங்கிரஸ் தலைவராக லெனின் பிரசாத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒவ்வொரு சமூகத்துக்கும் உரிய பிரதிநிதித்துவம் அளிக்கும் கட்சியாகத்தான் காங்கிரஸ் செயல்படுகிறது. இந்தச் சுழலில், செல்வப்பெருந்தகை ஏன் கோபப்பட்டார் என்பது புரியவில்லை" என்றனர் அந்த சீனியர் நிர்வாகிகள்.

இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் கேட்க செல்வப்பெருந்தகையைத் தொடர்புகொண்டோம். நமது அழைப்பை அவர் ஏற்கவில்லை. அவர் தரப்பு விளக்கத்தைக் கூறும் பட்சத்தில் அதை உரிய பரிசீலனைக்குப் பின்னர் பதிவிடத் தயாராக உள்ளோம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism