Published:Updated:

நீட் விலக்குக்காக ஒன்றுசேர்ந்த கட்சிகள்; அமித் ஷா உடனான சந்திப்பில் நடந்தது என்ன?!

உள்துறை அமைச்சர் அமித் ஷா

நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிப்பது தொடர்பாகத் தமிழக கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்தனர்.

நீட் விலக்குக்காக ஒன்றுசேர்ந்த கட்சிகள்; அமித் ஷா உடனான சந்திப்பில் நடந்தது என்ன?!

நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிப்பது தொடர்பாகத் தமிழக கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்தனர்.

Published:Updated:
உள்துறை அமைச்சர் அமித் ஷா

தமிழகத்துக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிப்பது தொடர்பாகத் தொடர்ந்து பல்வேறு கோரிக்கைகள் எழுந்த வண்ணம் இருக்கின்றன. தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையிலும், `நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு பெற நடவடிக்கை எடுக்கப்படும்' என்று கூறப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து, தமிழக சட்டமன்றத்தில் நீட் தேர்வில் விலக்கு பெறுவதற்காகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அந்த தீர்மானம் ஒப்புதலைப் பெற ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. ஆனால், தமிழக அரசின் தீர்மானத்தை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டது.

டி.ஆர்.பாலு
டி.ஆர்.பாலு

இந்த விவகாரம் தொடர்பாகத் தமிழகத்தைச் சேர்ந்த ஏழு கட்சிகளின் உறுப்பினர்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்திக்க அனுமதி கோரியிருந்தனர். முதல் இரண்டு முறையும் கடைசி நேரத்தில் அனுமதி தற்காலிகமாக மறுக்கப்பட்ட நிலையில், மூன்றாவது முறையும் அமித் ஷாவைச் சந்திக்க அனுமதி தற்காலிகமாக மறுக்கப்பட்டது. இது தொடர்பாகப் பேசிய டி.ஆர்.பாலு, ``அரசியல் காரணங்களுக்காகத்தான் உள்துறை அமைச்சர் அமித் ஷா எங்களைச் சந்திக்க மறுக்கிறார் என்று நினைக்கிறேன். ஆளுநர் தமிழகத்துக்குத் தொடர்ந்து துரோகம் இழைத்துவருகிறார். நீட் தேர்வு விலக்கு அளிப்பது தொடர்பான மசோதா நிலுவையில் இருப்பதற்கு, தமிழக ஆளுநர்தான் பொறுப்பு. இதற்காக ஆளுநர் பதவி விலக வேண்டும்" என்று காட்டமாகப் பேசியிருந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த நிலையில், நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு பெறுவது தொடர்பாகத் தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தி.மு.க, அ.தி.மு.க, பா.ஜ.க உள்ளிட்ட 13 கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர். நீட் தேர்வு ரத்து தொடர்பாக தி.மு.க எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் அ.தி.மு.க துணை நிற்கும் என்று அந்தக் கட்சி சார்பில் கூறப்பட்டது. மேலும், தமிழக பா.ஜ.க-வைத் தவிர்த்து மற்ற அனைத்து கட்சிகளும் நீட் தேர்வு ரத்து பெற ஆதரவு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அனைத்துக் கட்சி கூட்டம்
அனைத்துக் கட்சி கூட்டம்

இந்த நிலையில், கடந்த ஜனவரி 17-ம் தேதி, டி.ஆர்.பாலு, வைகோ உள்ளிட்ட தமிழக எம்.பிக்கள் குழுவை உள்துறை அமைச்சர் அமித் ஷா சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, அந்தக் குழு சார்பில் தமிழகத்துக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிப்பது தொடர்பாக மனு ஒன்று வழங்கப்பட்டது. மேலும், அமித் ஷாவிடம் தமிழகத்துக்கு நீட் தேர்வில் விலக்கு வழங்குவது தொடர்பாக விரிவாகப் பேச்சுவார்த்தையும் நடைபெற்றது. மனுவை வாங்கிய உள்துறை அமைச்சர் இவர்கள் பேசியதை மட்டும் விவரமாகக் கேட்டுக்கொண்டார் என்றும், விலக்கு வழங்குவது தொடர்பாக எந்த உறுதியும் தரவில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உள்துறை அமைச்சரைச் சந்தித்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த டி.ஆர்.பாலு, ``நீட் தேர்வு விலக்கு தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் படி நீட் தேர்விலிருந்து விலக்கு வழங்கும்படி மனுவை வழங்கியுள்ளோம். கடந்த 3.3.2007-ம் ஆண்டு குடியரசுத் தலைவர் நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளித்து ஒப்புதல் வழங்கியதைச் சுட்டிக்காட்டியுள்ளோம். அதேபோல, தற்போது தமிழகத்துக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு வழங்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம்" என்று பேசினார்.

உள்துறை அமைச்சர் அமித் ஷா
உள்துறை அமைச்சர் அமித் ஷா

தொடர்ந்து பேசியவர், `` இந்த விவகாரம் குறித்து கல்வி மற்றும் சுகாதார அமைச்சர்களுடன் கலந்தாலோசனை செய்து உடனடியாக முடிவெடுத்து, என்ன முடிவு செய்யப்பட்டது என்பதைத் தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் தெரிவிப்பதாக உள்துறை அமைச்சர் கூறியுள்ளார்" என்றார். இதற்கு முன்பாக சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டது தொடர்பாகச் செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, ``ஏன் சந்திக்க முடியவில்லை என்பதை தொலைப்பேசியில் அழைத்துச் சொல்லியிருக்கிறார். சந்திக்க முடியாததற்கு எந்த உள்நோக்கமும் கிடையாது. வேலைப்பளு காரணமாகவே இந்த சந்திப்பு தள்ளிப் போடப்பட்டிருக்கிறது" என்று தெரிவித்தார்.

உள்துறை அமைச்சரைக் கடந்த முறை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்ட போது டி.ஆர்.பாலு பேசும்போது, ``அரசியல் காரணங்களுக்காகத்தான் உள்துறை அமைச்சர் அமித் ஷா எங்களைச் சந்திக்க மறுக்கிறார் என்று நினைக்கிறேன்" என்று கூறியிருந்தார். அதற்கு அடுத்த சில தினங்களிலேயே இந்த சந்திப்புக்கு அனுமதி கிடைத்தது. தற்போது இந்த சந்திப்புக்கு பின்னர், `எந்த உள்நோக்கமும் இல்லை வேலைப்பளுதான் காரணம்' என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism