Published:Updated:

சி.ஏ.ஏ – என்.ஆர்.சி – என்.பி.ஆர் – இந்தியக் குடிமக்களைப் பாதிக்குமா? #DoubtOfCommonMan

CAA-NRC-NPR
News
CAA-NRC-NPR

இந்தியாவில் வசிக்கும் மக்கள், தாங்கள் இந்தியக் குடிமக்கள்தான் என நிரூபிக்கும் சுமையை அவர்கள் மீது இந்த மூன்று சட்டத்திருத்தங்களும் ஏற்றியுள்ளன.

விகடனின் #DoubtOfCommonMan ஃபேஸ்புக் பக்கத்தில், ``CAA, NPR, NRC சட்டத்தால் இந்தியக் குடிமக்களுக்குப் பாதிப்பு உண்டா. விளக்கமாகச் சொல்லுங்கள்!" என்ற கேள்வியை எழுப்பியிருந்தார், சோமசுந்தரம் என்னும் வாசகர். அந்தக் கேள்வியின் அடிப்படையில் எழுதப்பட்ட கட்டுரை இது.

குடியுரிமைத் திருத்தச் சட்டம் - தேசிய குடிமக்கள் பதிவேடு - தேசிய மக்கள்தொகை பதிவேடு (CAA-NRC-NPR)... மக்கள் தொகை தொடர்பாக, மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் இந்த மூன்று சட்டத்திருத்தங்கள் தலைநகர் டெல்லி தொடங்கி ஒட்டுமொத்த தேசத்தையும் போராட்டத்தில் தள்ளியிருக்கிறது.

குடியுரிமை திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அடுத்த தினம் டெல்லி ஷஹீன்பாக்கில் தொடங்கிய போராட்டத்தின் தொடர்ச்சியாக சென்னை, மும்பை எனப் பல இடங்களில் மக்கள் உள்ளிருப்புப் போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். இந்தச் சட்டத்திருத்தங்கள் உண்மையில் யாரையெல்லாம் பாதிக்கும்? இந்தியக் குடிமக்களைப் பாதிக்குமா? நிரூபணத்துக்கான ஆவணங்கள் எவை?

பெயர் வெளியிட விரும்பாத சட்ட வல்லுநர் ஒருவர் தெளிவுபடுத்துகிறார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
CAA Protests
CAA Protests

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

``குடியுரிமைச் சட்டம், தேசியக் குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகைப் பதிவேடு ஆகிய மூன்றும் இந்த நாட்டின் குடிமக்கள் யார் யார் என்பதை மறுகணக்கீடு செய்யும் சட்டத்திருத்தங்கள். இதற்காக மக்கள் அரசிடம் தரவேண்டிய ஆவணங்கள் எனக் குறிப்பிட்டு எதுவும் இதுவரை வரையறுக்கப்படவில்லை. குடியுரிமைச் சட்டம் என்று மட்டும் தனித்துப் பார்த்தால் அது நேரடியாக இந்தியக் குடிமக்களைப் பாதிக்காது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், ஸ்ரீலங்கா, மியான்மர் போன்ற நாடுகளில் இருக்கும் இந்துகள், பௌத்தர்கள், கிறிஸ்தவர்கள் அந்த நாட்டில் ஒடுக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டு இந்தியாவில் குடிபெயர்ந்திருக்கும் நிலையில் அவர்களுக்கான குடியுரிமை நிரந்தரப்படுத்தப்படும்.

#DoubtOfACommonMan
#DoubtOfACommonMan

இவர்களைத் தவிர மேற்கண்ட நாடுகளை பூர்வீகமாகக் கொண்டு இந்தியாவுக்கு வந்த அல்லது வரும் இஸ்லாமியர்கள், ஈழ மற்றும் ரோஹிங்கியா அகதிகள் ஆகியோர் குடிமக்களாகக் கருதப்படாமல் வெளியேற்றப்படுவார்கள். ஸ்ரீலங்காவோ அல்லது பாகிஸ்தானோ அவர்கள் எங்கிருந்து குடிபெயர்ந்தாலும் அவர்களை மதத்தின் பெயரால் அடையாளம் கண்டு இந்தியக் குடிமக்களாக ஏற்றுக்கொள்வதும் மற்றவர்களை வெளியேற்றுவதும் அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 14 க்கு எதிரானது.

குடியுரிமை சட்டத் திருத்த எதிர்ப்புப் போராட்டம்
குடியுரிமை சட்டத் திருத்த எதிர்ப்புப் போராட்டம்

இந்தக் குடியுரிமைச் சட்டத்திருத்தங்களால் இந்தியக் குடிமக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லையென்றாலும் தேசியக் குடிமக்கள் பதிவேட்டினாலும் தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டினாலும் (NRC and NPR) இந்தியக் குடிமக்களுக்கு ஆபத்து இருக்கிறது. மக்கள்தொகைப் பதிவேடு ஏற்கெனவே 2010-ல் செயல்படுத்தப்பட்டது என்றாலும் குடியுரிமைச் சட்டத்திருத்தத்தின்கீழ் மக்கள்தொகை மறுக்கணக்கீடு செய்யப்படும்போது பிரச்னை ஏற்படும். தற்போதைய மக்கள்தொகைப் பதிவேடு நமது பெற்றோர் மற்றும் அவர்களது பெற்றோர் உயிருடன் இருக்கும் நிலையில் அவர்களுடைய பிறந்த தேதியை ஆவணமாகக் கேட்கிறது. ஆனால், நமக்கு முந்தைய தலைமுறையில் பலருக்கு அவர்களுடைய பிறந்த தேதி தொடர்பான எவ்வித ஆவணமும் கிடையாது. அதனால், அவர்கள் தேசியக் குடிமக்கள் பதிவேட்டின் கீழ் குடிமக்களாகக் கருதப்பட மாட்டார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அவர்கள் மட்டுமல்லாமல் பழங்குடியினர்கள், மாற்றுப்பாலினத்தவர்கள், வறுமைக்கோட்டுக்குக்கீழ் உள்ள பலர் எனப் பெரும்பாலான மக்கள் இதனால் பாதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது. அசாமில் இதுவரை நடந்துள்ள தேசியக் குடிமக்கள் பதிவேட்டுக்கான கணக்கெடுப்பில் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை போன்றவை ஆதாரமாகக் கேட்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுபோன்ற பெரும்பாலான ஆவணங்கள் நமது மக்களில் பலருக்குக் கிடையாது. இப்படி இந்தியாவில் வசிக்கும் மக்களைத் தாங்கள் இந்தியக் குடிமக்கள்தான் என நிரூபிக்கும் சுமையை அவர்கள்மீது இந்த மூன்று சட்டத்திருத்தங்களும் ஏற்றியுள்ளன. இன்னார் இந்தியப் பிரஜை என்றும் இந்தியப் பிரஜை இல்லையென்றும் அரசு வரையறுக்க முயற்சி செய்கிறது. இவை இரண்டுமே அரசியலமைப்புக்கு எதிரானது” என்கிறார்.

இதேமாதிரி உங்களுக்குத் தோணும் கேள்விகள், சந்தேகங்களைக் கீழே பதிவு செய்யுங்க!