Published:Updated:

`பிரதமர் வேறு... மோடி வேறு’ - திமுக-வின் அரசியல் நிலைப்பாடு எத்தகையது?

ஸ்டாலின் - மோடி
News
ஸ்டாலின் - மோடி

பிரதமர் மோடியின் வருகை குறித்து தி.மு.க-வின் தற்போதைய நிலைப்பாடு சமூக வலைதளத்திலும், கூட்டணிக் கட்சிகளுக்கிடையேயும் கடும் விமர்சனத்தை எழுப்பியிருக்கிறது. இதன் பின்னணியில் இருக்கும் அரசியல் காரணம் என்ன?

தமிழ்நாட்டில் புதிதாகத் தொடங்கியுள்ள 11 மருத்துவக் கல்லூரிகளைத் திறந்துவைக்க ஜனவரி 12-ம் தேதி தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி. 2018-க்குப் பிறகு பிரதமர் மோடி எப்போது தமிழ்நாடு வந்தாலும் `#GoBackModi’ எனச் சமூக வலைதளத்தில் டிரெண்ட் செய்துவந்தனர். ஆனால், தற்போது `மோடி தமிழ்நாட்டின் விருந்தினர்’ எனவும், `இந்தத்துவாதான் எதிரி... மோடி அல்ல’ எனவும் தி.மு.க-வினர் பேசிவருகிறார்கள். இதன் ஒரு பகுதியாக, ``மக்கள் நலத் திட்டங்களைத் தொடங்கிவைக்கவே பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு வருகிறார். அதனால் அவரது வருகையை தி.மு.க அரசு எதிர்க்கவில்லை. அரசு என்பது வேறு. கருத்தியல் என்பது வேறு. கடந்த அ.தி.மு.க ஆட்சியில் மக்கள் நலத் திட்டங்களைத் தொடங்கிவைக்க வந்த பிரதமர் மோடியை தி.மு.க எதிர்த்தது குறித்து கேள்வி எழுப்புகிறார்கள். பா.ஜ.க கொண்டுவந்த வேளாண் சட்டங்கள், குடியுரிமைச் சட்டங்கள் என மக்களுக்கு எதிரான அனைத்துச் சட்டங்களையும் ஆதரித்து நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க வாக்களித்தது. ஆனால், தி.மு.க அப்போதிலிருந்தே வேளாண் சட்டங்கள், குடியுரிமைச் சட்டங்கள் என்று மக்கள் நலன்களுக்கு எதிரான பா.ஜ.க அரசின் சட்டங்களைக் கடுமையாக எதிர்த்துவருகிறது. எனவே, இந்த விஷயத்தில் அ.தி.மு.க-வுடன் தி.மு.க-வை ஒப்பிட வேண்டாம்.” என்று தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பேசியிருக்கிறார்.

Twitter Trending #GoBackModi
Twitter Trending #GoBackModi

பிரதமர் மோடியின் வருகை குறித்து தி.மு.க-வின் தற்போதைய நிலைப்பாடு சமூக வலைதளத்திலும், கூட்டணிக் கட்சிகளுக்கிடையேயும் கடும் விமர்சனத்தை எழுப்பியிருக்கிறது. பிரதமர் மோடியின் வருகை குறித்துக் கருத்து கூறும் தி.மு.க-வின் அரசியல் நிலைப்பாடு குறித்து விமர்சனம் எழுந்துள்ள நிலையில், இரு கட்சிகளின் அரசியல் தலைவர்களிடம் பேசினோம்...

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

கண்ணதாசன், தி.மு.க செய்தித் தொடர்பு இணைச் செயலாளர்

``தி.மு.க எதிர்க்கட்சியாக இருந்தபோது பா.ஜ.க அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகள் அனைத்துக்கும் எதிராகப் போராட்டம் நடத்தியது. அந்த நேரத்தில் ஆட்சியிலிருந்த அ.தி.மு.க அரசு பா.ஜ.க-வின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு ஆதரவாக இருந்ததாலேயே அப்போது தமிழ்நாடு வந்த பிரதமர் மோடிக்கு தி.மு.க எதிர்ப்பு தெரிவித்தது. அரசியல்ரீதியில் மோடியின் கொள்கைக்கு எதிராகத்தான் எப்போதும் இருப்போம். ஆனால், பிரதமராக நலத்திட்டங்களைத் தொடங்கிவைக்க வரும்போது விருந்தினராக அவரை வரவேற்பதுதான் தமிழ்நாட்டின் மரபு. அ.தி.மு.க அரசு ஆட்சியிலிருந்தபோதும் பிரதமர் மோடி தமிழ்நாட்டின் விருந்தினராகத்தான் வந்தார் என்றாலும், அப்போது அ.தி.மு.க அரசுடன் இணைந்து தமிழர் நலனுக்கு விரோதமான நடவடிக்கைகளில் ஒன்றிய அரசு ஈடுபட்டது. ஆனால், தி.மு.க ஆட்சியில் அதற்கு வாய்ப்பில்லை என்பதால் மோடியை எதிர்க்கவேண்டிய தேவை இல்லை. அரசியல் என்பது வேறு, அரசு என்பது வேறு என்பதில் தி.மு.க தெளிவாக இருக்கிறது. தி.மு.க எப்போதும் கருத்தியலில் தெளிவாக இருக்கிறோம். அ.தி.மு.க-தான் எப்போதும் இரட்டை நிலைப்பாட்டோடு இருப்பார்களே தவிர, தி.மு.க-மீது அந்தக் குற்றச்சாட்டை வைக்கவே முடியாது. மாநில அரசாக, ஒன்றிய அரசிடம் உரிமைகளைக் கேட்டுப் பெறுவதற்கும், அவர்களிடம் கடந்த ஆட்சியாளர்கள்போலப் பிச்சை எடுப்பதற்கும் வேறுபாடு இருக்கிறது. இப்போதும் ஜி.எஸ்.டி., வெள்ள நிவாரண நிதியில் மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடந்துகொள்ளும்போது நாங்கள் ஒன்றிய அரசைக் கடுமையாக விமர்சித்துத்தான்வருகிறோம்.

கண்ணதாசன் - தி.மு.க
கண்ணதாசன் - தி.மு.க

தி.மு.க ஏன் மோடியை எதிர்த்தது என்பதற்கும், ஏன் வரவேற்கிறது என்பதற்கும் இருக்கும் இப்படியான நூலிழை வேறுபாட்டை உணர்ந்துகொண்டால் இந்த விமர்சனங்களுக்கு வாய்ப்பே இருக்காது. அதற்கெல்லாம் ஓர் அரசியல் தெளிவு வேண்டும்.”

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பேராசிரியர் இராம ஸ்ரீனிவாசன், பா.ஜ.க மாநிலப் பொதுச்செயலாளர்

``இப்போது தி.மு.க-வுக்கு இருக்கும் அரசியல் முதிர்ச்சியை நான் பாராட்டுகிறேன். தி.மு.க பயந்துவிட்டது, கோழைத்தனத்தைக் காட்டுகிறார்கள், மத்திய அரசுக்கு ஜால்ரா அடிக்கிறார்கள் என யாராவது சொன்னால் நான் அந்த விமர்சனங்களை நிச்சயம் ஏற்றுக்கொள்ள மாட்டேன். ஆனால், எதிர்க்கட்சியாக தி.மு.க இருந்தபோது நடந்துகொண்டதை இப்போதும் நான் கடுமையாக எதிர்க்கிறேன். 130 கோடி மக்களுக்கான பிரதமர் மோடியைப் பார்த்து #GoBackModi எனச் சொன்னதை இப்போதும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. மத்தியில் ஆளும் பா.ஜ.க-வைப் பொறுத்தவரை மாநில அரசுடன் நல்லுறவுடன் இருப்போம் என்பதில் மிகத் தெளிவாக இருக்கிறோம். கேரளா, மேற்கு வங்கம், தமிழ்நாடு என அனைத்து மாநில அரசுகளுடனும் மத்திய அரசாக எங்களுக்கு நல்லுறவு இருக்கிறது. ஆனால், கம்யூனிஸ்ட், திரிணாமுல், தி.மு.க கட்சிகளுடன் எங்களுக்கு எந்த உறவும் இல்லை. அது அரசியல்ரீதியிலான எதிர்நிலை. அரசாங்கரீதியில் எதிரியாக இருக்க முடியாது. இதைப் புரிந்துகொள்ளாதவர்கள்தான் தற்போது தி.மு.க-வை விமர்சித்துவருகிறார்கள். ஆனால், எங்களுக்கு இந்தத் தெளிவு நன்றாகவே இருக்கிறது. மோடி வரட்டும்... மாநில அரசு அவரைச் சிறப்பாக வரவேற்கட்டும்.

இராம ஶ்ரீநிவாசன் பாஜக
இராம ஶ்ரீநிவாசன் பாஜக

மோடி எட்டு கோடி தமிழ் மக்களின் இதயத்தில் இடம்பெற்றிருக்கும் ஒரு தலைவர். அவரளவுக்குத் தமிழையும், தமிழர்களின் பெருமையையும் உலகமெல்லாம் எடுத்துச் சென்றவர் எவருமில்லை. தி.மு.க தமிழைத் தமிழ்நாட்டுக்குள் மட்டுமே பேசுகிறது. பிரதமர் மோடி பொங்கலையொட்டி தமிழ்நாட்டுக்கு வரவிருப்பதை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்” என்றார்