Published:Updated:

`5 நாள் பயணம்... மோடி, அமித் ஷாவுடன் சந்திப்பு' - எடப்பாடி பழனிசாமி டெல்லி பயணத்தின் பின்னணி என்ன?

எடப்பாடி பழனிசாமி டெல்லியில்

அவருக்கு நெருக்கமானவர்களுக்குத் தொடர்புடைய இடங்களில் அடுத்தடுத்து ரெய்டு நடந்துவரும் சூழலில் இந்தப் பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று என்கிறார்கள் இலைக்கட்சி வட்டாரத்தில்.

`5 நாள் பயணம்... மோடி, அமித் ஷாவுடன் சந்திப்பு' - எடப்பாடி பழனிசாமி டெல்லி பயணத்தின் பின்னணி என்ன?

அவருக்கு நெருக்கமானவர்களுக்குத் தொடர்புடைய இடங்களில் அடுத்தடுத்து ரெய்டு நடந்துவரும் சூழலில் இந்தப் பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று என்கிறார்கள் இலைக்கட்சி வட்டாரத்தில்.

Published:Updated:
எடப்பாடி பழனிசாமி டெல்லியில்

அதிமுக-வின் இடைக்காலப் பொதுச்செயலாளராகத் தேர்வானதற்குப் பிறகு முதன்முறையாக டெல்லிக்குச் சென்றிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பிரிவு உபசார விழாவில் கலந்துகொள்வதற்காகவே அவர் டெல்லி சென்றிருப்பதாகச் சொல்லப்பட்டாலும், பல்வேறு அரசியல் கணக்குகளோடுதான் சென்றிருக்கிறார் என்கிறார்கள் இலைக்கட்சி வட்டாரத்தில்..!

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

தலைமைக் கழகம் சக்சஸ்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பல்வேறு களேபரங்களுக்குப் பிறகு, கடந்த ஜூலை 11-ம் தேதி வானகரம் ஶ்ரீவாரு திருமண மண்டபத்தில் நடந்த சிறப்புப் பொதுக்குழுக் கூட்டத்தில் அதிமுக-வின் இடைக்காலப் பொதுச்செயலாளராகத் தேர்தெடுக்கப்பட்டார் எடப்பாடி பழனிசாமி. அதேநேரத்தில், சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமைக் கழகத்துக்கு ஆதரவாளர்கள் புடைசூழ வந்தார் பன்னீர்செல்வம். அங்கே ஏற்கெனவே தயாராக இருந்த எடப்பாடி தரப்புக்கும், பன்னீர் தரப்புக்கும் இடையே பயங்கர மோதல் வெடித்தது. அதிமுக தலைமைக் கழக அலுவலகத்துக்கும் சீல் வைக்கப்பட்டது. அதை எதிர்த்து, ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் தனித்தனியாக நீதிமன்றத்துக்குச் சென்றனர். சீலை அகற்றி தங்களிடம் சாவியை ஒப்படைக்கவேண்டும் என்று இரு தரப்பும் கோரிக்கை வைத்தன.

ஆனால், வழக்கை விசாரித்த நீதிபதி, இ.பி.எஸ் தரப்பிடம் சாவியை ஒப்படைக்க உத்தரவிட்டார். இது ஒருபுறமிருக்க, ஓ.பி.எஸ்-ஸைக் கட்சியைவிட்டு நீக்கியதைத் தொடர்ந்து அவர் வகித்துவந்த பொருளாளர் பதவி திண்டுக்கல் சீனிவாசனுக்கு அளிக்கப்பட்டது. இதை எதிர்த்தும், அதிமுக-வின் வங்கிக் கணக்குகளைக் கையாள தன்னைத் தவிர வேறு யாரையும் அனுமதிக்கக் கூடாது என்றும் அதிமுக கட்சியின் கணக்குகள் உள்ள வங்கிகளுக்குக் கடிதம் எழுதினார் பன்னீர்செல்வம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அடுத்தடுத்த ரெய்டுகள்!

ஆனால், வங்கிகள் அந்தக் கடிதத்தை ஏற்றுக்கொள்ளாமல், திண்டுக்கல் சீனிவாசன் வங்கிக் கணக்குகளைக் கையாள அனுமதியளித்துவிட்டது. அதேவேளையில், பொதுக்குழுவில் எடப்பாடியை பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுத்தது, ஓ.பி.எஸ் உள்ளிட்டவர்களைக் கட்சியைவிட்டு நீக்கியது உள்ளிட்ட தீர்மானங்கள் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பப்பட்டு இன்னும் அங்கீகாரம் அளிக்கப்படாமல் இருக்கின்றன. அதுமட்டுமல்லாமல், எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் வருமான வரித்துறை ரெய்டு நடத்துவதும், குட்கா வழக்கில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், பி.வி.ரமணா உள்ளிட்ட பலரை விசாரிக்க தமிழ்நாடு அரசுக்கு சி.பி.ஐ கடிதம் எழுதியிருப்பதும் அதிமுக வட்டாரத்தைக் கலக்கமடையச் செய்திருக்கிறது.

ஓ.பி.எஸ்
ஓ.பி.எஸ்

இந்த நிலையில்தான், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பிரிவு உபசார விழாவில் கலந்துகொள்வதற்காக எடப்பாடி பழனிசாமி டெல்லிக்குச் செல்லவிருப்பதாக அறிவிக்கப்பட்டது. திட்டமிட்டபடியே டெல்லிக்குச் சென்றிருக்கிறார். ஆனால், ``இந்தப் பயணம் வெறுமனே ராம்நாத் கோவிந்தின் பிரிவு உபசார விழா, திரௌபதி முர்முவின் பதவியேற்பு விழாவுக்காக மட்டுமல்ல, இந்தப் பயணத்தில் பல்வேறு சந்திப்புகள் இருக்கின்றன. இன்னும் சொல்லப்போனால், அதிமுக-வின் எதிர்காலமே இருக்கிறது'' என்கிறார்கள் இலைக்கட்சி வட்டாரத்தில்.

இது குறித்து நம்மிடம் பேசிய முன்னணி நிர்வாகிகள்,

``சட்டரீதியாக இருந்த தடைகள் அனைத்தையும் பல்வேறு வகையில் சமாளித்து இடைக்காலப் பொதுச்செயலாளராகவும் ஆகிவிட்டார் எடப்பாடியார். அதேபோல், சீல் வைக்கப்பட்ட அதிமுக அலுவலகமும் அவரின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது. வங்கிக் கணக்குகளைக் கையாளும் அனுமதியையும் வாங்கியாகிவிட்டது. ஆனால், பொதுக்குழுத் தீர்மானங்களை தேர்தல் ஆணையம் அங்கீகரித்தால்தான் எடுத்த எல்லா முயற்சிகளுக்கும் ஒரு பலன் இருக்கும். தேர்தல் ஆணையம், ஓ.பி.எஸ்-ஸின் கோரிக்கைளைக் கணக்கில்கொண்டு தாமதப்படுத்தினாலோ, இல்லை வேண்டுமென்றே இழுத்தடித்தாலோ அவ்வளவுதான். டெல்லி பாஜக மேலிடம் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அதுமட்டுமல்ல, வேலுமணிக்கு நெருக்கமான சந்திரசேகர் வீட்டில் ரெய்டு, எடப்பாடிக்கு நெருக்கமான செய்யாதுரை உள்ளிட்ட பலரின் வீடுகளில் ரெய்டு, முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர் மற்றும் பி.வி.ரமணாவை விசாரிக்க சி.பி.ஐ கடிதம் என அடுத்தடுத்து டெல்லியிலிருந்து நெருக்கடிகள் வந்துகொண்டேயிருக்கின்றன. இதெல்லாம் பன்னீரைப்போல தங்களின் கட்டுக்குள் முழுமையாக இருக்க வேண்டும் என்பதற்கான பாஜக-வின் சமிக்ஞையாகவே நாங்கள் பார்க்கிறோம்.

எடப்பாடி பழனிசாமி - மோடி
எடப்பாடி பழனிசாமி - மோடி

காரணம், ஒற்றைத் தலைமை விவகாரம் கட்சிக்குள் வெடித்த பிறகு, டெல்லிக்குப் போன பன்னீரும், தொடர்ச்சியாக டெல்லியிலேயே இருக்கும் அவரின் மகன் ஓ.பி.ரவிந்தீரநாத் குமாரும் அடுக்கடுக்கான பல புகார்களை எடப்பாடியார்மீது வாசித்திருக்கிறார்கள். நாங்கள் காங்கிரஸுடன் நெருக்கமாக இருப்பதாகவும் ஒரு தகவலை பாஸ் செய்திருக்கிறார்கள். அந்தக் கோபத்தில்தான் பல்வேறு நெருக்கடிகள் கொடுக்கப்படுகின்றன. இன்னும் முன்னணி நிர்வாகிகளின் வீடுகளில் அடுத்தடுத்து ரெய்டுகள் நடக்கவிருப்பதாகவும் தகவல்கள் வந்திருக்கின்றன. அதனால்தான் இந்த முறை நேரடியாகத் தானே களத்தில் இறங்கியிருக்கிறார் எடப்பாடியார். ஐந்து நாள்கள் வரை அவர் அங்கே தங்கியிருக்க முடிவு செய்திருக்கிறார். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரைச் சந்திக்கவும் நேரம் கேட்டிருக்கிறார். கண்டிப்பாகச் சந்தித்துவிட்டுதான் தமிழ்நாடு திரும்புவார். இதுவரைக்கும் எடுத்த எந்தக் காரியத்திலும் எடப்பாடியார் கோட்டைவிட்டதே இல்லை. அதேபோல இந்த விஷயத்திலும் வெற்றியோடுதான் திரும்புவார்'' என்கிறார்கள் நம்பிக்கையோடு.