Published:Updated:

`அம்மா உணவகம் முதல் லியோனி நியமனம் வரை!' ஓ.பி.எஸ்-ஸின் அறிக்கைகளுக்குப் பின்னாலுள்ள அரசியல் என்ன?

ஓ.பி.எஸ் ( ஈ.ஜெ.நந்தகுமார் )

ஓ.பி.எஸ்-ஸின் இந்தத் தனி அறிக்கை யுத்தம் எப்போது தொடங்கியது, அதற்குப் பின்னாலுள்ள அரசியல் என்ன?

`அம்மா உணவகம் முதல் லியோனி நியமனம் வரை!' ஓ.பி.எஸ்-ஸின் அறிக்கைகளுக்குப் பின்னாலுள்ள அரசியல் என்ன?

ஓ.பி.எஸ்-ஸின் இந்தத் தனி அறிக்கை யுத்தம் எப்போது தொடங்கியது, அதற்குப் பின்னாலுள்ள அரசியல் என்ன?

Published:Updated:
ஓ.பி.எஸ் ( ஈ.ஜெ.நந்தகுமார் )
``பா.ஜ.க மீதும், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் மீதும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் முழு நம்பிக்கை வைத்துள்ளது. தேசநலன் கருதியும், தமிழ்நாட்டின் நலன் கருதியும் அ.இ.அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி தொடரும். இதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை.''

``பா.ஜ.க உடனான கூட்டணியே, அ.தி.மு.க தோல்விக்குக் காரணம்'' என முன்னாள் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் விழுப்புரம் மாவட்டம் வானூரில் நடந்த, அ.தி.மு.க நிர்வாகிகள் கூட்டத்தில் பேச, உடனடியாக ஓ.பி.எஸ்-ஸிடமிருந்து வந்த அறிக்கை இது. ``இந்த உடனடி அறிக்கையை வெறும் பா.ஜ.க ஆதரவு மனப்பான்மையில் வெளியானது என்று மட்டும் பார்க்க முடியாது. அதற்கும் மேலாக அ.தி.மு.க என்கிற கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருப்பது தான்தான். கூட்டணிக் கட்சிகள் குறித்து அதிகாரபூர்வமாக எந்தக் கருத்தையும் தெரிவிக்கும் உரிமையும் தனக்குத்தான் இருக்கிறது என்பதை வெளிப்படுத்தவும்தான்'' என்கிறார்கள் அவரின் ஆதரவாளர்கள். ஓ.பி.எஸ்-ஸின் இந்தத் தனி அறிக்கை யுத்தம் எப்போது தொடங்கியது?

வானூர் ஆலோசனைக் கூட்டத்தில் சி.வி.சண்முகம்.
வானூர் ஆலோசனைக் கூட்டத்தில் சி.வி.சண்முகம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தேர்தல் முடிவுகள் வெளியான மறுநாள், சென்னை ஜெ.ஜெ.நகரில் இருக்கும் அம்மா உணவகத்தைத் தாக்கியதைக் கண்டித்து வெளியான அறிக்கைதான் ஓ.பி.எஸ் பெயரில் வெளியான முதல் தனி அறிக்கை. அதைத் தொடர்ந்து, கொரோனா நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த, தனியார் ஆம்புலன்ஸ் கட்டணங்களை முறைப்படுத்த, கறுப்புப் பூஞ்சை சிகிச்சைகளை விரைவுபடுத்த, கொரோனாவால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு உதவிகள் செய்ய, மேகதாது அணை விவகாரத்தில் சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்க என தினம் தினம் அவரிடமிருந்து அறிக்கைகளாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள லியோனி நியமனத்தை மறுபரிசீலனை செய்யுமாறு தமிழக முதல்வருக்குக் கோரிக்கையை முன்வைத்து இன்றும் ஓர் அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். தேர்தலுக்குப் பிறகாக ஆரம்பித்த ஓ.பி.எஸ்-ஸின் இந்தத் தனி அறிக்கைகள் எடப்பாடி பழனிசாமி, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்வான பிறகு வேகமெடுத்தது. ஓ.பி.எஸ்-ஸின் இந்த அறிக்கைகளுக்குப் பின்னாலுள்ள அரசியல் குறித்து நம்மிடம் பேசிய ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள்,

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி தேர்தெடுக்கப்பட்ட நாள் முதலாகவே ஓ.பி.எஸ்., அவர்மீது வருத்தத்தில்தான் இருந்தார். ஆனால் தேர்தல் நேரத்தில், ஏதாவது செய்ய அது தொண்டர்களிடமும், மக்கள் மத்தியிலும் அவப்பெயரை ஏற்படுத்திவிடும். அது தேர்தல் முடிவுகளில் பாதிப்பை ஏற்படுத்தும். ஒருவேளை தேர்தலில் தோற்றுப்போனால் முழுப்பழியையும் நம்மீது போட்டுவிடுவார்கள் என்பதற்காகவே அமைதியாக இருந்தார். தேர்தல் முடிந்த மறுநாளிலிருந்து அவரின் தனி அறிக்கைகள் வெளிவர ஆரம்பித்தன. தொடர்ந்து அறிக்கைகளையும் வெளியிட்டுவருகிறார். அது இனிமேலும் தொடரும். எங்களின் ஆட்சி இருக்கும்போது வேண்டுமானால், எடப்பாடி முதல்வராக, ஓ.பி.எஸ் துணை முதல்வராக இருந்திருக்கலாம். ஆனால், இப்போது ஆட்சி இல்லை. கட்சியில் மூத்த பொறுப்பில் இருப்பவர் ஓ.பி.எஸ்தான். அதனால், அவருக்கு அறிக்கை வெளியிடும் முழு அதிகாரமும் இருக்கிறது. அதை வெளிப்படுத்தும் விதத்தில்தான் தொடர்ந்து தனி அறிக்கைகளாக வெளியிட்டுவருகிறார்.

ஓ.பி.எஸ் - இ.பி.எஸ்
ஓ.பி.எஸ் - இ.பி.எஸ்

அதுமட்டுமல்ல, எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும் சூழ்ச்சி செய்து கைப்பற்றிவிட்டார்கள். நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம் முழுவதும் எங்கள் கட்சி தோற்றபோதும், தேனியில் ஓ.பி.எஸ் மகன் வெற்றிபெற்றார். பா.ஜ.க கூட்டணியிலுள்ள அனைத்துப் பெரிய கட்சிகளுக்கும் மத்தியில் அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அ.திமு.க சார்பில் ஒருவர்கூட இல்லை. மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தின்போது, எடப்பாடி அதற்கான முயற்சிகளில்கூட இறங்கவில்லை. ஓ.பி.எஸ் மகன் அமைச்சரானால் எங்கே தன்னைவிட கட்சியில் ஓ.பி.எஸ் ஆதிக்கம் அதிகமாகிவிடுமோ என்கிற பயத்தில் தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டுக்கொண்டே வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எதிர்க்கட்சித் தலைவராக, எடப்பாடி பழனிசாமி இருந்தாலும் தமிழகத்தின் முதன்மையான பிரச்னைகளைச் சுட்டிக்காட்டி தினசரி ஆக்கபூர்வமான அறிக்கைகளை வெளியிடுவதன் மூலம், ஓ.பி.எஸ்-தான் மக்கள் மனதில் நிலைத்து நிற்கிறார். அதுமட்டுமல்ல, கட்சியைக் காப்பாற்றும் வேலையையும் ஓ.பி.எஸ்-தான் செய்கிறார். சி.வி.சண்முகம் கட்சிக்குக் குந்தகம் ஏற்படும் வகையில் பேசியதும், உடனடியாக அறிக்கைவிட்டு சலசலப்பில்லாமல் பார்த்துக்கொண்டதும் ஓ.பி.எஸ்-தான். பிறகுதான், எடப்பாடி பழனிசாமி தொலைபேசியில் அழைத்து இரண்டு பேரும் சேர்ந்தே அறிக்கை வெளியிடலாம் என வேண்டுகோள் விடுக்க, இரண்டு பேரின் பெயரிலும் ஒரு அறிக்கை வெளியானது. என்னதான் ஓ.பி.எஸ்-ஸை இவர்கள் ஓரங்கட்ட நினைத்தாலும் அவரின் கையெழுத்தில்லாமல் கட்சி நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது. முன்பு, பலமுறை விட்டுக் கொடுத்துவிட்டார். ஆனால், இனிமேல் அவர் விடும் எண்ணத்தில் இல்லை'' என்கிறார்கள் அதிரடியாக.

ஓ.பி.ரவீந்திரநாத்
ஓ.பி.ரவீந்திரநாத்

அ.தி.மு.க நிர்வாகிகள் இது குறித்துப் பேசும்போது, ``ஓ.பி.எஸ் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர் அல்ல. அவரின் ஆதரவாளர்கள் என அவருடன் இருக்கும் சிலர்தான் அவரை வற்புறுத்தி இது போன்ற அறிக்கைகளை வெளியிட வைக்கின்றனர். இதனால் அவருக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை'' என்கிறார்கள் தடாலடியாக.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism