Published:Updated:

ஆளுநர் ஒப்புதல்: ஆன்லைன் சூதாட்டத்துக்குத் தடை! - மீறி விளையாடினால் என்ன தண்டனை?

ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் - தமிழ்நாடு அரசு

ஒரு வழியாக தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கியிருக்கிறார். சட்டத்தை மீறி இந்த விளையாட்டுகளை விளையாடினால் என்னென்ன தண்டனைகள் விதிக்கப்படும்..?

Published:Updated:

ஆளுநர் ஒப்புதல்: ஆன்லைன் சூதாட்டத்துக்குத் தடை! - மீறி விளையாடினால் என்ன தண்டனை?

ஒரு வழியாக தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கியிருக்கிறார். சட்டத்தை மீறி இந்த விளையாட்டுகளை விளையாடினால் என்னென்ன தண்டனைகள் விதிக்கப்படும்..?

ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் - தமிழ்நாடு அரசு

ஒரு வழியாக தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கியிருக்கிறார். ஆன்லைன் சூதாட்டத்துக்கு அதிகாரபூர்வமாகத் தடைவிதிக்கப்பட்டிருக்கும் சூழ்நிலையில், சட்டத்தை ஒழுங்குபடுத்தும் வழிமுறைகள், சட்டத்தை மீறி இந்த விளையாட்டுகளை விளையாடினால் என்னென்ன தண்டனைகள் விதிக்கப்படும் உள்ளிட்டவற்றைச் சுருக்கமாகப் பார்ப்போம்.

ஆன்லைன் சூதாட்டம்: ஆளுநர் ரவி, முதல்வர் ஸ்டாலின்
ஆன்லைன் சூதாட்டம்: ஆளுநர் ரவி, முதல்வர் ஸ்டாலின்

அமைக்கப்படும் புதிய ஆணையம்:

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளைக் கட்டுப்படுத்துவதற்காக மாநில அரசால் `தமிழ்நாடு ஆன்லைன் விளையாட்டு ஆணையம்' என்கிற புதிய ஆணையம் அமைக்கப்படும். இந்த ஆன்லைன் விளையாட்டு ஆணையத்துக்கு ஓய்வுபெற்ற, தலைமைச் செயலாளர் பதவிக்கும் குறையாத பதவி வகித்தவர் தலைவராக இருப்பார். மேலும், ஓய்வுபெற்ற காவல்துறை ஐ.ஜி., தகவல் தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் பெற்ற ஒருவர், ஆன்லைன் விளையாட்டில் நிபுணத்துவம் பெற்றவர் உள்ளிட்டோர் உறுப்பினர்களாக இருப்பர். மேலும், இந்த ஆணையம் ஆன்லைன் விளையாட்டுகள் விளையாடுபவர்களைக் கண்காணிக்கும். அது குறித்தான தரவுகளைப் பராமரிக்கும். அதேபோல, ஆன்லைன் விளையாட்டை வழங்குபவர்களையும் கண்காணிக்கும்; அவர்களைப் பற்றிய தரவுகளையும் ஆணையம் பராமரிக்கும்.

மேலும், ஆன்லைன் விளையாட்டுகளின் தன்மைப்படி அவற்றை தமிழ்நாடு ஆன்லைன் விளையாட்டு ஆணையம் வரிசைப்படுத்தும். உள்ளூர் ஆன்லைன் விளையாட்டு அளிப்பவர்களுக்குப் பதிவுச்சான்றிதழ் வழங்கும். புதிய வழிகாட்டு முறைகளில் ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும்.

ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதா
ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதா

தண்டனைகள்:

பணம், பரிசு அல்லது வேறு சலுகைகளை வெல்லக்கூடிய வாய்ப்பிருக்கும் அனைத்து ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை விளையாடுவோருக்கு மூன்று மாதங்கள் சிறை அல்லது ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும். அல்லது அபராதத்துடன் சிறைத் தண்டனையும் சேர்த்து விதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் தொடர்பான விளம்பரங்களை வெளியிடுவோருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை அல்லது ரூ.5,00,000 அபராதம் விதிக்கப்படும். அல்லது அபராதம், சிறைத் தண்டனை இரண்டுமே சேர்த்து விதிக்கப்படும்.

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை நடத்தும் நிறுவனம் அல்லது நபருக்கு, பணம் அல்லது வேறு சலுகைகளை வெல்லக்கூடிய வாய்ப்பிருக்கும் அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளை வழங்கும் நிறுவனங்கள் அல்லது நபர்களுக்கு, மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது ரூ.10,00,000 அபராதம் விதிக்கப்படும். அல்லது சிறைத் தண்டனை, அபராதம் இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் தொடர்பாக விளம்பரம் செய்து தண்டனை விதிக்கப்பட்டு மீண்டும் அதே தவற்றைச் செய்தால், ஓராண்டு முதல் மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது ரூ.10,00,000 அபராதம் விதிக்கப்படும் எனச் சொல்லப்படுகிறது.

ஆன்லைன் சூதாட்டம்
ஆன்லைன் சூதாட்டம்

மேலும், ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் அல்லது பணம் முதலான இதர சலுகைகளை வெல்லும் வாய்ப்புடைய அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளையும் வழங்கியவர் ஒரு முறை தண்டிக்கப்பட்டு, மீண்டும் தவறிழைத்தால், அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.20,00,000 அபராதமும் விதிக்கப்படும். அதாவது இரண்டாம் முறையாகத் தவறிழைக்கும் நபர்கள் அல்லது நிறுவனங்களுக்கு ஏற்கெனவே உள்ள தண்டனையைவிட இரட்டிப்பாகத் தண்டனை விதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.