Published:Updated:

தனியாக அதிரடி காட்டும் எடப்பாடி... பாஜக மேலிட ரியாக்‌ஷன் என்ன?!

எடப்பாடி பழனிசாமி

``பிரதமர் மோடியோ, அமித் ஷாவோ சென்னைக்கு வரும் போதெல்லாம் போய் பார்க்க வேண்டும் என்று அவசியமில்லை” என்று எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பது தான் இப்போது ஹாட் டாப்பிக்காக இருக்கிறது.

தனியாக அதிரடி காட்டும் எடப்பாடி... பாஜக மேலிட ரியாக்‌ஷன் என்ன?!

``பிரதமர் மோடியோ, அமித் ஷாவோ சென்னைக்கு வரும் போதெல்லாம் போய் பார்க்க வேண்டும் என்று அவசியமில்லை” என்று எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பது தான் இப்போது ஹாட் டாப்பிக்காக இருக்கிறது.

Published:Updated:
எடப்பாடி பழனிசாமி

ஒற்றைத் தலைமை விவகாரத்தில் அ.தி.மு.க அலுவலகத்தின் சாவி கையில் கிடைத்தபோதும், அ.தி.மு.க-வின் இடைக்கால பொதுச்செயலாளர் ஆனபோதும், நிம்மதியாக உட்கார கூட முடியாமல் திணறிய எடப்பாடி, ஜூலை மாதம் இறுதியில் டெல்லி பறந்தார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பிரிவு உபசார விழாவைக் காரணமாக வைத்து பிரதமர் மோடி சந்தித்த எடப்பாடிக்கு, கட்சித் தொடர்பாக பேசக்கூட நேரம் கொடுக்கப்படவில்லை என்று அப்போது கூறப்பட்டது. அதேபோல, எதுவாக இருந்தாலும் அமித் ஷா-விடம்தான் பேசுங்கள் என்று பிரதமர் கூறியதாக தகவல் வெளியாகியது.

எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை, மோடி
எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை, மோடி

அதன்படி, அமித் ஷா-வை சந்திக்க எடப்பாடி தரப்பு முயன்றது. பல மணி நேரம் காத்திருந்தும் அமித் ஷா-வை சந்திக்க முடியவில்லை என்று சொல்லப்பட்டது. சந்திப்புக்கு ஏற்பாடு செய்வதாக சொன்ன தமிழக பா.ஜ.க-வின் முக்கிய புள்ளியும் எடப்பாடியின் போனை எடுக்காதததால், கடும் அப்செட்டில், சென்னை திரும்பினார் என்றார்கள். இதையடுத்துதான், தி.மு.க அரசுக்கு எதிராக சில பைல்களோடு, பிரதமர் மோடி, அமித் ஷாவை காண செப்டம்பர் மாதம் இறுதியில் மீண்டும் டெல்லி பறந்தார் எடப்பாடி.

மூன்றுநாள் பயணமாக டெல்லி சென்ற எடப்பாடிக்கு பிரதமர் மோடி சந்திப்புக்கான நேரத்தை ஒதுக்கவில்லை என்று சொல்லப்பட்டது.

அமித் ஷா - எடப்பாடி பழனிசாமி
அமித் ஷா - எடப்பாடி பழனிசாமி

அதேபோல, அமித் ஷா-வும் எந்த உத்தரவாதமும் அளிக்காததால் எடப்பாடி அப்செட்டில் ஒரே நாளில் ஊர் திரும்பினாராம். அதேபோல, ' பிளவுபட்ட அ.தி.மு.க-வால் எந்த லாபமும் இல்லை. எனவே, அடுத்த முறை டெல்லி வரும்போது ' சசிகலா, பன்னீர், நீங்கள் என மூன்றுபேரும் ஒன்றாக வாங்க' என்று அமித்ஷா கூறியிருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்நிலையில்தான், தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள அமித் ஷா செப்டம்பர் 12-ம் தேதி சென்னை வந்திருந்தார். அன்றைய தினம் எடப்பாடி சென்னையிலிருந்தும், அமித் ஷா-வை சந்திக்காமலிருந்தது, கனமழைக்கு இடையேயும், அரசியல் களத்தில் சூட்டைக் கிளப்பி இருக்கிறது.

இதுதொடர்பாக அ.தி.மு.க-வின் முன்னாள் சீனியர் அமைச்சர் ஒருவர் நம்மிடம் பேசுகையில், "தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மிகப்பெரிய கட்சிதான் பா.ஜ.க. அதன்படி, தேர்தல் வெற்றிக்காக கூட்டணி குறித்து பா.ஜ.க-வின் முடிவை அ.தி.மு.க பரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கிறது. ஆனால், தமிழகத்தின் அரசியலைப் பொறுத்தவரை அ.தி.மு.கதான் பெரிய கட்சி. கட்சிக்குள் எடப்பாடி எடுக்கும் முடிவுதான் இறுதியானது. கூட்டணிக் கட்சி என்ற முறையில் சில பரிந்துரைகளை வழங்கலாமே தவிர, ஆதிக்கம் செலுத்த முயல்வது சரியில்லை.

பன்னீர், எடப்பாடி, மோடி
பன்னீர், எடப்பாடி, மோடி

ஒற்றைத் தலைமையை அங்கீகரிக்கும் தேர்தல் ஆணைய முடிவுகள், வழக்கு மற்றும் சில தனிப்பட்ட காரணங்களுக்காகவும் பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவைச் சந்திக்க இருமுறை டெல்லி சென்றார் எடப்பாடி. ஆனால், தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையிலும், கூட்டணியில் உள்ள பெரிய கட்சியின் தலைவர் என்ற முறையிலும் டெல்லி தலைமை எடப்பாடிக்கு உரிய மரியாதை கொடுக்கவில்லை. அதேபோல, கட்சிக்குள் ஆதிக்கம் செலுத்தும் முறையில் டெல்லி தலைமை பேசியதை எடப்பாடி ரசிக்கவில்லை.

இந்நிலையில்தான், தமிழகத்துக்கு மோடி வந்திருந்தார். அவரை சந்திக்க நேரம் கேட்டுக் கிடைக்கவில்லை என்றாலும், பிரதமர் என்ற மரியாதைக்காக மதுரை வரை சென்று பார்த்தோம். ஆனால், அமித் ஷா சந்திக்க வேண்டிய அவசியமே தற்போது ஏற்படவில்லை. இதனால்தான், அமித் ஷாவை சந்திக்கவில்லை. குறிப்பாக, கடந்த இருமுறையும் அமித் ஷா-வை சந்திக்க காத்துக்கிடந்ததை நிர்வாகிகளும் தொண்டர்களும் ரசிக்கவில்லை. எடப்பாடி என்ற ஒற்றைத் தலைமைக்கு இது அழகுமில்லை.

தனி ஒரு சக்தியாக அம்மா தோற்றமளித்தாலும், நிர்வாகிகளின் குரலுக்கு எப்போதும் செவி கொடுப்பார். அதனை பின்பற்றும் விதமாகத்தான் நிருபர்களின் கேள்விக்கு 'அமித்ஷா சந்திக்க வேண்டிய அவசியமில்லை' என்று எடப்பாடி கூறினார். அதேநேரத்தில், கட்சிக்குள் ஆதிக்கம் செலுத்துவதை டெல்லி தலைமை நிறுத்தவேண்டும் என்பதால்தான் அ.தி.மு.க தலைமையில் மெகா கூட்டணி என்று மீண்டும் குரல் கொடுத்திருக்கிறார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

இதற்கான எதிர்வினை பாஜக மேலிடம் நிச்சயம் கொடுக்கும் என்பது எங்களுக்கும் தெரியும். ஆனால், ஆளுமையாகத் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் எடப்பாடி இருப்பதால்தான் இப்படி பேச வேண்டிய அவசியமும் இருக்கிறது" என்றனர் விரிவாக...

எடப்பாடி இந்த டோனை டெல்லி தலைமையிடம் தெரியப்படுத்தி இருக்கிறது தமிழக பா.ஜ.க. ஆனால், இதுகுறித்து எந்த ரியாக்‌ஷனையும் டெல்லி தலைமை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

கரு.நாகராஜன்
கரு.நாகராஜன்

இதுகுறித்து தமிழக பா.ஜ.க துணைத் தலைவர் கரு.நாகராஜனிடம் கேட்டபோது, " அண்ணன் எடப்பாடியின் இந்த கருத்து அமித் ஷாவை சந்திக்க அவருக்கு விருப்பமில்லை என்பதைக் காட்டவில்லை. ஏனென்றால், தேவை ஏற்படும்போதெல்லாம் அமித் ஷாவை டெல்லியிலேயே போய் சந்தித்துப் பேசி இருக்கிறாரே... இந்த முறை பிசி ஷெட்டியூல்தான் அமித் ஷா சென்னைக்கு வந்திருந்தார். இதனால், யாரையுமே அவரால் சந்திக்க முடியவில்லை. எடப்பாடியின் கருத்தை அரசியல் காரணங்களுக்காகச் சிலர் திரித்துக் கூறுகிறார்கள்" என்றார்.