Published:Updated:

அழுத்தம் தருகிறதா திமுக..? ஆளுநர் ரவியின் திடீர் டெல்லி விசிட்டின் பின்னணி என்ன?

முதல்வர் ஸ்டாலின் - ஆளுநர் ரவி

முதல்வர் மு.க.ஸ்டாலினின் துபாய் மற்றும் டெல்லி பயணங்கள் முடிந்துள்ள நிலையில், ஆளுநர் ரவி டெல்லிக்குச் சென்றுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த திடீர் விசிட்டின் பின்னணி என்ன?

அழுத்தம் தருகிறதா திமுக..? ஆளுநர் ரவியின் திடீர் டெல்லி விசிட்டின் பின்னணி என்ன?

முதல்வர் மு.க.ஸ்டாலினின் துபாய் மற்றும் டெல்லி பயணங்கள் முடிந்துள்ள நிலையில், ஆளுநர் ரவி டெல்லிக்குச் சென்றுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த திடீர் விசிட்டின் பின்னணி என்ன?

Published:Updated:
முதல்வர் ஸ்டாலின் - ஆளுநர் ரவி

தமிழக ஆளுநர் ரவி ஏப்ரல் 7-ம் தேதி டெல்லிக்குச் சென்றிருக்கிறார். வழக்கமான பணிகளுக்காகத்தான் சென்றுள்ளார் என ராஜ்பவன் தரப்பிலிருந்து சொல்லப்படுகிறது. ஆனால், தமிழக முதல்வர் ஸ்டாலினின் துபாய் பயணம், டெல்லியில் கட்சி கட்டடத் திறப்பு விழா, அதையொட்டி பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கியத் தலைவர்களைச் சந்தித்தது, நீட் விலக்கு மசோதா, கூட்டுறவு திருத்த மசோதா உள்ளிட்ட தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்கள் நிலுவையில் உள்ள நிலையில், ஆளுநர் டெல்லி சென்றுள்ளதால் அவரின் இந்த டெல்லி விசிட் முக்கியக் கவனம் பெற்றிருக்கிறது.

அதோடு பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, பொன்.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோரும் டெல்லியில் முகாமிட்டிருப்பதாலும், ஆளுநர் டெல்லி சென்றதும் எழுவர் விடுதலை தொடர்பான ஆவணங்கள் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தமிழ்நாடு அரசு அறிவித்ததும் அரசியல் களத்தில் கவனத்துக்குள்ளாகியிருக்கிறது. மேலும், தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவியைத் திரும்பப் பெற வேண்டும் என நாடாளுமன்றத்தில் தி.மு.க உறுப்பினர்கள் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்தனர். இந்தத் தீர்மானத்தின்மீது விவாதம் நடத்த அனுமதி கிடைக்காததை அடுத்து ‘ஒன்றிய அரசே, ஒன்றிய அரசே, தமிழக ஆளுநரைத் திரும்பப் பெறு’ எனத் மத்திய அரசுக்கு எதிராகக் கோஷமிட்டு அமளியில் ஈடுபட்டனர்.

டி.ஆர்.பாலு
டி.ஆர்.பாலு

செப்டம்பர் மாதம் தமிழ்நாட்டின் ஆளுநராகப் பொறுப்பேற்றது முதல் ஆளுநருக்கும் தமிழ்நாடு அரசுக்கும் மிகப்பெரிய மோதல் போக்கு நீடித்து வருகிறது. ஆளுநர் எப்போது டெல்லி சென்றாலும் தமிழ்நாடு அரசியலில் பரபரப்பு தொற்றிக்கொள்கிறது. அதேபோல இந்தப் பயணம் குறித்தும் பல்வேறு விஷயங்கள் பேசப்படுகின்றன. அது குறித்து விசாரணையில் இறங்கினோம்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தமிழக அரசின் முக்கியக் கோரிக்கையான நீட் தேர்விலிருந்து விலக்கு வேண்டும் என்ற கோரிக்கை மீது முடிவெடுக்காததோடு அதைத் திருப்பியும் அனுப்பினார் ஆளுநர் ரவி. இதன்பிறகு நீட் விலக்கு கோரும் மசோதாவைச் சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றி ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பியது தமிழ்நாடு அரசு. அடுத்து, எழுவர் விடுதலை தொடர்பாக ஆளுநரே முடிவெடுக்கலாம் என்ற உச்ச நீதிமன்றம் அறிவுறுத்திய பின்னரும் ஆளுநர் ஏன் காலம் தாழ்த்துகிறார் என்ற விமர்சனங்களும் தொடர்ந்துகொண்டிருக்கின்றன. கூட்டுறவுச் சங்க திருத்த மசோதாவைப் பொறுத்தவரை, அரசு ஊழியர்களான கூட்டுறவுச் சங்க பதிவாளர்கள் விதிகளைமீறி செயல்படுவதாகக் கூறப்படும் சங்கங்களின் செயல்பாட்டை இடைநிறுத்தி வைக்கவும் விசாரணையின்றிக் கலைக்கவும் உத்தரவிடும் அதிகாரத்தை இந்த கூட்டுறவுச் சங்க திருத்த மசோதா வழங்குகிறது.

அதேபோல, பாரதியார் பல்கலைக்கழக திருத்த மசோதாவில், பல்கலைக்கழக சிண்டிகேட் நிர்வாகக் குழுவில் புதிய உறுப்பினர்களைச் சேர்க்க ஏதுவாக வகை செய்யப்பட்டுள்ளது.

அந்த குழுவில் தனியார் மற்றும் சுயநிதி கல்லூரிகளின் பிரதிநிதிகளையும் உறுப்பினராக்கும் வகையில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. போதுமான தகுதியோ அனுபவமோ இல்லாதவர்கள் இதன் மூலம் சிண்டிகேட் குழுவில் இடம்பெற வாய்ப்புள்ளது என இவை இரண்டையும் ஆளுநர் ஆட்சேபித்துள்ளார்.

ஆளுநர் ரவி
ஆளுநர் ரவி

மேலும் இந்த இரண்டு மசோதாக்கள் மீதும் தமிழ்நாடு அரசிடமிருந்து உரிய பதில்கள் கிடைத்தால் மட்டுமே அவை குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்குச் சமர்ப்பிக்கப்படும் என்றும் ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

குடியரசு தின விழா வாழ்த்து அறிக்கையில் ‘நீட் தேர்வுக்குப் பிறகு தான் அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பில் அதிகளவு சேர்கிறார்கள்’ எனப் பேசியிருந்தார் ஆளுநர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ‘கொக்கென்று நினைத்தாரோ தமிழக ஆளுநர் ரவி’ என்ற தலைப்பில் முரசொலியில் தலையங்கம் எழுதினார்கள். “பிரதமர் மோடியின் எல்லோரையும் உள்ளடக்கிய வளர்ச்சி மாடல் என்பது உணவு, உறைவிடம், சுகாதாரம், கல்வி, மின்சாரம், சமையல் எரிவாயு, ஆரோக்கியமான குடிமக்களுக்கான எல்லா அடிப்படைத் தேவைகள் ஆகியவற்றை எல்லோருக்கும் பாகுபாடின்றி அளிப்பது. இதுமட்டுமல்லாமல், மாநில ரீதியாகச் சிந்திக்காமல், இந்தியா என்ற உணர்வுடன் சிந்தித்துச் செயல்பட வேண்டும். மாநில அளவிலான வளர்ச்சி சமமான வளர்ச்சியை உருவாக்காது. மாநில அளவிலான வளர்ச்சி நம் நாட்டுக்குச் சரியானதாக இருக்காது. அதனால் ஏற்றத்தாழ்வு உண்டாகும்” எனக் கால்நடைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பேசியது தி.மு.க சொல்லும் திராவிட மாடலுக்கு எதிரான பதிலடி என்று சொல்லப்பட்டது. இதற்கும் ‘ஆளுநர் இனியும் இழுக்க வேண்டாம்’ என்ற தலைப்பில் ‘திராவிட மாடல் என ஒன்று உருவாவதென்பது பா.ஜ.கவுக்கு சிக்கலாக இருக்கிறது. அந்தப் பின்னணியில்தான் ஆளுநர் பேசுகிறார். அவர் 'நீட்' மசோதாவுக்கு மட்டுமல்ல, பல்வேறு விஷயங்களில் அப்படித்தான் செயல்படுகிறார். தமிழ்நாடு அரசு ஒட்டுமொத்தமாகவே செயல்படாமல் இருக்க வேண்டும். அதுதான் அவரது விருப்பம்’ எனத் தலையங்கம் எழுதப்பட்டது. இதற்குச் சில நாள்களுக்கு முன் ஆளுநரைச் சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘The Dravidian Model’ என்ற நூலைப் பரிசாக அளித்தார்.

முதல்வர் - ஆளுநர்
முதல்வர் - ஆளுநர்

“மாண்புமிகு தமிழ்நாடு ஆளுந‌ர்,திரு.ஆர்.என்.ரவி, அவர்கள் சென்னை, ஸ்ரீ ராம் சமாஜத்தில் ராம நவமி விழாவைத் தொடங்கி வைத்து இன்றைய மிக முக்கிய காலத்தில் நம் நாடு அனைவரின் வளர்ச்சியையும் உள்ளடக்கி ராமராஜ்யத்தை நோக்கி முன்னேறி வருவதை விளக்கினார்.” என ஆளுநர் மாளிகையின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தது கடும் விமர்சனத்துக்குள்ளான. ஊட்டியில் உள்ள ராஜ்பவனுக்கு தன் மகளின் திருமணத்தையொட்டி வெள்ளை நிறம் பூசியதும் சர்ச்சையானது. தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்றது முதல் மாநில அரசுக்கும் அவருக்குமான மோதல்களுக்கு இவையெல்லாம் சில உதாரணங்கள்.

“பல்கலைக்கழகங்களுக்கு மத்திய அரசின் தொகுப்பிலிருந்து வரும் நிதி எவ்வளவு, அதை எப்படிப் பயன்படுத்துகிறார்கள் என ஒவ்வொரு பல்கலைக்கழகப் பதிவாளரிடமும் அறிக்கை கேட்டிருக்கிறாராம் பிரசன்ன ராமசாமி. மாதவரம் கால்நடை பல்கலைக்கழகத்தில் நடந்திருக்கும் ஒரு முறைகேடு தொடர்பாகவும் அண்ணா பல்கலைக்கழக கல்வி மேம்பாடு தொடர்பாகவும் ஆளுநருக்கு சில கோப்புகள் வந்திருக்கிறது. இது தொடர்பாகவும் பிரசன்ன ராமசாமி விசாரணையைத் தொடங்கியிருக்கிறார். ‘உயர் கல்வித்துறையைப் பிரித்து ஆராய ஆரம்பித்துவிட்டார் ஆளுநர். அதேசமயம் தமிழக அமைச்சர்கள் சிலருக்கு அமலாக்கத்துறையிலிருந்து நோட்டீஸ் வந்திருக்கிறது. மாநில கல்விக் கொள்கையை அமைப்பது தொடர்பாகத் தமிழ்நாடு அரசு ஒரு குழுவை அமைத்திருக்கிறது. என இவையெல்லாவற்றையும் டெல்லியுடன் கலந்து பேசத்தான் ஆளுநர் டெல்லி சென்றிருக்கிறார்” என்கிறார்கள்.

மேலும், தமிழக அமைச்சர்கள் சிலருக்கு அமலாக்கத்துறையிலிருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பாக விசாரணை நடத்த அனுமதி கோரி டெல்லி மேலிடத்திடம் பேசுவதற்காகவும் ஆளுநர் டெல்லி சென்றுள்ளதாகச் சொல்கிறார்கள். ஆளுநர் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கைச் சந்தித்தவர் இலங்கை, தமிழக மீனவர்கள் விவகாரம் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதித்ததாகவும் சொல்லப்படுகிறது.

பிரதமர் மோடியுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி
பிரதமர் மோடியுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி

தமிழ்நாடு அரசு மீது அ.தி.மு.க., பா.ஜ.க ஆகிய எதிர்க்கட்சிகள் அளித்த புகாரில் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள சட்டம் ஒழுங்குப் பிரச்னைகள் குறித்தும் டெல்லியுடன் கலந்து பேசத்தான் இந்த டெல்லி விசிட் என்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism