Published:Updated:

நிர்மலா சீதாராமன்: ட்விட்டரில் டிரெண்ட் ஆன #ResignNirmala... என்ன காரணம்?

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

திங்கள்கிழமை நாட்டின் ஜி.டி.பி விவரம் வெளியானது. இந்த ஆண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டுக்கான ஜி.டி.பி-யில் 23.9% பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து ட்விட்டரில் #ResignNirmala ஹேஷ்டேக் டிரெண்ட் ஆகிவருகிறது.

கடந்த வாரம், ஜி.எஸ்.டி கவுன்சிலின் 41-வது கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா சீதாராமன், 'கோவிட்-19 நோய்த்தொற்று காரணமாக இந்தியப் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. 'இது கடவுளின் செயல்.’ நடப்பு நிதியாண்டில் அதன் தாக்கத்தை நாம் உணர்வோம்” என்று தெரிவித்திருந்தார்.

`இந்தப் பெருந்தொற்று 'கடவுளின் செயல்' என்றால், பேரிடருக்கு முந்தைய காலங்களில், பொருளாதாரத்தில் நிகழ்ந்த தவறான நிர்வாகத்தை எவ்வாறு விவரிப்பது... கடவுளின் தூதராக நிதியமைச்சர் தயவுசெய்து பதிலளிப்பாரா?’ என காங்கிரஸின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வியெழுப்பியிருக்கிறார்.

இதைத் தொடர்ந்து, நேற்று 2020-21-ம் ஆண்டின் முதல் காலாண்டுக்கான ஜி.டி.பி தரவுகளை, மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. வெளியான தரவுகளின் அடிப்படையில், கடந்த 40 ஆண்டுகளின் இல்லாத அளவுக்கு 23.9 சதவிகிதம் சரிவைச் சந்தித்திருக்கிறது ஜி.டி.பி.

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

இதையடுத்து நிர்மலா சீதாராமன் `இந்தியப் பொருளாதாரம் கடுமையான பாதிக்கப்பட்டுள்ளது. இது கடவுளின் செயல்' என்று கூறியதை விமர்சிக்க ஆரம்பித்ததோடு. #ResignNirmala ஹேஷ்டேக் டிரெண்ட் ஆக்கினார்கள் நெட்டிசன்கள்.

`சுதந்திர இந்திய வரலாற்றில் மிக மோசமான அளவுக்கு ஜி.டி.பி 24 சதவிகிதம் குறைந்திருக்கிறது. துரதிர்ஷ்டவசமாக, அரசாங்கம் எச்சரிக்கைகளைப் புறக்கணித்திருக்கிறது...’ என்று ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு