Published:Updated:

பாஜக: `யாரிடம் பேசி இந்த முடிவை எடுத்தார்கள்?!' - நிர்வாகிகளின் கருத்துக்கு தலைமையின் பதில் என்ன?

மாநிலத் தலைவர் அண்ணாமலை-பாஜக

தலைமையின் இந்த முடிவை ஒரு சில பா.ஜ.க-வினர் வரவேற்றாலும், மாவட்ட அளவில் கடும் அதிருப்திக்கு உள்ளாகியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாஜக: `யாரிடம் பேசி இந்த முடிவை எடுத்தார்கள்?!' - நிர்வாகிகளின் கருத்துக்கு தலைமையின் பதில் என்ன?

தலைமையின் இந்த முடிவை ஒரு சில பா.ஜ.க-வினர் வரவேற்றாலும், மாவட்ட அளவில் கடும் அதிருப்திக்கு உள்ளாகியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Published:Updated:
மாநிலத் தலைவர் அண்ணாமலை-பாஜக
தமிழ்நாட்டில் 2019 நாடாளுமன்றத் தேர்தல் தொடங்கி, கடந்த ஆகஸ்ட்டில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தல்வரை, அ.தி.மு.க-வுடன் இணைந்தே தேர்தலைச் சந்தித்துவந்தது பா.ஜ.க. இந்த நிலையில், நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்தார். தலைமையின் இந்த முடிவை ஒருசில பா.ஜ.க-வினர் வரவேற்றாலும், மாவட்ட அளவில் நிர்வாகிகள் கடும் அதிருப்திக்கு ஆளாகியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் உள்ளிட்ட 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வரும் பிப்ரவரி 19-ம் தேதி நடைபெறவிருக்கிறது. கூட்டணி இல்லாமல் தனித்துப் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சி, மக்கள் நீதி மய்யம், தே.மு.தி.க., நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் ஒவ்வொரு கட்டமாக தங்களின் வேட்பாளர்களை அறிவித்துவருகின்றன.

அண்ணாமலை - பழனிசாமி
அண்ணாமலை - பழனிசாமி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தி.மு.க கூட்டணியில் அங்கம்வகிக்கும் கட்சிகளுடன் மாவட்ட அளவில் பேச்சுவார்த்தை நடைபெற்று ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிவருகின்றன. அ.தி.மு.க - பா.ஜ.க-வுக்கு இடையில் கடந்த சனிக்கிழமை பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், சுமுக முடிவு எட்டப்படாமல் இருந்த நிலையில், தங்களின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு பா.ஜ.க-வுக்கு அதிர்ச்சி கொடுத்தது அ.தி.மு.க. தொடர்ந்து, பா.ஜ.க உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக அந்தக் கட்சியின் தலைவர் அண்ணாமலை அறிவித்தார். தொடர்ந்து, அ.தி.மு.க தங்களின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை உடனடியாக வெளியிட்டது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்ட பா.ஜ.க-வினர் தலைமையின் முடிவை வரவேற்று வெடி வெடித்துக் கொண்டாடியதாகத் தகவல்கள் வெளியாகின. தவிர, சமூக வலைதளங்களிலும் பல பா.ஜ.க நிர்வாகிகள் தலைமையின் முடிவை ஆதரித்து பதிவுகளை வெளியிட்டுவருகின்றனர். ஆனால், மாவட்ட அளவில் பல நிர்வாகிகளோ, ``யாருடன் பேசி இப்படியொரு முடிவை எடுத்தார்கள் என்று தெரியவில்லை. எங்கள் கட்சி மீண்டும் வைரலாவதற்கு மட்டுமே இந்த முடிவு வழிவகுக்கும்'' என வருத்தத்தோடு தங்களின் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்கள்.

அ.தி.மு.க - பா.ஜ.க தலைமை அலுவலகங்கள்
அ.தி.மு.க - பா.ஜ.க தலைமை அலுவலகங்கள்

இது குறித்து தென் மாவட்டத்தைச் சேர்ந்த பா.ஜ.க மாவட்ட நிர்வாகி ஒருவர் நம்மிடம் பேசினார்.

``தலைமையின் முடிவு எங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. எங்களுக்கு மட்டுமல்ல... தமிழகம் முழுவதும் இதே நிலைமைதான். ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒரு நகராட்சியில் 35 தொகுதிகள் இருந்தால், 12 வார்டுகள் கேட்டு ஆறு வார்டுகள் வரை, அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கொடுக்க ஒப்புக்கொண்டார்கள். அதில், பா.ஜ.க இளைஞரணிக்கு இரண்டு வார்டுகள் எனப் பிரித்து எந்த வார்டு யாருக்கு என்பது வரை பேசி வேலைகளையும் பார்த்துவருகிறோம். இந்த நேரத்தில் தனித்துப் போட்டி என்கிற முடிவை எதன் அடிப்படையில் எடுத்தார்கள் என்று தெரியவில்லை. இது குறித்து, மாவட்ட அளவிலான நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஒவ்வொரு நகராட்சி, மாநகராட்சியில் முழுவதுமாக ஆட்களை நிறுத்துவது என்பது சிக்கலான காரியம். தனித்துப் போட்டியிடுவதன் மூலம் பலத்தைத் தெரிந்துகொள்ளலாம் என்கிறார் அண்ணாமலை. இந்த முடிவுகள் நிச்சயமாக கட்சியின் பெயரை டேமேஜ்தான் செய்யும். ஒருசில இடங்களைத் தவிர, பிற இடங்களில் வெல்வது கடினம். அ.தி.மு.க-வுடன் கூட்டணியில் இருந்திருந்தால், ஒவ்வொரு நகரத்திலும் கணிசமான கவுன்சிலர்கள் கிடைத்திருப்பார்கள். ஆனால், கோவை, கன்னியாகுமரி உள்ளிட்ட ஒருசில இடங்களைத் தவிர்த்து அதற்கான வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. ஊரக உள்ளாட்சித் தேர்தலில், கோவையில் ஒரு வார்டில் ஒரேயொரு ஓட்டு வாங்கிய ஒருவரை வைத்து, 'ஒரு ஓட்டு பா.ஜ.க' என்று சமூக வலைதளங்களில் கிண்டல் செய்தார்கள். இப்போது அது மாதிரி பல வார்டுகளில் ரிசல்ட் வரப்போகிறது. அதைவைத்து கட்சியின் பெயரை இன்னும் டேமேஜ் செய்யத்தான் இது பயன்படும்'' என்றார் ஆதங்கமாக.

நாராயணன் திருப்பதி
நாராயணன் திருப்பதி

நிர்வாகிகளின் மனக்குமுறல் குறித்து, பா.ஜ.க-வின் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதியிடம் பேசினோம்.

``பா.ஜ.க-வைப் பொறுத்தவரை பலகட்ட ஆலோசனைக்குப் பிறகுதான் தனித்துப் போட்டி என்கிற முடிவை எடுத்திருக்கிறோம். கடந்த மூன்று ஆண்டுகளாக, தமிழகத்தில் எங்கள் கட்சி மிகப்பெரிய அளவில் வளர்ச்சியடைந்திருக்கிறது. குறிப்பாக சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு பல்வேறு கட்சிகளிலிருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் எங்கள் கட்சியில் இணைந்திருக்கிறார்கள். அண்ணாமலையின் சீரிய தலைமையில் இளைஞர்கள் எங்கள் கட்சியை நோக்கி வந்துகொண்டிருக்கிறார்கள். குறுகிய காலகட்டத்தில் அ.தி.மு.க-வுடன் கூட்டணி ஏற்படுத்த முடியாமல் போய்விட்டது. இருந்தாலும்கூட அனைத்து இடங்களிலும் நாங்கள் நிற்பது நல்ல விஷயம்தான்.

ஒருசில இடங்களில் நிர்வாகிகள் சிலருக்கு வருத்தம் இருந்தாலும், கட்சித் தலைமையின் முடிவுக்குக் கட்டுப்பட்டு சிறப்பான அளவில் போட்டியிடுவார்கள். நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில்கூட ஒருசில இடங்களில் தனித்துப் போட்டியிட்டிருக்கிறோம். உள்ளாட்சித் தேர்தல்களில் இது போன்ற விஷயங்கள் எப்போதும் நடக்கக்கூடியவைதான். எதிரெதிர் துருவங்களைச் சேர்ந்தவர்கள்கூட ஒன்றிணைவார்கள். ஒன்றாக இருப்பவர்கள் தனியாகப் போட்டியிடுவார்கள். தற்போதைய சூழ்நிலையில் வேட்பாளர்களை நிறுத்தக்கூட ஆட்கள் இல்லாமல் பல கட்சிகள் இருக்கும்போது, அனைத்து இடங்களிலும் ஆட்களை நிறுத்தி வாக்குகள் குறைவாக வாங்குவதைப் பற்றி நாங்கள் கவலைப்படத் தேவையில்லை'' என்கிறார் அவர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism